Type Here to Get Search Results !

10th APRIL 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

நியாய விலைக் கடைகள் மூலம் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் பை: தமிழக அரசு முடிவு
  • கரோனா நோய்த்தொற்று காரணமாக, நடுத்தர, ஏழை, எளிய மக்களின் தேவைகளைச் சமாளிக்க நியாய விலைக் கடைகளில் ரூ.500 விலையில் மளிகைப் பொருள்கள் விற்கப்பட உள்ளன.
  • திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கம் மூலமாக மளிகைப் பொருள்கள் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட வாரியாக ஒதுக்கீடு செய்யப்படும். மளிகைப் பொருள்களை ஒவ்வொரு மண்டலத்திலும் செயல்படும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையில் பொட்டலமிட வேண்டும் என கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
  • துவரம் பருப்பு உளுத்தம் பருப்பு தலா அரை கிலோ, கடலை பருப்பு கால் கிலோ, மிளகு, சீரகம், கடுகு, வெந்தயம் தலா 100 கிராம், தோசை புளி, பொட்டுக்கடலை தலா 250 கிராம், நீட்டு மிளகாய் 150 கிராம், தனியா 200 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், டீ தூள் 100 கிராம், உப்பு 1 கிலோ, பூண்டு 250 கிராம், கோல்டு வின்னா் சன் பிளவா் எண்ணெய் 250 கிராம், பட்டை 10 கிராம், சோம்பு 50 கிராம், மிளகாய் தூள் 100 கிராம் ஆகியன பொட்டலத்தில் போடப்பட்டு விற்கப்படும். அவற்றின் மொத்த விலை ரூ.491.50 ஆகும். இதனுடன் ரூ.4.90 கையாளுதல் கட்டணமும், பை செலவு ரூ.3.60 என மொத்தம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படும். வெளிச் சந்தையில் இதன் விலை ரூ.597 என கூட்டுறவுத் துறையின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



தமிழகத்துக்கு ரூ.314 கோடி மத்திய அரசு நிதி
  • கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழக அரசு கோரியுள்ள நிதியை ஒதுக்கீடு செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மாநில பேரிடா் நிவாரண நிதியிலிருந்து இதுவரை ரூ.510 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
  • அதைத் தவிர, தேசிய நல்வாழ்வு குழும (நேஷனல் ஹெல்த் மிஷன்) நிதியில் இருந்து ரூ.314 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடியை பிரதமா் அறிவித்தாா். 
  • அதில், முதல்கட்டமாக ரூ.4,200 கோடி மாநிலங்களுக்கு பகிா்ந்தளிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், தற்போது ரூ.314 கோடி தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது.
ஐ.எம்.எப். ஆலோசனை குழுவில் ரகுராம் ராஜன்
  • கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி சீர்குலைவை வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் எதிர் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
  • இந்த சூழ்நிலையில் ஐ.எம்.எப்., அமைப்பிற்கு பல்வேறு ஆலோசனை வழங்குவதற்காக 11 பேர் கொண்ட குழுவை ஐ.எம்.எப்., அமைப்பின் தலைவர் கிறிஸ்டியனா ஜார்ஜிவா நியமித்துள்ளார்.
  • இதில் முன்னாள் ரிசர்வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்,57 இடம் பெற்றுள்ளார். இவர் தற்போது சிகாகோ பல்கலை.யில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறார். 
  • மேலும் இக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இக்குழுவில் சிங்கப்பூர் அமைச்சர் சண்முகரத்னம், கிறிஸ்டின் போர்பஸ், ஆஸி. முன்னாள் பிரதமர் கேவின் ரூத், மார்க் மெல்லோக் ப்ரளென் உள்ளிட்டோரும் உறுப்பினர்களாக உள்ளனர்.
16,500 கோடி நிதியுதவி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி உறுதி
  • கொரோனா பாதிப்பில் இருந்து மீட்கும் வகையில், இந்தியாவுக்கு 16,500 கோடி நிதியுதவி வழங்க, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஆசிய மேம்பாட்டு வங்கி தலைவர் மசாட்சுகு அசகாவா உறுதி அளித்துள்ளார். 



13 நாடுகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் சப்ளை : இந்தியா முடிவு
  • மலேரியாவுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும், ஹைட்ராக்சிகுளோரோக்வின் மருந்து, கொரோனோ நோயாளிகளுக்கு பலன் அளித்துள்ளது. இந்த மருந்தை, உலகிலேயே அதிக அளவில், இந்தியா தயாரிக்கிறது. 
  • உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அமெரிக்கா, பிரேசில், இஸ்ரேல் நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
  • இதையடுத்து மேலும் 13-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோ குயின் மருந்தினை அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • முதல் கட்டமாக அமெரிக்காவிற்கு 35. 82 லட்சமும், பிரேசில், கனடா நாடுகளுக்கு 50 லட்சம், வங்கதேசம்-20 லட்சம், நேபாள் -10 லட்சம், பூட்டான்-2 லட்சம், இலங்கை 10 லட்சம், ஆப்கானிஸ்தான், 5 லட்சம், மாலத்தீவு 2 லட்சம்.இரண்டாம் கட்டமாக ஜெர்மனி 50 லட்சம், மற்றும் மொரீஷியஸ், டொமனிக்கன் குடியரசு , ஸ்பெயின், பக்ரைன் உள்ளிட்ட 13 நாடுகளுக்கு 14 மில்லியன் மாத்திரைகள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.
ஏப்ரலில் திருவிழாக்களுக்கு தடை: மத்திய அரசு உத்தரவு
  • கொரோனா சமூக பரவலாக மாறாத வகையில் ஊரடங்கு உத்தரவை அனைத்து மாநில அரசுகளும் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
  • சட்டம், ஒழுங்கு அமைதி மற்றும் பொது நல்லிணக்கத்தைப் பராமரிக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். 
  • சமூகவலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க வேண்டும்.ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதால் அனைத்து மத நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், கூட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும்.
  • ஊரடங்கு கட்டுப்பாடுகள் மீறப்பட்டால் பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் தண்டனைகளை விதிக்க சட்ட அமலாக்க ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கினை நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரை
  • இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு இன்னும் 4 நாட்களில் முடிய இருக்கிறது. ஆனால், பல மாநிலங்கள் ஊரடங்கினை மேலும் நீட்டிக்க பரிந்துரைத்ததாக பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
  • இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட மருத்துவர்கள் குழுவுடன் முதல்வர் இபிஎஸ் ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, தமிழகத்தில் ஊரடங்கினை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் குழு, முதல்வர் இபிஎஸ்.,க்கு பரிந்துரை செய்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel