Type Here to Get Search Results !

சர்வதேச பல்லுயிர் தினம் / International Day for Biological Diversity

  • பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கம் ஒரு விதமான வாழ்க்கை முறை வாழ்விடம் உள்ளது.ஒவ்வொன்றும், மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். 
  • நமக்கு தேவையான உணவு மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு பல்லுயிர்களை சார்ந்து தான் இருக்கிறோம்.பல்லுயிர்களுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஐ.நா. சார்பில் மே.22-ம் தேதி சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் தொகுப்பு பல்லுயிர் பரவல் எனப்படுகிறது. உலகில் 17-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பிறகு பூமி மிகப்பெரிய அழிவுகளை சந்தித்து வருகிறது.
  • பல லட்சம் ஹெ க்டேர் பரப்பளவில் உள்ள இயற்கை காடுகளும் சிறு நுண்ணியிர்கள் முதல் பெரிய உயிரினங்கள் வரையிலான வாழ்விட சூழ்களும் அழிக்கப்படுகிறது. மேலும் பருவநிலை மாற்றம் வெப்பமயமாதல் போன்ற வற்றால் இயற்கை பாதிப்பிற்குள்ளாகிறது. 
  • இதன் காரணமாக பல்லுயிரிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. பாதுகாப்பு தேவை.இந்தியாவில் கிழக்கு இமயமலை மேற்கு தொடர்ச்சி மலை ஆகியவற்றில் பலவகையான மருத்துவ குணமிக்க தாவரங்கள மரங்கள் மற்றும் உயிரினங்கள் காணப்படுகின்றன. 
  • இது தவிர ஏராளமான கடல்வாழ் உயிரினங்கம் பலவகையான காடுகளும் உள்ளன. இவற்றில் வாழும் பல வகையான உயிரினங்கள் அழிந்து வருகின்றன. எஞ்சியிருப்பதை பாதுகாத்தல் தான் எதிர்கால உலகம் வாழத்தகுதியாக இருக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel