Type Here to Get Search Results !

22nd & 23rd APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை மத்திய அரசு ஊழியர், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை - மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு
  • கரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரண மாக, மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல் வழங்கப்பட வேண் டிய அகவிலைப்படி (டிஏ) உயர்வுத் தொகையை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • இதுபோல, வரும் ஜூலை 1, மற்றும் 2021 ஜனவரி 1 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி உயர்வுத் தொகையும் வழங்கப்பட மாட்டாது. அதேநேரம், ஏற்கெனவே உள்ள அகவிலைப்படி தொடர்ந்து வழங்கப்படும். 2021-ம் ஆண்டு ஜூலை 1 முதல் அகவிலைப்படி உயர்வு வழங்குவது குறித்து அரசு பின்னர் முடிவு எடுக்கும்.
  • 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரையிலான காலத்துக்கான அகவிலைப்படி உயர்வு தொகை வரும் காலத்தில் நிலுவைத் தொகையாக வழங்கப்பட மாட் டாது. இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.
  • அகவிலைப்படி உயர்வு 18 மாதங்களுக்கு வழங்கப்படாது என்ற மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக, 2020-21 மற்றும் 2021-22 ஆகிய நிதியாண்டுகளில் அரசுக்கு ரூ.37,530 கோடி மிச்சமாகும். இதுபோல மாநில அரசு ஊழியர்களுக்கும் அக விலைப்படி உயர்வை நிறுத்தி வைத்தால் அனைத்து மாநிலங் களுக்கும் ரூ.82,566 கோடி மிச்சமாகும். இந்த தொகை நிதி நெருக்கடியை சமாளிக்க பெரிதும் உதவியாக இருக்கும்.
கேரள அரசு ஊழியா்களுக்கு 1 மாதம் ஊதியம் குறைப்பு
  • கரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளின் செலவினங்கள் அதிகரித்துள்ளதைக் காரணம் காட்டி, கேரள அரசு ஊழியா்களுக்கான 1 மாத ஊதியம் குறைக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது; இந்த தொகை 5 மாதத் தவணைகளாக பிடித்தம் செய்யப்படும்.
  • அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், பேராசிரியா்கள், பொதுத் துறை நிறுவனப் பணியாளா்கள் உள்ளிட்டோருக்கு இந்த ஊதியக் குறைப்பு பொருந்தும். அதே வேளையில், மாதம் ரூ.20,000-க்குக் குறைவாக ஊதியம் பெறுவோருக்கு இந்த ஊதியக் குறைப்பு பொருந்தாது. 
  • எம்எல்ஏக்கள், அமைச்சா்கள், வாரிய உறுப்பினா்கள் ஆகியோரின் ஊதியத்தில் ஓராண்டுக்கு 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அரசு ஊழியா்கள் இந்த முடிவுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றாா்.
உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழுத் தலைமைப் பொறுப்பை ஏற்கிறது இந்தியா
  • உலக சுகாதார அமைப்பின் மாநாடு மே மாதம் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாநாட்டின்போது நிா்வாகக் குழுவில் இடம்பெறவுள்ள உறுப்பினா்களும், அக்குழுவின் தலைவரும் தோந்தெடுக்கப்படவுள்ளனா்.
  • அதைத் தொடா்ந்து மே மாதம் 22-ஆம் தேதி நிா்வாகக் குழுவின் முதல் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, இந்தியாவின் பிரதிநிதி அக்கூட்டத்துக்குத் தலைமையேற்கவுள்ளாா். தற்போது நிா்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை ஜப்பான் வகித்து வருகிறது. அந்நாட்டின் ஓராண்டு அவகாசம் மே மாதத்துடன் நிறைவடைகிறது.
  • அதைத் தொடா்ந்து, நிா்வாகக் குழுவின் தலைமைப் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய குழு கடந்த ஆண்டே ஒருமனதாகப் பரிந்துரைத்திருந்தது. அந்நிா்வாகக் குழுவில் 3 ஆண்டுகள் உறுப்பினராக இடம்பெறவும் இந்தியாவுக்கு தென்கிழக்கு ஆசிய குழு ஆதரவு தெரிவித்திருந்தது.
  • அதனடிப்படையில், உலக சுகாதார அமைப்பின் நிா்வாகக் குழுவுக்கான தலைமைப் பொறுப்பை மே மாதம் ஏற்கும் இந்தியா, அடுத்த ஓராண்டுக்கு அப்பொறுப்பில் நீடிக்கும்.
  • நிா்வாகக் குழுவில் 34 உறுப்பினா்கள் இடம்பெறுவா். உலக சுகாதார அமைப்பின் முடிவுகளை செயல்படுத்தும் பொறுப்பு நிா்வாகக் குழு வசமே உள்ளது. நிா்வாகக் குழுவின் தலைவா், உலக சுகாதார அமைப்பின் இயக்குநா் டெட்ரோஸுடன் இணைந்து பணியாற்றுவாா். பல்வேறு முக்கிய முடிவுகள் எடுப்பது தொடா்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநா், நிா்வாகக் குழுவின் தலைவருடன் ஆலோசிப்பாா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
  • இயக்குநா் டெட்ரோஸின் 5 ஆண்டு பதவிக்காலம் 2021-ஆம் ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே, உலக சுகாதார அமைப்பின் அடுத்த இயக்குநரைத் தோந்தெடுப்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கவுள்ளது.
  • மேலும், உலக சுகாதார அமைப்பின் நிதிநிலைக் குழுவிலும் இந்தியா இடம்பெறவுள்ளது. இந்தோனேசியாவின் பதவிக் காலம் முடிவடையவுள்ள சூழலில், இந்தியா அந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
குடிமராமத்து பணிகளுக்காக ரூ.500 கோடி ஒதுக்கீடு தமிழக அரசு அரசாணை வெளியீடு
  • கரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 
  • இருந்தபோதிலும் தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
  • இந்நிலையில் 2020-21-ம் ஆண்டில் 34 மாவட்டங்களில் 1,387 குடிமராமத்து திட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
  • சென்னை மண்டலத்தில் 377 பணிகளுக்கு ரூ.155 கோடியும், திருச்சி மண்டலத்தில் 458 பணிகளை மேற்கொள்ள ரூ.140 கோடியும், மதுரை மண்டலத்தில் 306 பணிகளுக்கு ரூ.156 கோடியும், கோவை மண்டலத்தில் 246 பணிகளை மேற்கொள்ள ரூ.45 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா ஊரடங்கு கரீப் கல்யாண் நிவாரணம்: 33 கோடி பேருக்கு ரூ.31235 கோடி: மத்திய அரசு நடவடிக்கை
  • கரோனா தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் பெண்கள், ஏழைகள், மூத்த குடிமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ரொக்கமாகப் பணம் வழங்குதல், இலவசமாக உணவு தானியங்கள் வழங்கும் திட்டங்களை அரசு அறிவித்தது.
  • இந்தத் தொகுப்பு நிவாரணத் திட்டங்கள் விரைந்து நிறைவேற்றப்படுவதை மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து கண்காணிக்கின்றன. 
  • உதவி தேவைப்படும் நிலையில் இருப்பவர்களுக்கு, நிவாரண உதவிகள் சென்று சேருவதை உறுதிசெய்வதற்கு, நிதியமைச்சகமும், தொடர்புடைய அமைச்சகங்களும், அமைச்சரவைச் செயலகமும், பிரதமர் அலுவலகமும் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.
  • பிரதமரின் கரீப் கல்யாண் தொகுப்பு நிவாரணத் திட்டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 22 ஆம் தேதி வரையில் பயனாளிகளுக்கு பின்வரும் நிதி உதவிகள் (ரொக்கமாக) வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
  • பயனாளிகளுக்கு விரைவாக, நல்ல முறையில் பணம் செலுத்துவதற்காக Fintech மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளது. நேரடியாக பயனாளி கணக்கில் பணம் செலுத்தும் திட்டத்தில் (DBT), பயனாளிகளின் கணக்கிற்கே பணம் செலுத்தப்படுவதால், தவறானவர்களின் கைகளுக்குப் பணம் போய்விடாமல் தடுக்கப்பட்டு, திட்டத்தின் செயல் திறன் அதிகரிக்கப் படுகிறது. பயனாளி, வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாமல், நேரடியாக அவருடைய கணக்கில் பணம் செலுத்துவது உறுதி செய்யப்படுகிறது.
  • ப்ரல் மாதத்துக்கான ஒதுக்கீடு 40 லட்சம் மெட்ரிக் டன்கள் என்ற நிலையில், இதுவரையில் 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் 40.03 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் பெறப்பட்டுள்ளது. 
  • 31 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.19 கோடி ரேஷன் அட்டை வைத்திருக்கும், 39.27 கோடி பயனாளிகளுக்கு ஏப்ரல் மாதத்துக்கான பொருள்களாக 19.63 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 1,09,227 மெட்ரிக் டன் அளவுக்கு பயறு வகைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  • பிரதமரின் உஜ்வாலா யோஜ்னா திட்டத்தின் கீழ் மொத்தம் 3.05 கோடி சிலிண்டர்களுக்குப் பதிவு செய்யப்பட்டு, 2.66 கோடி இலவச சிலிண்டர்கள் பயனாளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவையில் 75% அல்லது 3 மாத சம்பளம், இவற்றில் எது குறைவோ அந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்தத் தேவையில்லாத முன்பணமாகப் பெறும் வசதி
  • தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் 6.06 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் ரூ.1954 கோடி எடுத்துள்ளனர்.
  • 3 மாதங்களுக்கு ஈ.பி.எப். பங்களிப்பு: 100 பேருக்கும் குறைவான தொழிலாளர்கள் வேலை பார்க்கும் நிறுவனங்களில் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாக மாதச் சம்பளம் வாங்கும் தொழிலாளர்களுக்கான ஊதியத்தில் 24 சதவீதத்துக்கான தொழிலாளர் ஈட்டுறுதி சந்தா பங்களிப்பு 3 மாதங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தில் 2020 ஏப்ரல் மாதத்துக்கான பங்களிப்பாக அரசு ஏற்கெனவே ரூ.1000 கோடி அளித்துள்ளது. இதன் மூலம் 78.74 லட்சம் பேர் பயன் பெறுவார்கள். இதற்கான அறிவிப்பு, அடிக்கடி எழும் கேள்விகள் குறித்த விவரங்கள் இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன.
  • இதுவரையில் 10.6 லட்சம் தொழிலாளர்கள் ரூ.162.11 கோடி அளவுக்குப் பயன் பெற்றுள்ளனர். 68,775 நிறுவனங்களுக்கு இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது.
  • மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 01.04.2020 தேதியில் இருந்து ஊதியம் அதிகரிப்பு குறித்து அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் 1.27 கோடி மனித உழைப்பு நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளது. சம்பளம் மற்றும் பொருட்கள் நிலுவையை அளிக்கும் வகையில் ரூ.7300 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் பணிபுரியும் சுகாதார அலுவலர்களுக்கான காப்பீட்டுத் திட்டம். 22.12 லட்சம் சுகாதார அலுவலர்கள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் அமல்படுத்துகிறது.
  • மொத்தமாக வழங்கப்பட்ட நிதியில் ரூ.16,146 கோடி பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் முதலாவது தவணைக்காக அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் 8 கோடி பேருக்கும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளில் தலா ரூ2000 செலுத்தப் பட்டுள்ளது.
  • இந்தியாவில் பெரும்பாலான வீடுகளை பெண்கள் தான் நிர்வகித்து வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் கீழ் ஜன்தன் கணக்கு வைத்திருக்கும் 20.05 கோடி பெண்களுக்கு வங்கிக் கணக்குகளில் தலா ரூ.500 செலுத்தப் பட்டுள்ளது. 22 ஏப்ரல் 2020 தேதியின்படி இந்தத் தலைப்பில் மொத்தம் ரூ.10,025 கோடி வழங்கப்பட்டுள்ளது.
  • தேசிய சமூக உதவித் திட்டத்தின் கீழ் 2.82 கோடி முதியோர், விதவையர், மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.1,405 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பயனாளிக்கும் முதலாவது தவணையாக ரூ.500 வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் மற்றொரு தவணையாக தலா ரூ.500 வழங்கப்படும்.
  • கட்டடம், இதர கட்டுமானத் தொழிலாளர்கள் 2.17 கோடி பேருக்கு, கட்டடம் மற்றும் கட்டுமானத் தொழிலாளர் நிதியில் இருந்து உதவித் தொகை அளிக்கப் பட்டுள்ளது. இத் திட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.3,497 கோடி அளிக்கப் பட்டுள்ளது.



கபசுர குடிநீர் வழங்கும் 'ஆரோக்கியம்' திட்டம்: முதல்வர் இபிஎஸ் தொடக்கம்
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நோக்கில் 'ஆரோக்கியம்' என்னும் சிறப்பு திட்டத்தை முதல்வர் இபிஎஸ் தொடங்கி வைத்து, நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை வழங்கினார்.
  • கொரோனா வைரஸ் தொற்று நோயினை தடுக்கும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல உத்திகளை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திய ஆயுஷ் அமைச்சகம் கொரோனா தொற்றினை தடுப்பதற்கு உரிய வழிகாட்டுதல்களை வழங்கியது. 
  • அதில் நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு வழிகாட்டுதலை வழங்கியது. 
  • முதல்வரின் உத்தரவின்பேரில் 11 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு பரிந்துரைகளை ஏற்று, தமிழக பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொள்ளவும், சிகிச்சை பெற்ற பின் உடல் நலத்தை பேணவும் 'ஆரோக்கியம்' என்ற சிறப்பு திட்டத்தினை தொடங்கிவைத்து, நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுரக் குடிநீர் சூரணப் பொட்டலங்களை முதல்வர் இபிஎஸ் வழங்கினார்.
  • இதனை தொடர்ந்து சென்னை மாநகரில் நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் வசிக்கும் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுர குடிநீர் சூரணப் பொட்டலங்கள் வழங்கப்படும். 
  • இந்த சிறப்பு வழிமுறைகள், கொரோனா நோயக்கான சிகிச்சை அல்ல எனவும், பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க மருத்துவ ரீதியாக ஆய்வு செய்யப்பட்ட வழிமுறைகள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது. 
சீா்மரபினா் நல வாரிய தலைவராக சோ.அய்யா் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
  • சீா்மரபினா் நல வாரியத்தின் தலைவராக சோ.அய்யா் நியமிக்கப்பட்டுள்ளாா். துணைத் தலைவராக பாரதிய பாா்வா்ட் பிளாக் கட்சியின் தலைவா் கே.ஏ.முருகன்ஜி நியமனம் செய்யப்பட்டுள்ளாா். 
  • இதற்கான உத்தரவை பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன் அண்மையில் வெளியிட்டாா்.
கரோனா: 'ஆப்தமித்ரா' தொலைபேசி உதவி மையம், செயலி தொடக்கம்
  • கரோனா வைரஸ் தொற்று தொடா்பான அனைத்து வகையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக 'ஆப்தமித்ரா' தொலைபேசி உதவிமையம், செல்லிடப்பேசி செயலியை முதல்வா் எடியூரப்பா தொடக்கிவைத்தாா்.
  • கரோனா நோய்க்கான அறிகுறிகளை போன்ற அறிகுறிகளை கொண்டவா்களுக்கு தொலைமருத்துவம் மூலம் சிகிச்சை அளிப்பது, ஆலோசனை வழங்குவது, சுயதனிமைப்படுத்தலில் இருக்க ஊக்கப்படுவது, இவா்கள் குணமாகிவிட்டாா்களா? என்பதை அவ்வப்போது கண்டறிவதற்காக இந்த செயலி, உதவிமையம் உதவும்.



அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி: ஐ.நா., தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு
  • 'கொரோனா வைரசுக்கு எதிராக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை, அனைத்து நாடுகளும் சரி சமமாக பெற வேண்டும்.
  • இதை வலியுறுத்தி, ஐ.நா.,சபையில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தை ஆதரிப்பதாக, இந்தியா தெரிவித்துள்ளது.வட அமெரிக்க நாடான மெக்சிகோ, ஐ.நா., சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. 
  • அதில், 'கொரோனாவுக்காக கண்டுபிடிக்கப்படும் தடுப்பூசி, பரிசோதனை முறைகள், நோய் தீர்க்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், அனைத்து நாடுகளுக்கும் கிடைப்பதை, உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு உறுதி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
  • ஐ.நா., சபையில், 193 உறுப்பு நாடுகள் உள்ளன. அவற்றில், இந்தியா உட்பட,179 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்துள்ளன.
மூன்று கோடி பேருக்கு உணவு ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்டம்
  • நாடு முடக்கப்பட்டிருக்கும் நிலையில், உணவுக்காக தவிப்பவர்களுக்கும், நோய் தடுப்பில் முன்னணியிலிருந்து பணியாற்றுபவர்களுக்கும் உதவும் வகையில், மூன்று கோடிக்கும் அதிகமான உணவுகளை வழங்க, ரிலையன்ஸ் அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. 
  • இதற்காக ரிலையன்ஸ் அறக்கட்டளை, 'மிஷன் அன்ன சேவா' எனும் திட்டத்தை விரிவுபடுத்தி இருக்கிறது.ரிலையன்ஸ் அறக்கட்டளை, ஏற்கெனவே நாட்டிலுள்ள, 68 மாவட்டங்களில், இரண்டு கோடிக்கும் அதிகமான உணவுகளை வினியோகித்திருக்கிறது.
கரோனா தடுப்பு: ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆகவும் உள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,870 ஆக உள்ளது. 
  • இதற்கிடையில், நாடு முழுவதும் கரோனா தடுப்பு பணிகளில் முக கவசம், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்டவைகளுக்குத் தட்டுப்பாடு இருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் 
  • கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.15,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ரூ.7,774 கோடியை உடனடியாக விடுவிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மீதமுள்ள தொகையை 1-4 வருடங்களுக்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



ஈரானின் முதல் ராணுவ செயற்கைக்கோள் வெற்றி
  • ஈரான் தனது முதல் ராணுவ செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி இருப்பதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. மெசென்ஜர் ராக்கெட் மூலம் நூர் செயற்கைகோளை செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ள ராணுவம், பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.
  • இலக்கை வெற்றிகரமாக அடைந்த செயற்கைகோள், புவி வட்டப்பாதையை வெற்றிகரமாக சுற்றி வருவதாக ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. நூர் செயற்கைகோள் புவி வட்டபாதையில் 425 கி.மீ தொலைவில் சுற்றி வருவதாக ஈரான் ராணுவம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
அழைப்பு எண் 1921 - மத்திய அரசின் கொரோனா டெலி சர்வே திட்டம்
  • இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 640 ஐத் தாண்டியுள்ள நிலையில், அத்தொற்றுப் பரவல் குறித்த ஆய்விற்கு 1921 என்ற எண்ணில் மக்களை அழைத்து புள்ளி விவரங்களை மத்திய அரசு திரட்டவுள்ளது. 
  • கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆரோக்கிய சேது உள்ளிட்ட செயலிகள் வழியே மத்திய அரசு கொரோனா விழிப்புணர்வை தந்து வருகிறது.
  • இந்நிலையில் 1921 என்ற அழைப்பை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வழியே இந்தியர் அனைவரையும் தொடர்பு கொண்டு கொரோனா பரவல், அறிகுறிகள் உள்ளிட்ட புள்ளிவிவரங்களை திரட்ட உள்ளது.
  • இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், '1921 என்ற எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், நாட்டு நலனை கருத்தில் கொண்டு மக்கள் இந்த ஆய்விற்கு தங்களின் ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்' என சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதம்தான் கணிப்பில் தகவல்
  • கொரோனா வைரஸ் பாதிப்பால் உலக அளவில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ஆசிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிப்பு தொடர்பாக, ஐஎம்எப் உட்பட பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் கணிப்பு வெளியிட்டு வருகின்றன. 
  • இதன்படி, நடப்பு 2020-21 நிதியாண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதம் என கணிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. இதற்கு முன்பு இந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது.



அமெரிக்காவின் புகழ்பெற்ற அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட தமிழர் சுதர்சனம் பாபு
  • மதிப்புமிக்க ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தை சேர்ந்த சுதர்சனம் பாபுவை தேசிய அறிவியல் வாரியத்தின் உயர்நிலை உறுப்பினராக 6 ஆண்டு காலத்திற்கு நியமித்துள்ளதாக வெள்ளை மாளிகை திங்கட்கிழமை அறிவித்துள்ளது.
  • சுதர்சனம் பாபு 1988ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள ஐஐடியில் தனது எம்.டெக் படிப்பையும், இளங்கலை பொறியியல் பட்டப்படிப்பை 1986ஆம் ஆண்டு கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் பெற்றார்.
  • கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருள் அறிவியல் மற்றும் உலோகவியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், தற்போது இடைநிலை ஆராய்ச்சி மற்றும் பட்டதாரி கல்விக்கான மையத்தின் இயக்குநராகவும், ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வத்தின் ஆளுநரின் மேம்பட்ட உற்பத்தித் தலைவராகவும் இருந்து வருகிறார்.
நடப்பு நிதியாண்டில் உர மானியத்துக்காக 22,187 கோடி ஒப்புதல்
  • புதுடெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான உர மானியமாக 22,187 கோடியை ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. உரம் உட்பட அனைத்து வகையான கமாடிட்டி பொருட்களின் விலை சர்வதேச சந்தையில் குறைந்து வருகிறது. 
  • ஆண்டுக்கு சுமார் 24 மில்லியன் டன் பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. யூரியா மற்றும் 21 வகையான பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் (பி அண்ட் கே) உரங்களை, உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் மூலம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குகிறது. 
  • மேலும், சர்வதேச சந்தையில் விலை சரிவால் உற்பத்தியாளர்களும் பலன் அடைகின்றனர். இந்த சூழ்நிலையில், பி அண்ட் கே உரங்களுக்கான மானியமாக நடப்பு நிதியாண்டில் 22,187 கோடியை ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு ஒப்புதல் அளித்துள்ளது. கடந்த ஆண்டில் உர மானியமாக 22,875.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
  • மேலும், இந்த மானிய திட்டத்தில் அமோனியம் பாஸ்பேட் உரங்களை சேர்க்கவும் இந்த குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகள் பலன் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக உள்ளது. 
  • இருப்பினும், ஜம்மு காஷ்மீர், லடாக், அசாம், மேகாலயா மாநிலங்களில் இந்த திட்டத்தின் கீழ் பலன்களை பெற ஆதார் கட்டாயம் என்ற விதி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தளர்த்தப்படுகிறது. 
மருத்துவா்களைத் தாக்கினால் 7 ஆண்டுகள் சிறை: அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
  • கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் ஆகியோரைப் பாதுகாக்க மத்திய அரசு புதன்கிழமை அவசரச் சட்டம் கொண்டு வந்தது. இந்த அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை அடுத்து, இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
  • இந்த அவசரச் சட்டப்படி, மருத்துவா்கள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படவுள்ளது.
  • அதன்படி, மருத்துவா்கள், சுகாதாரத் துறை பணியாளா்கள் உள்ளிட்டோரிடம் அத்துமீறி நடந்துகொண்டால் 3 மாதங்கள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். அத்துடன், ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • மேலும், பலத்த காயமடையும் அளவுக்கு மருத்துவா்களைத் தாக்குவோருக்கு 6 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.
  • இதுபோன்ற தாக்குதலின்போது சுகாதாரத் துறை பணியாளா்கள் காயமடைந்தாலோ, அவா்களின் உடைமைகள் சேதமடைந்தாலோ அவா்களுக்கு இழப்பீடும் வழங்கப்படும். இதற்காக, கடந்த 1897-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கொள்ளை நோய்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும். இந்த அவசரச் சட்டத்தின் மூலம், பணியிடத்திலும் தாங்கள் குடியிருக்கும் பகுதியிலும் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரத் துறை பணியாளா்களுக்குப் பாதுகாப்பு கிடைக்கும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel