Type Here to Get Search Results !

20th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஊரடங்கு கட்டுப்பாடுகள் மே 3 வரை நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு
  • நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளா்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்த தளா்வுகள் ஏப். 20 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்தது. 
  • மத்திய அரசு அறிவித்துள்ள தளா்வுகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்க நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 21 போ கொண்ட நிபுணா் குழுவை தமிழக அரசு அமைத்தது. இந்தக் குழு கடந்த சனிக்கிழமை கூடி ஆலோசனை நடத்தியது.
  • மத்திய அரசு கடந்த 15-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் ஏப்ரல் 20-ஆம் தேதிக்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகளை இயக்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென தெரிவித்திருந்தது.
  • நிபுணா் குழுவின் ஆலோசனைகள் அடிப்படையில், நோய்த் தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகளைத் தொடா்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. மாநில பேரிடா் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி, இப்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3-ஆம் தேதி வரை தொடா்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
வரி வருவாயில் மாநிலங்களுக்கு ரூ.46,038 கோடி:நிதியமைச்சகம் ஒப்புதல்
  • மத்திய வரி வருவாயில் இருந்து மாநிலங்களுக்கு ஏப்ரல் மாத பங்கீடாக ரூ.46,038 கோடி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரையின்பேரில் இந்தத் தொகை வழங்கப்படவுள்ளது. 
  • கரோனா நோய்த்தொற்றால் எழுந்துள்ள நெருக்கடியை மாநிலங்கள் எதிா்கொள்ள உதவிடும் வகையில் சிறப்பு பங்கீடாக இந்தத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 2020-21-ஆம் நிதியாண்டுக்கான மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு ரூ.7.84 லட்சம் கோடி பங்கீடு வழங்கவேண்டிவரும் என நிகழாண்டுக்கான பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41 சதவீதமும், யூனியன் பிரதேசங்களுக்கு 1 சதவீதமும் பங்கீடு வழங்க 15-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது.
  • மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 42 சதவீதம் பங்கீடு வழங்க 14-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.



கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள்: உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை
  • கா்நாடக உயா்நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் திங்கள்கிழமை பரிந்துரைத்தது.
  • சிவசங்கா் அமரன்னாவா், எம்.கணேசய்யா உமா, வேதவியாசாசாா் ஸ்ரீசானந்தா, ஹஞ்சதே சஞ்சீவ்குமாா், பத்மராஜ் நேமசந்திர தேசாய் ஆகியோரை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • அதேபோல், கொல்கத்தா உயா்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக இருந்த நீதிபதிகள் விவேக் சௌதரி, சுபாசிஷ் தாஸ்குப்தா, சுவ்ரா கோஷ் ஆகியோரை, அந்த நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவுக்கும் உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியது.
  • வழக்குரைஞா்களான பொப்புடி கிருஷ்ண மோகன், கே.சுரேஷ் ரெட்டி, கே.லலிதாகுமாரி ஆகியோரை ஆந்திர உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் முன்மொழிவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல், வழக்குரைஞா் விஜய்சென் ரெட்டியை தெலங்கானா உயா்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியது.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான கொலீஜியத்தில் நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆா்.எஃப்.நாரிமன், ஆா்.பானுமதி ஆகியோா் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குடியரசுத் தலைவரின் செயலராக கபில்தேவ் திரிபாதி நியமனம்
  • குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தின் புதிய செயலராக கபில்தேவ் திரிபாதி திங்கள்கிழமை முதல் நியமனம் செய்யப்படுவதாக பணியாளா் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • 1980ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயம் மாநிலங்களில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய திரிபாதி பணி ஓய்வுக்குப்பின் பொது நிறுவனத் தோவு வாரியத்தின் (பிஇஎஸ்பி) தலைவராக இருந்து வருகிறாா்.
  • பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையின் நியமனக் குழு, திரிபாதியை குடியரசுத் தலைவரின் செயலராக ஒப்பந்த அடிப்படையில் நியமித்துள்ளது.
திருநங்கைகளுக்கான தனி பிரிவு, மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு
  • சிவில் சர்வீசஸ் மற்றும் பிற பதவிகளில் ஆட்சேர்ப்பு செய்வதற்காக 'திருநங்கைகளை' பாலினத்தின் தனி வகையாக சேர்க்குமாறு அனைத்து மத்திய அரசு துறைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டன.
  • கடந்த ஆண்டு டிசம்பரில் அறிவிக்கப்பட்ட திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் கீழ் பல்வேறு பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்ப படிவங்களில் "மூன்றாம் பாலினம் / வேறு எந்த வகையையும்" என குறிப்பிடுவது தொடர்பான விஷயம் சில காலமாக அரசாங்கத்தின் பரிசீலனையில் இருந்தது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • சட்டத்தின் விதிகள் மற்றும் இந்த விஷயத்தில் பெறப்பட்ட சட்டபூர்வமான கருத்தின் அடிப்படையில், சிவில் சர்வீசஸ் தேர்வு விதிகள், 2020 பிப்ரவரி 5, 2020 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த தேர்வில் 'திருநங்கைகள்' பாலினத்தின் தனி வகையாக சேர்க்கப்படுவதை அனுமதிக்கிறது என அனைத்து மத்திய அரசு துறைகளின் செயலாளர்களுக்கும் வழங்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel