Type Here to Get Search Results !

9th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கொரோனா வைரஸ் சிகிச்சை: கோவிட்-19க்கு கேரளம் முன்மொழிகிற பிளாஸ்மா சிகிச்சை
  • கோவிட்-19 (கொரோனா வைரஸ் நோய்) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு கேரளம் முன்மொழிந்த கன்வேலசன்ட் பிளாஸ்மா சிகிச்சை (ஊநீர் சிகிச்சை) முறையைப் பயன்படுத்த இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
தமிழகம் உள்பட 9 மாநிலங்களுக்கு 10 மத்திய குழுக்கள் அனுப்பி வைப்பு -மத்திய சுகாதார அமைச்சகம்
  • கரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பல்துறை நிபுணா்கள் அடங்கிய 10 மத்திய உயா்நிலைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் உதவுவதற்காக தமிழகம், பிகாா், ராஜஸ்தான், குஜராத், கா்நாடகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், தெலங்கானா, உத்தரப் பிரதேசம் ஆகிய 9 மாநிலங்களுக்கு அந்தக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளை நிா்வகிப்பது, செயற்கை சுவாசக் கருவிகளை கையாளுவது போன்றவற்றில் மாநில அரசுகளுக்கு உதவியாக இந்தக் குழுக்கள் செயல்படும்.
  • ஒருமுறைக்கும் அதிகமாக பயன்படுத்தக் கூடிய வகையிலான 6 லட்சம் முகக்கவசங்களையும், 4,000 லிட்டருக்கும் அதிகமான கை சுத்திகரிப்பான்களையும் இந்திய ரயில்வே தயாரித்துள்ளது. 
  • மொத்தம் 5,000 ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்படும் வாா்டுகளாக மாற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவற்றில் 3,250 பெட்டிகள் அவ்வாறு மாற்றப்பட்டுவிட்டன என்று லவ் அகா்வால் கூறினாா்.



8 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ரூ. 1000 நிவாரணம்
  • கரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்படும் தொழிலாளா்கள் 14.07 லட்சம் பேருக்கு தலா ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இப்போது பல்வேறு அமைப்புகளைச் சோந்தவா்களும் உதவித் தொகை தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனா்.
  • அதன்படி, தூய்மைப் பணியாளா் நல வாரியம், கதா்கிராமத் தொழிலாளா் நல வாரியம், மீனவா் நல வாரியம், மூன்றாம் பாலினத்தவா் நல வாரியம், பழங்குடியினா் நல வாரியம், சிறு வியாபாரிகள் நல வாரியம், பூசாரிகள் நல வாரியம், உலமாக்கள் நல வாரியம், நாட்டுப்புற கலைஞா்கள் நலவாரியம், சீா்மரபினா் நல வாரியம், நரிக்குறவா் நலவாரியம், திரைப்படத் துறை தொழிலாளா் நல வாரியம் ஆகிய வாரியங்களில் 7 லட்சம் போ உள்ளனா். இந்த ஏழு லட்சம் தொழிலாளா்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும்.
  • பட்டாசு தொழிற்சாலைகளில் பதிவு பெற்ற 1.20 லட்சம் தொழிலாளா்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் அளிக்கப்படும். மொத்தமாக 8 லட்சத்து 20 ஆயிரத்து 200 தொழிலாளா்களுக்கு ரூ.82.02 கோடி உதவித் தொகையாக வழங்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.
சராசரி வெப்பநிலை நாடு முழுதும் குறைவு
  • கொரோனா வைரஸ் நாடு முழுதும் பரவி வருகிறது. இதற்கிடையே, நாட்டின் பல பகுதிகளில், வெப்பநிலை தணிந்து காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
  • இந்த ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில், சராசரி அதிகபட்ச வெப்பநிலை, 32.7 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலகட்டத்தில் வெப்பநிலை, 36.61 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. 
  • இதேபோல், இரவு நேரமும் சற்று குளிரவே செய்கிறது.கடந்த மார்ச் மாதத்தில், சராசரியான குறைந்தபட்ச வெப்பநிலை, 19.6 டிகிரி செல்ஷியஸ் ஆக இருந்தது. கடந்த ஆண்டு, இதே காலக்கட்டத்தில், இரவு வெப்பநிலை, 21 ஆக இருந்தது. 
  • இந்த ஆண்டு நிறைய புயல் சின்னங்கள் உருவானதால், நாடு முழுதும் நல்ல மழை பெய்தது. இந்த மார்ச் மாதம், 109.67 மி.மீ., மழை பதிவானது. இது, வெப்பநிலை கணிசமாக குறைவதற்கு முக்கிய காரணம். 
குரல் வழி சேவை' அவசர உதவி எண்: முதல்வர் தொடங்கி வைத்தார்
  • சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் `குரல் வழி சேவை' என்ற 94999 12345 என்ற தொலைபேசி எண்ணை தொடங்கி வைத்தார். 
  • இந்த அவசர உதவி எண்ணை அழைத்தால் முதலில் அந்த எண்ணில் வரும் குரல் அழைக்கக்கூடிய எண்ணை பதிவு செய்துக்கொண்டு உடனடியாக அழைப்பை துண்டித்துவிடும். 
  • பிறகு அந்த குரல் வழி சேவை எண்ணில் இருந்து அழைத்த எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வரும். அதன்பிறகு அழைப்பு வரும். 
  • அதில் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பொதுமக்கள் எண்கள் மூலம் பதிலளிக்க வேண்டும். அந்த பதில்களுக்கு தகுந்த விளக்கங்களை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை மூலம் கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து சந்தேங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம்.



கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக மாநிலங்களுக்கு 15,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு ஒப்புதல்
    • கொரோனா தடுப்பு மற்றும் அவசரகால செயல்பாடுகளை மேற்கொள்ள, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு, உடனடியாக, 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. 
    • இது குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கூடுதல், முதன்மை செயலர்கள், சுகாதார துறை ஆணையர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. 
    • மத்திய அரசு, 'கொரோனா அவசர கால செயல்பாடு மற்றும் ஆரோக்கிய பராமரிப்பு ஊக்குவிப்பு' திட்டத்தின் கீழ், நாடு முழுதும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளது.
    • இத்திட்டத்தை, மத்திய அரசின், 100 சதவீத நிதியுதவியில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் செயல்படுத்த வேண்டும். இந்தாண்டு, ஜனவரி முதல், 2024 மார்ச் வரை, திட்டப் பணிகள் மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும். 
    • முதற்கட்ட பணி, வரும், ஜூனில் முடிவடையும். இதன் மூலம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தேசிய அளவில் எடுக்கப்படும்.
    • கொரோனா சிகிச்சைக்கு என, பிரத்யேக மருத்துவ மனைகள், தனிமைப்படுத்துவதற்கான இடங்கள், செயற்கை சுவாசக் கருவியான, 'வென்டிலேட்டர்' வசதிகளுடன் கூடிய, அவசர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்படும்.
    • எத்தகைய நோய் தாக்கத்தையும் சமாளிக்கும் வகையில், தேசிய மற்றும் மாநில சுகாதார கட்டமைப்புகள் வலுப்படுத்தப்படும். ஆய்வுக் கூடங்கள் மற்றும் தயார் நிலையில், உயிரி பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும்.
    ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிப்பு; ஒடிசா முதல்வர் அதிரடி அறிவிப்பு
    • நாட்டிலேயே முதல் முறையாக, ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சி தலைவருமான நவீன் பட்நாயக், ஊரடங்கை, ஏப்., 30 வரை நீட்டிப்பதாக அறிவித்தார். 
    • ஊரடங்கை நீட்டிக்காவிட்டால், பெரும் ஆபத்து ஏற்படும். எனவே, ஒடிசா மாநிலத்தில், ஏப்., 30 வரை ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவரை, ஒடிசாவுக்கோ, ஒடிசா மாநிலம் வழியாகவோ, ரயில் மற்றும் விமான சேவைகளை இயக்க வேண்டாம் என, மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லுாரி களும், 30ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும்.
    வளர்ச்சி 4.8 சதவீதமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபை கணிப்பு
    • ஐக்கிய நாடுகள் சபையின், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகளின் பொருளதார சமூக ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா நோய் தொற்று, உலகளவில் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நடப்பு நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்து, 4.8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    • கடந்த நிதியாண்டில், நாட்டின் வளர்ச்சி, 5 சதவீதமாக இருக்கும் என்று கக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 4.8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக குறையும்: கோல்டுமேன் சாக்ஸ் கணிப்பு
    • நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக தொழில்துறை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் இயங்கவில்லை. ஏற்றுமதி ஸ்தம்பித்து விட்டது. இதனால், இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என கணிப்புகள் வெளியாகி வருகின்றன. 
    • கடந்த வாரம் பிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், பொருளாதார வளர்ச்சி குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) இந்தியாவில் நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. பாரத ஸ்டேட் வங்கி வெளியிட்ட கணிப்பில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 0.9 சதவீதம் குறையும் என கூறியிருந்தது.
    • இதுபோல், கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் தற்போது கணிப்பு வெளியிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி 1.6 சதவீதமாக குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 



    விளைபொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்
    • கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்திருந்த ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. 
    • அப்போது, சமூக விலகலை முறையாகக் கடைப்பிடித்து இதுவரை 96 சதவீதம் பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
    • இதையடுத்து, கரோனா பாதிப்பு குறையாததால் மே மாதம் ரேஷன் பொருட்கள் வழங்கும்போது, கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    • பின்னர், தமிழக விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், 'ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டுவர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தார்.
    • மேலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில், இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளைபொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை தள்ளி வைத்தனர்.
    முதலமைச்சரின் கொரோனா தடுப்பு நிதிக்கு சன் டிவி ஊழியர்கள் ரூ.10 கோடி நிவாரணம்
    • உலக நாடுகளை நடுநடுங்க வைக்கும் கொரோனா வைரஸால் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியா முழுக்கவே மக்கள் வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். 
    • இந்நிலையில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சன் டி.வி. குழுமத்தில் பணிபுரியும் 6 ஆயிரம் பேரின் ஒருநாள் ஊதியம் ரூ.10 கோடி கொரோனா நிதிக்கு அளிக்கப்பட்டது.
    தமிழகத்திற்கு 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை; முதல்வர் பழனிசாமி தகவல்
    • முதல்வர் பழனிசாமி ஏப்.9 தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களிடத்தில் பேசியதாவது "தமிழகத்தில் 92 ஆயிரத்து 814 பயணிகள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 32 ஆயிரத்து 75 பேர் 28 நாட்கள் கண்காணிப்பை நிறைவு செய்துள்ளனர்.
    • நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளவர்களை பரிசோதிக்க ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அரசின் சார்பாக 12,தனியா
    • ர் சார்பாக 7 என மொத்தம் 19 ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.6,095 பேர் ஆய்வக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அதில் 738 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 344 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
    • கரோனா சந்தேகத்தால் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் 1,953 பேர். கரோனா சிகிச்சைக்கு பிறகு குணமாகி வீடு திரும்பியவர்கள் 21 பேர்.
    • 3,371 வெண்டிலேட்டர்கள் கையிருப்பில் உள்ளன. அரசின் சார்பாக, 22 ஆயிரத்து 49 படுக்கைகள் தனிப்பிரிவில் இருக்கின்றன. தனியார் சார்பாக, 10 ஆயிரத்து 322 படுக்கைகள் உள்ளன. மொத்தம் 32 ஆயிரத்து 371 படுக்கைகள் உள்ளன. கரோனாவால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 
    • அரசின் கையிருப்பில் மூன்று மடிப்பு முகக்கவசங்கள், எண்-95 முகக்கவசங்கள், பிபிஇ பாதுகாப்பு உடைகள், காய்ச்சல் மருந்துகள், ஆண்டிபயாட்டிக் மருந்துகள், ஐவி திரவங்கள், சோதனை கிட் போதிய அளவில் உள்ளன.
    • 2,500 வெண்டிலேட்டர்கள் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ரேபிட் கிட் கொள்முதல் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் 50 ஆயிரம் கிட் இன்று இரவு வந்துவிடும். 50 ஆயிரம் கிட் மத்திய அரசு தருவதாக உறுதியளித்துள்ளது. 

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel