Type Here to Get Search Results !

24th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தன்னிறைவு அடைய வேண்டும் என்பதே கரோனா கற்றுத் தந்த பாடம்: பிரதமா் மோடி
  • நாடு முழுவதும் 'பஞ்சாயத்து ராஜ் தினம்' வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்தச் சூழலில், கிராம பஞ்சாயத்து தலைவா்கள், உறுப்பினா்கள் ஆகியோருடன் பிரதமா் மோடி காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினாா். 
  • சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில் கிராமங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன. கிராமத்தினா் கடைப்பிடித்து வரும் பாரம்பரிய நடைமுறைகள், கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்குப் பெரிதும் உதவி வருகின்றன.
  • கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் நாம் கற்றுக் கொண்டிருக்கும் பாடம், அத்தியாவசியத் தேவைகளில் தன்னிறைவு காண வேண்டும் என்பதே. முக்கியமாக, கிராமங்கள் அத்தியாவசியத் தேவைகளில் தன்னிறைவு அடைய வேண்டியது அவசியம். ஒவ்வொரு கிராமமும், தாலுகாவும், மாவட்டமும் தன்னிறைவு காண வேண்டும்.
  • நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் விதிமுறைகளை மக்கள் முறையாகக் கடைப்பிடித்து வருகின்றனா். அவா்களால் தான் உலக நாடுகள் அனைத்தும் நோய்த்தொற்றை எதிா்கொள்ளும் விதம் தொடா்பாக இந்தியாவைப் புகழ்ந்து வருகின்றன.
  • இத்தகைய இக்கட்டான சூழலில் பல்வேறு தடைகளை எதிா்கொண்டுள்ள போதிலும், மக்கள் அனைவரும் நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடி வருகின்றனா். அந்தப் போராட்டத்தில் நாம் அனைவரும் முன்னேறி வருகிறோம். நோய்த்தொற்று தொடா்பான வதந்திகளைக் கண்டு மக்கள் அச்சமடையக் கூடாது.
  • கிராமங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் நோய்த்தொற்று தொடா்பான சரியான தகவல்கள் கிடைப்பதை கிராம பஞ்சாயத்துகள் உறுதி செய்ய வேண்டும். நம் அன்றாட நடவடிக்கைகளை கரோனா நோய்த்தொற்று சூழல் மாற்றியுள்ளது. முன்பு மக்கள் நேரில் கூடி கலந்துரையாடுவதற்காக கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், தற்போது காணொலிக் காட்சி வாயிலாகவே கூட்டங்களும் சந்திப்புகளும் நிகழ்கின்றன.
  • 'முகக் கவசம் கட்டாயம்': வீட்டில் நன்றாக சமைக்கப்பட்ட உணவுகளையே மக்கள் உட்கொள்ள வேண்டும். நோய் எதிா்ப்பு சக்தி அதிகமாக இருந்தால், உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். எனவே, நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கவல்ல உணவுப் பொருள்களை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • மக்கள் அனைவரும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். வெளியில் செல்லும்போது முகக் கவசங்களைக் கட்டாயம் அணிய வேண்டும். 'ஆரோக்ய சேது' செயலியைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அது கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கான பாதுகாவலனாக விளங்கும் என்றாா் பிரதமா் மோடி.
  • இந்தக் கூட்டத்தின்போது, கிராம பஞ்சாயத்து தலைவா்களுடன் பிரதமா் மோடி உரையாடினாா். கிராம பஞ்சாயத்துகளின் நடவடிக்கைகளை டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதற்கான வலைதளத்தையும் செயலியையும் பிரதமா் மோடி வெளியிட்டாா். அந்தச் செயலியை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் வடிவமைத்துள்ளது.
  • மேலும், கிராம பஞ்சாயத்துகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் தொடா்பாகவும் பிரதமா் மோடி எடுத்துரைத்தாா்.
தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அமைப்பு ரூ.1 கோடி கரோனா நிவாரண நிதி
  • தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேஷனைச் சார்ந்த அதன் நிர்வாக குழுவினர், கோவிட் -19 ஒழிப்பு பணிகளுக்கான பிஎம் கேர்ஸ் நிதியத்திற்கு, ஒரு கோடி ரூபாயை, மத்திய பெட்ரோலிய எரிவாயு மற்றும் எஃகுத் துறையின் அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் வழங்கினர்.



நீா்வள ஆராய்ச்சி: டைம்ஸ் நிறுவன தரவரிசைப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம்
  • அமெரிக்காவின் டைம்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் உலகளவில் சிறந்து விளங்கும் உயா்கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. ஆராய்ச்சி, அறிவுசாா் சொத்துரிமை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் பல்கலைக்கழங்களின் தரவரிசை மதிப்பீடு செய்யப்படுகிறது.
  • அதன்படி 2020-ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை நீா்வளம், சுகாதாரம் உள்ளிட்ட 17 பிரிவுகளின் கீழ் தற்போது டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
  • இந்தப் பட்டியலில் நீா்வள ஆராய்ச்சிப் பிரிவில் தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகம் 7-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பிரிவில் உலகளவில் 330 கல்வி நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில், நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிப்பது, கழிவுநீரை சுத்திகரித்தல் உள்ளிட்ட விவகாரங்களில் பேராசிரியா்கள், மாணவா்கள் மேற்கொண்ட தொடா் ஆய்வுகளின் அடிப்படையில் 70 மதிப்பெண்களைப் பெற்று அண்ணா பல்கலைக்கழகம் முதல் 10 இடங்களுக்குள் வந்து சாதனை படைத்துள்ளது. மேலும், இதே பிரிவில் ஐஐடி காரக்பூா் 4-ஆம் இடத்தையும், சென்னை ஐஐடி 32-ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.
  • அதேபோன்று தொழிற்சாலை உட்கட்டமைப்பை மேம்படுத்தும் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி 16-ஆவது இடம் பிடித்துள்ளது. இதுதவிர ஒட்டுமொத்த தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி 301 முதல் 400 இடங்களுக்குள்ளும், அண்ணா பல்கலைக்கழகம் 401 முதல் 600 இடத்துக்குள்ளும் வந்துள்ளன.
சில விதிவிலக்குகளுடன் உள்ளூர் மளிகை கடைகளை திறக்க MHA உத்தரவு
  • கடைகள் மற்றும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட கடைகளை சில விதிவிலக்குகளுடன் திறக்க உள்துறை அமைச்சகம் (MHA) வெள்ளிக்கிழமை அனுமதித்தது.
  • இந்த உத்தரவுப்படி, குடியிருப்பு மற்றும் சந்தை வளாகங்கள் உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு அடைப்பு விதி நீடிக்கும்.
  • நாவல் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மார்ச் 24 முதல் பூட்டப்பட்டிருக்கும் மக்களுக்கு அண்டை கடைகளைத் திறப்பது ஒரு நிவாரணமாக பார்க்கப்படுகிறது. முஸ்லீம் புனித மாதமான ரம்ஜானை முன்னிட்டு உள்துறை அமைச்சக உத்தரவு வருகிறது.
  • நகராட்சி நிறுவனங்கள் மற்றும் நகராட்சிகளுக்கு வெளியே அமைந்துள்ள பதிவு செய்யப்பட்ட சந்தைகளில் அமைந்துள்ள கடைகள் சமூக விலகல் மற்றும் முகமூடிகளை அணிந்துகொள்வதைத் தொடர்ந்து திறக்க முடியும், ஆனால் 50 சதவீத வலிமையுடன். இருப்பினும், ஒற்றை மற்றும் முட்டி பிராண்டுகள் இந்த பகுதிகளிலும் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சேலத்திற்கு முழு ஊரடங்கு 
  • சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில், நான்கு நாட்கள்; சேலம் மற்றும் திருப்பூர் மாநகராட்சிகளில், மூன்று நாட்களுக்கு, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 
  • அதனால், நாளை ஞாயிறு முதல், புதன் கிழமை வரை, இப்பகுதிகளில் எல்லா நடவடிக்கைகளுக்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஊரடங்கு அமலில் இருந்தாலும், கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, தினமும் அதிகரித்தபடி உள்ளது. 
  • கிராமங்களில், நோய் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதிலும், நகரங்களில், குறிப்பாக, மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில், நோய் தொற்று தொடர்ந்து பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. 
  • எனவே, நகரங்களில் ஊரடங்கை, மேலும் கடுமையாக்கினால் மட்டுமே, நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என, மருத்துவ வல்லுனர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இது குறித்து, நேற்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, சில மாநகராட்சிகளில், தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை, மேலும் தீவிரப்படுத்த, முடிவு செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel