Type Here to Get Search Results !

15th MAY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

விவசாயத்துக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3-ம் கட்ட அறிவிப்பு


  • மூன்றாம்கட்ட அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய நிர்மலா சீதாராமன், " மூன்றாம்கட்ட அறிவிப்புகள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய மீன்வளம், கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி போன்றவை தொடர்புடையது.
  • இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மை மக்கள் விவசாயப் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அனைத்து துன்பங்களையும் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சகித்துக்கொண்டுள்ளனர். விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம்பெற உள்ளன. 
  • குளிர்பதனக் கிடங்கு, விவசாயப் பொருள்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம்பெறும். 8 அறிவிப்புகள் வேளாண் உள்கட்டமைப்புக்கானதாக இருக்கும். மீதமுள்ள 3 அறிவிப்புகள், மேலாண்மை மற்றும் நிர்வாக சீர்திருத்தம் தொடர்பானதாக இருக்கும்.
  • பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது. லாக்டெளன் காலத்தில், இந்தியாவில் பால் தேவை 20- 25 சதவிகிதம் குறைந்துள்ளது. தினமும் 360 லட்சம் லிட்டர் பால் தேவை என்கிற நிலையில், ஊரடங்கின்போது தினமும் 560 லட்சம் லிட்டர் பால் உற்பத்திசெய்யப்பட்டது. 
  • கூடுதலாக உற்பத்திசெய்யப்பட்ட பால், சுமார் 4,100 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பால் கூட்டுறவு நிறுவனங்களுக்கு, ஆண்டுக்கு 2 சதவிகிதம் வட்டி வழங்கும் புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. 
  • இதன்மூலம் கூடுதலாக 5,000 கோடி பணப்புழக்கம் ஏற்படும். இதனால் 2 கோடி விவசாயிகள் பலனடைவார்கள். கரும்பு உற்பத்தி மற்றும் மீன் பிடித் தொழிலிலும் இந்தியா முன்னணியில் உள்ளது.
  • விவசாயிகள் பயன்பெற நேரடி கொள்முதல் செய்வதற்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் கோடியில் நுண் உணவு உற்பத்தி நிறுவனம் உருவாக்கப்படும். 
  • இதன்மூலம், சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் சர்வதேச தரத்தில் செயல்பட உதவியாக இருக்கும். 2 லட்சம் சிறிய உணவு உற்பத்தி நிறுவனங்கள் பலன் அடையும். தமிழகத்தின் மரவள்ளிக்கிழங்கு, உத்தரப்பிரதேசத்தின் மாம்பழம், காஷ்மீரின் குங்குமப்பூ, ஆந்திராவின் மிளகாயும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்படும்.
  • பிரதமரின் மட்ஸ்சய சம்பதா யோஜனா திட்டத்தில் (Pradhan Mantri Matsya Sampada Yojana) மீனவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கீடு. கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறையில் 55 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குதல். 
  • இதன்மூலம் இந்தியாவின் ஏற்றுமதியில் 1 லட்சம் கோடி பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த தரத்தில் மீன்பிடி கப்பல்கள், துறைமுகங்கள், மீனவர்களுக்கும், படகுகளுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள். 
  • இந்த புதிய திட்டங்களின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் மீன் உற்பத்தி 70 லட்சம் டன் அளவிற்கு உயரும். கடல் மீன்பிடிப்பு, உள்ளூர் நீர் நிலைகளில் மீன்பிடிப்புகளுக்கு ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.9,000 கோடியில் திட்டங்கள்.
  • தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டம் 13,343 கோடியில் செயல்படுத்தப்படும். இதன்மூலம், கால்நடைகளுக்கு 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்படும். கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ரூ.15,000 கோடி ஒதுக்கீடு.
  • மூலிகை சாகுபடியை ஊக்குவிக்க ரூ 4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மூலிகை சாகுபடியில் ஈடுபடும் உள்ளூர் விவசாயிகளுக்கு, ரூ. 5000 கோடி வருமானம் கிடைக்கும். கங்கை நதியின் இருபுறமும் 800 ஹெக்டேர் பரப்பளவில் மூலிகை மற்றும் மருத்துவத் தாவரங்கள் வளர்க்கப்படும். 
  • தேனீ வளர்ப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு. இந்தத் திட்டத்தின்மூலம் நாடு முழுவதும் உள்ள 2லட்சம் தேனீ வளர்ப்பாளர்களின் வருவாய் அதிகரிக்கும். இந்தத் திட்டத்தில் உள்கட்டமைப்பு, சந்தைப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.
  • தக்காளி, வெங்காயம், உருளை விவசாயிகளுக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படும். அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்களைப் பயிரிடும் விவசாயிகளுக்கான வசதிகள் விரிவுப்படுத்தப்படும். விநியோக சிக்கல்களைத் தவிர்ப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். 
  • பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு விவசாயப் பொருள்களை அனுப்பினால், 50 சதவிகிதம் போக்குவரத்து மானியம். அதுபோல் பொருள்களைச் சேகரிக்கவும் 50 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். விவசாய விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் அத்தியாவசிய பொருள்கள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன" என்றார்.



அமெரிக்க 24 அதிநவீன போர் ஹெலிகாப்டர் இந்திய கடற்படை ஒப்பந்தம்
  • இந்திய கடற்படைக்கு தேவையான, 24 அதிநவீன போர் ஹெலிகாப்டர்கள் வாங்க, அமெரிக்காவுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
  • இந்திய கடற்படையில், தற்போது பயன்படுத்தப்பட்டு வரும், 'ஸீ கிங்' ஹெலிகாப்டர்கள், 1971ல், பிரிட்டனிடம் இருந்து வாங்கப்பட்டன. இதற்கு மாற்றாக, அமெரிக்காவிடம் இருந்து, அதிநவீன போர் ஹெலிகாப்டர்களான, 'எம்.எச். -60ஆர்' ரக ஹெலிகாப்டர்கள் வாங்க, 6,788 கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த ஹெலிகாப்டர்களை, அமெரிக்காவின், 'லாக்ஹீட் மார்டின்' நிறுவனம், தயாரித்து அளிக்கிறது. 
அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது டாஸ்மாக் கடை திறக்க தடையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • புதுடெல்லி: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதையொடுத்து, இன்று முதல் மதுபான விற்பனையை தொடங்க டாஸ் மாக் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. 
  • கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், டாஸ்மாக் மதுபான கடைகளை மே 7ம் தேதி முதல் திறக்க தமிழக அரச உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், சில நிபந்தனைகளுடன் கடைகளை திறக்க அனுமதித்தது. 
  • ஆனால், இந்த நிபந்தனைகளை மீறியதால் திறக்கப்பட்ட மதுக்கடைகளை உடனடியாக மூடுமாறு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 8ம் தேதி அதிரடி உத்தரவு பிறப்பித்தது.

இந்தியாவிற்கு கூடுதலாக ரூ.7,500 கோடி: உலக வங்கி அறிவிப்பு
  • ந்தியாவுக்கு, மேலும், 7,500 கோடி ரூபாய் கடன் வழங்க, உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.கடந்த மாதம், கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான இந்திய சுகாதார துறை நடவடிக்கைகளுக்கு, உலக வங்கி, 7,500 கோடிரூபாய் கடன் வழங்கியது. 
  • தற்போது, ஊரடங்கால் பாதிக்கப்பட்ட, நகர்ப்புற ஏழைகள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் நலனுக்காக, சமூக பாதுகாப்பு தொழில்நுட்ப நிதியத்தின் கீழ், மேலும், 7,500 கோடி ரூபாய் கடன் வழங்குவதாக, உலக வங்கி அறிவித்துள்ளது.
  • இதன் மூலம், கொரோனா அவசர உதவி திட்டத்தின் கீழ், உலக வங்கி, இந்தியாவுக்கு, மொத்தமாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.



டபுள்யு.டி.ஓ., தலைவர் ராஜினாமா
  • பதவி காலம் முடிவதற்கு முன், ராஜினாமா செய்யப் போவதாக, டபுள்யு.டி.ஓ., எனப்படும், உலக வர்த்தக அமைப்பின் தலைவர், ராபர்டோ அஸிவீடோ தெரிவித்துள்ளார். 
  • ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின், ஜெனிவா நகரை தலைமையிடமாக வைத்து, உலக வர்த்தக அமைப்பு செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக, பிரேசிலை சேர்ந்த, ராபர்டோ அஸிவீடோ, 2013ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். 
  • இவரது பதவி காலம், அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது.இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பு மீது, அமெரிக்கா, சமீபகாலமாக குற்றம்சாட்டி வருகிறது. குறிப்பாக, 'சீனாவுக்கு ஆதரவாக உலக வர்த்தக அமைப்பு செயல்படுகிறது' என, அமெரிக்க அதிபர், டிரம்ப் சமீபத்தில் குற்றம் சாட்டியிருந்தார்.
  • இதனால், ராபர்டோ அஸிவீடோ அதிருப்தி அடைந்தார்.இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பு பிரதிநிதிகளின் சிறப்புக் கூட்டம், ஜெனிவாவில் நடந்தது. 
  • இதில், அஸிவீடோ கூறியதாவது:உலக வர்த்தக அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து, ஆகஸ்ட், 31ம் தேதி விலக முடிவு செய்துள்ளேன்.இது, என்னுடைய தனிப்பட்ட முடிவு; என் குடும்பத்தின் விருப்பம். 
  • என்னுடைய இந்த முடிவு, உலக வர்த்தக அமைப்புக்கு நலன் பயக்கும் என, நம்புகிறேன். இவ்வாறு, அவர் கூறியுள்ளார். உலக வர்த்தக அமைப்பின் தலைவராக இருந்தவர்களில் யாரும், பதவியை முன் கூட்டியே ராஜினாமா செய்ததில்லை என்பது, குறிப்பிடத்தக்கது.

சச்சேத் ரோந்து கப்பலை நாட்டுக்கு அா்ப்பணித்தாா் ராஜ்நாத் சிங்
  • நாட்டின் கடற்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் 'சச்சேத்' ரோந்து கப்பலை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை நாட்டுக்கு அா்ப்பணித்தாா். மேலும், சி-450, சி-451 ஆகிய அதிவிரைவு கப்பல்களின் செயல்பாட்டையும் அவா் தொடக்கிவைத்தாா்.
  • கோவா தலைநகா் பனாஜியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கப்பல்களை காணொலிக் காட்சி வாயிலாக ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அா்ப்பணித்தாா். அந்நிகழ்ச்சியில் பேசிய அவா், ''புதிய கப்பல்களின் இணைப்பு இந்தியக் கடலோரக் காவல்படையின் வலிமையை அதிகரிப்பதில் மைல்கல்லாக அமைந்துள்ளது; நாட்டின் கப்பல் கட்டும் வலிமையை எடுத்துக்காட்டும் நோக்கிலும் அமைந்துள்ளது.
  • நாட்டிலுள்ள கடலோரப் பகுதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்தியக் கடலோரக் காவல்படை சிறப்பான பங்களிப்பை நல்கி வருகிறது. நாட்டின் கடலோரப் பகுதிகள் பாதுகாப்புடன் இருந்தால், பொருளாதார வளா்ச்சி அதிகரிக்கும்'' என்றாா்.
  • ரோந்து கப்பலானது காணொலிக் காட்சி வாயிலாக நாட்டுக்கு அா்ப்பணிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். 'சச்சேத்' ரோந்து கப்பலானது கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டது. முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தொழில்நுட்பக் கருவிகளும், தொலைத்தொடா்புக் கருவிகளும் கப்பலில் பொருத்தப்பட்டுள்ளன.
  • ஒரு ஹெலிகாப்டரையும் 4 அதிவிரைவுக் கப்பல்களையும் தாங்கும் வகையில் ரோந்து கப்பல் கட்டப்பட்டுள்ளது. தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடவல்ல கப்பல் ஒன்றும் ரோந்து கப்பலில் இடம்பெறும்.
  • அதிவிரைவு கப்பல்கள்: சி-450, சி-451 அதிவிரைவு கப்பல்கள் குஜராத்தின் ஹஜீரா பகுதியில் உள்ள எல் அண்டு டி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டன. உள்நாட்டுக் கருவிகளைக் கொண்டு கட்டப்பட்ட அந்தக் கப்பல்கள் குறைவான நேரத்தில் அதிகபட்ச வேகத்தை அடைந்து பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. புதிய கப்பல்கள் அனைத்தும் நாட்டின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில் ரோந்துப் பணிகளில் ஈடுபட உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel