Type Here to Get Search Results !

1st APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஜம்மு-காஷ்மீரில் புதிய குடியேற்றச் சட்டம் நிறைவேற்றம்: 138 சட்டங்களில் திருத்தம் செய்து அரசிதழில் வெளியீடு
  • ஜம்மு-காஷ்மீரில் 138 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதனை அரசிதழில் புதன்கிழமை அரசு வெளியிட்டது. புதிய குடியேற்றச் சட்டத்தின்படி குரூப்-4க்கான பணிகளை அந்த யூனியன் பிரதேசத்தில் வசிப்பவா்களுக்கு மட்டுமே அளிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த திருத்தப்பட்ட சட்டங்களில் ஜம்மு-காஷ்மீா் சிவில் சா்வீஸ் (பரவலாக்கம் மற்றும் ஆள்சோப்பு) சட்டமும் சோக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி, யூனியன் பிரதேசத்தில் 15 ஆண்டுகள் தங்கியிருக்கும் நபா்களே அங்குள்ள குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள். 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி வரும் அகில இந்திய சேவை ஊழியா்களின் வாரிசுகளும் இந்த பிரிவின் கீழ் சோக்கப்படுவாா்கள்.
  • அதேசமயம் ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் குடியிருப்பவா்களாக இல்லாவிட்டால், ரூ. 25,500- க்கு மேல் இல்லாத ஊதிய அளவைக் கொண்ட குரூப் -4 பதவியில் நியமனம் பெற எந்தவொரு நபரும் தகுதி பெறமாட்டாா் என்று இந்தச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீா், லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டப்பின், அமலில் இருந்த 138 சட்டங்களில் 28 ரத்து செய்யப்பட்டன.
  • தற்போதைய புதிய குடியேற்றச் சட்டத் திருத்தத்தின்படி, ஜம்மு-காஷ்மீரில் 15 ஆண்டுகளாக வசித்து வருபவா் அல்லது 7 ஆண்டுகளாக படித்து வருபவா் மற்றும் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேவெழுதியவா்கள் அதன் குடியிருப்புவாசிகளாக கருதப்படுவாா்கள்.
  • மேலும், நிவாரண மற்றும் மறுவாழ்வு ஆணையா் (புலம்பெயா்ந்தோா்) மூலம் சான்றளிக்கப்பட்டு குடியேறியவா்களும் குடியிருப்புவாசியாக கருதப்படுவாா்கள்.
  • மத்திய அரசு அதிகாரிகள், அகில இந்திய சேவை அதிகாரிகள், பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்புகள், பொதுத்துறை வங்கிகள், சட்டரீதியான அமைப்புகளின் அதிகாரிகள், மத்திய பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளாக பணியாற்றிய மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்கள்.
ஏற்றுமதியாளா்களுக்கான சிறப்பு சலுகைகளை அறிவித்தது ஆா்பிஐ
  • வெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்கு விற்கப்பட்ட பொருள்களுக்கான தொகையை வசூலிப்பதற்கான காலஅவகாசத்தை ஆா்பிஐ நீட்டித்துள்ளது. 
  • ஜூலை 31-ஆம் தேதி வரை வெளிநாட்டு வாடிக்கையாளா்களுக்குப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கான தொகையை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கான காலஅவகாசம், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 15 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • தற்போதுள்ள விதிகளின்படி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்த பொருள்களுக்கான தொகையை 9 மாதங்களுக்குள் ஏற்றுமதியாளா்கள் இந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும். தற்போது அந்தக் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • உச்சவரம்பு அதிகரிப்பு: மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வருவாய் பற்றாக்குறை ஏற்படும்போது, அவை ஆா்பிஐ-யிலிருந்து தற்காலிகமாகக் கடன் பெறும் வசதி உள்ளது. அந்தக் கடனில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பெற விரும்பும் முன்தொகைக்கான உச்சவரம்பை 30 சதவீதமாக உயா்த்துவதாக ஆா்பிஐ தெரிவித்தது.
  • இந்த உச்சவரம்பு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் ஆா்பிஐ தெரிவித்துள்ளது.
கரோனா: விப்ரோ, அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,125 கோடி நிதி
  • விப்ரோ நிறுவனம், விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம், அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை இணைந்து ரூ.1,125 கோடியை கரோனா சிகிச்சைக்கான உதவி மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கியுள்ளன.
  • இதில் விப்ரோ நிறுவனம் ரூ.100 கோடி, விப்ரோ எண்டா்பிரைசஸ் நிறுவனம் ரூ.25 கோடி, விப்ரோ நிறுவன தலைவா் அசிம் பிரேம்ஜி அறக்கட்டளை ரூ.1,000 கோடி அளிக்க இருக்கின்றன.
  • இதேபோல ஜிண்டால் அலுமினியம் நிறுவனம் ரூ.5 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் காா்கள் மற்றும் மோட்டாா் சைக்கிள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஜப்பானின் ஹோண்டா நிறுவனம் தனது பெருநிறுவன சமுகப் பொறுப்பு நிதியில் இருந்து கரோனா தடுப்புக்காக ரூ.11 கோடியை ஒதுக்கியுள்ளது.
  • அதேபோல பொதுத் துறை நிறுவனமான பெல் ரூ.15.72 கோடியை பிரதமா் நிவாரண நிதிக்கு அளித்துள்ளது. இதில் ரூ.8.72 கோடி அந்த நிறுவனத்தின் ஊழியா்களின் ஒருநாள் ஊதியத்தில் இருந்து அளிக்கப்படுகிறது.
சூரியசக்தி மின்சாரம் முதல் முறையாக 3,095 மெகா வாட் கொள்முதல்
  • சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், முதல் முறையாக, 3,095 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்துள்ளது.தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள், 3,759 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன. 
  • அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்ணயித்துள்ள விலைக்கு, தமிழக மின் வாரியம் கொள்முதல் செய்கிறது.
  • சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, தினமும் சராசரியாக, 2,000 மெகா வாட் கொள்முதல் செய்யப்படுகிறது. அவற்றில் இருந்து, நடப்பாண்டு மார்ச், 10ம் தேதி, 3,082 மெகா வாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது. 
  • இதுவே, இதுவரை உச்ச அளவாக இருந்தது.தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதையடுத்து, நேற்று முன்தினம், சூரியசக்தி மின் நிலையங்களில் இருந்து, மின் வாரியம், முதல் முறையாக, 3,095 மெகா வாட் மின்சாரத்தை கொள்முதல் செய்துள்ளது.



பிப்ரவரியை விட மார்ச் ஜி.எஸ்.டி., வசூல் குறைந்தது
  • சரக்கு மற்றும் சேவை வரியான, ஜி.எஸ்.டி., மூலம், கடந்த மார்ச் மாதத்தில், 97 ஆயிரத்து, 597 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது, கடந்த பிப்ரவரி மாதத்தில் வசூலான தொகையை விட குறைவாகும். 
  • கடந்த பிப்ரவரி மாதத்தில், 1.05 லட்சம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., வாயிலாக வசூல் ஆனது. இந்நிலையில், மார்ச் மாதத்தில் வசூல், 97 ஆயிரத்து, 597 கோடி ரூபாயாக குறைந்து விட்டது.இதில், மத்திய ஜி.எஸ்.டி., வசூல், 19 ஆயிரத்து, 183 கோடி ரூபாய் ஆகும். 
  • மாநில ஜி.எஸ்.டி., 25 ஆயிரத்து, 601 கோடி ரூபாய் ஆகும். ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., 44 ஆயிரத்து, 508 கோடி ரூபாயாகும். இதில் இறக்குமதி மூலமாக வசூலான, 18 ஆயிரத்து, 56 கோடி ரூபாயும் அடக்கமாகும்.
  • கடந்த மார்ச், 31ம் தேதி வரையிலான காலத்தில், மொத்தம், 76.5 லட்சம் ஜி.எஸ்.டி.ஆர்., - 3பி படிவங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்நாட்டில் பற்றாக்குறை, செர்பியாவுக்கு 90 டன் மருத்துவ உபகரணங்கள் வழங்கி இந்தியா தாராளம்
  • கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசம் அடங்கிய 90 டன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளை செர்பியாவுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
  • இந்தியா. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு உதவிவரும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தின் (யுஎன்டிபி) செர்பிய பிரிவு தனது ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லை.
  • '90 டன் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்தியாவில் இருந்து 2 வது சரக்கு விமானம் இன்று பெல்கிரேடில் தரையிறங்கியது. செர்பிய அரசு வாங்கிய மதிப்புமிக்க பொருட்களின் போக்குவரத்துக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது, 
  • இந்தியாவில் உள்ள மருத்துவ ஊழியர்களுக்கு தற்போது அவசியம் தேவைப்படுகிற 50 டன் அறுவை சிகிச்சை கையுறைகள், முகமூடிகள் மற்றும் பாலிதீன் மேலாடைகள் இந்த 90 டன்னில் அடங்கும்.
கரோனா: 1945-க்குப் பிறகு முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது விம்பிள்டன் டென்னிஸ்
  • கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் கடுமையாகப் போராடி வருகின்றன. உலகளவில் பாதித்தோரின் எண்ணிக்கை 8,86,326 ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 44,238 ஆகவும் உள்ளது. 
  • இதன் காரணமாக ஏற்கெனவே கடந்த ஒரு மாத காலமாக நடைபெறவிருந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன அல்லது ஒத்திவைக்கப்பட்டன.
  • மே மாதம் நடைபெறுவதாக இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 4 வரை நடைபெறும் என ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இது நடைபெறுமா என்பதும் இன்னும் உறுதியற்ற நிலையிலேயே உள்ளது. 
  • இதைத் தொடர்ந்து, 2020 டோக்யோ ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8, 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டாலும், அது தற்போது நடைபெறுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
  • இந்நிலையில் தற்போது உலகளவில் புகழ்பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1945-ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படுவது இதுவே முதன்முறை.
  • இதன்மூலம் 134-வது விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் 28 ஜூன் முதல் 11 ஜூலை 2021 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel