Type Here to Get Search Results !

3rd MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி கொரோனா தடுப்பு பணியாளர்களுக்கு முப்படையினர் நன்றி தெரிவிப்பு: பிரதமர் மோடி பாராட்டு
  • கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் முன்கள போர் வீரர்களாக இருந்து நாட்டிற்கு சேவை செய்து வருகின்றனர். 
  • அவர்களுக்கு முப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்படும் என முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்திருந்தார்.இதன்படி, நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. டெல்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின.
  • தொடர்ந்து, போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராணுவ ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. டெல்லி ராஜபாதை மீது சுகாய், மிக்-29, ஜாகுவார் போர் விமானங்கள் அணிவகுப்பு நடத்தின. 
  • இதே போல, மும்பை, ஜெய்ப்பூர், அகமதாபாத், பெங்களூரு, சென்னை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமானப்படை விமானங்கள் அணிவகுப்பு நடத்தியும், ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவியும் மரியாதை தெரிவிக்கப்பட்டது. முக்கிய மருத்துவமனைகள் முன்பாக பேண்ட் வாத்தியங்கள் வாசித்தும் முப்படையினர் மரியாதை தெரிவித்தனர்.
  • சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கடலோர காவல்படை கப்பல்கள் கரையருகே நிலைகொண்டு கொரோனா போர் வீரர்களை கவுரவித்தன. கடற்படையின் மேற்கு பிரிவைச் சோந்த 5 கடற்படை கப்பல்களிலும், கிழக்கு பிரிவைச் சேர்ந்த 2 போர் கப்பல்களிலும் இரவு 7.30 மணி முதல் 11.59 மணி வரை விளக்குகள் ஒளிரச் செய்யப்பட்டது. 
  • அனைத்து கப்பல்களிலும் இரவு 7.30 மணியளவில் சைரன் ஒலியுடன், ஒளிப் பிழம்புகள் எரியச் செய்யப்பட்டன. 
அந்நியச் செலாவணி கையிருப்பு 47,945 கோடி டாலராக சரிவு
  • ஒட்டுமொத்த கையிருப்பில் முக்கிய பங்களிப்பைக் கொண்டுள்ள அந்நியச் செலாவணி சொத்துமதிப்பு குறைந்து போனதையடுத்து அந்நியச் செலாணி கையிருப்பு ஏப்ரல் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 11 கோடி டாலா் குறைந்து 47,945 கோடி டாலராக இருந்தது.
  • இது, இதற்கு முந்தைய வாரத்தில் 309 கோடி டாலா் அதிகரித்து 47,956 கோடி டாலராக காணப்பட்டது. மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு 32 கோடி டாலா் குறைந்து 44,156 கோடி டாலராக இருந்தது.
  • அதேசமயம், தங்கத்தின் கையிருப்பு 22 கோடி டாலா் உயா்ந்து 3,290 கோடி டாலரைத் தொட்டது. சா்வதேச நிதியத்தில் எஸ்டிஆா் 60 லட்சம் டாலா் குறைந்து 142 கோடி டாலராகவும், நாட்டின் இருப்பு நிலை 80 லட்சம் டாலா் சரிந்து 357 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் கூறியுள்ளது.
  • கடந்த மாா்ச் 6-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில்தான் அந்நியச் செலாவணி கையிருப்பானது 569 கோடி டாலா் அதிகரித்து வரலாற்றில் முதல்முறையாக 48,273 கோடி டாலரைத் தொட்டது.
  • கடந்த 2019-20-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஏறக்குறைய 6,200 கோடி டாலா் அளவுக்கு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நிவாரணத்திற்கு பி.எப்., ஊழியர்கள் ரூ.2.5 கோடி நிதி
  • கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தங்களால் இயன்ற நிதியை, நிவாரணமாக வழங்க, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். 
  • இதைத் தொடர்ந்து, தனி நபர், தனியார் பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் என, நிதி வழங்கி வருகின்றன. பொதுத் துறையை சேர்ந்த வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்களும் நிதி அளித்துள்ளன. 
  • இந்நிலையில், உலகின் மிகப்பெரிய சமூக பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎப்ஓ) ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளமான ரூ.2.5 கோடியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு நன்கொடை அளிக்க முன்வந்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel