ஊரடங்கு காலத்தில் நேரடி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ.36,659 கோடி
- தலைமை கணக்கு தணிக்கை அலுவலகமானது (சிஜிஏ) தேசிய ஊரடங்கின்போது கடந்த மாா்ச் 24 முதல் ஏப்ரல் 17 வரையிலான காலகட்டத்தில் பொது நிதி மேலாண்மை அமைப்பின் (பிஎஃப்எம்எஸ்) மூலம் நேரடி நிதியுதவியாக 16.01 கோடி பேரின் வங்கிக் கணக்கில் ரூ.36,659 கோடிக்கும் அதிகமாக செலுத்தியுள்ளது.
- அதில் ரூ.27,442 கோடியானது மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களின் கீழ் 11.42 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய ரூ.9,717 கோடியை பல்வேறு மாநில அரசுகள் தங்களது நலத்திட்டங்களின் கீழ் வழங்கியுள்ளன.
- பல்வேறு மாநிலங்கள் பொது நிதி மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்தி 180 நலத் திட்டங்களின் மூலமாக 4.59 கோடி பயனாளிகளுக்கு ரூ.9,717.22 கோடியை வழங்கியுள்ளன. அது தவிர, ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்துள்ள பெண் பயனாளா்கள் 19.86 கோடி பேருக்கு ரூ.9,930 கோடி அவா்களது வங்கிக் கணக்கிலேயே நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- நேரடி நிதியுதவி திட்டங்கள் மூலம் வழங்கப்படும் நிதி, அதுதொடா்பான கணக்குப் பதிவு ஆகியவற்றை பொது நிதி மேலாண்மை அமைப்பின் கீழ் மேற்கொள்வதை மத்திய நிதியமைச்சகம் கடந்த 2015 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கட்டாயமாக்கியுள்ளது. இதை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கும் அறிவுறுத்தியது.
- கடந்த 2018-19 முதல் 2019-20 வரையிலான 3 நிதியாண்டுகளில் பொது நிதி மேலாண்மை அமைப்பின் மூலம் நேரடி நிதியுதவி திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு நிதி செலுத்தப்படுவது 22 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வு ஏற்றுக்கொள்ளாத 3 மாநிலங்கள் - டெல்லி, பஞ்சாப், தெலுங்கானாவில் முழு கட்டுப்பாடு
- இந்தியாவில் மொத்தம் மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 20ம் தேதி எந்த விதமான ஊரடங்கு தளர்வும் செய்யப்படாது அம்மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது. டெல்லி, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் லாக் டவுனை தளர்த்த முடியாது என்று முடிவு செய்துள்ளது.
- அதன்படி தெலுங்கானாவில் ஊரடங்கு மே 7ம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது.
- கொரோனா பாதிப்பை பொறுத்து மே 5ம் தேதி முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்து இருக்கிறது. அதேபோல் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் மே 3ம் தேதி வரை எந்த விதமான ஊரடங்கு தளர்வும் செய்யப்படாது அம்மாநில அரசுகள் அறிவித்துள்ளது.


