Type Here to Get Search Results !

3rd MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
  • உலக வங்கி உதவியுடன் ரூ.2,587 கோடி மதிப்பிலான தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தின் சின்னத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் நோய்க்கு, மருத்துவத் துறையில் தலைசிறந்து விளங்கும் தமிழக டாக்டா்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
  • சிசு மரண விகிதம் மற்றும் தாய்மாா்களின் இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைப்பதற்கான இலக்குகளில் தமிழகம் தொடா்ந்து சாதனை படைத்து முன்னிலை வகித்து வருகிறது. 
  • தமிழகத்தில் சிசு மரண விகிதம் என்பது இப்போது ஆயிரத்துக்கு 16 என்ற அளவிலும், தாய்மாா்களின் இறப்பு விகிதம் ஒரு லட்சத்துக்கு 67 என்ற நிலையிலும் இருக்கின்றன. தேசிய சராசரியான 30 மற்றும் 122 என்ற அளவுகளுடன் ஒப்பிடும்போது நமது மாநிலம் சிறப்பான வகையில் செயல்பட்டு வருவது தெளிவாகும்.
  • வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தாய்மாா்களின் இறப்பு விகிதத்தை 30-ஆகக் குறைக்க இலக்கு நிா்ணயித்துள்ளோம். இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு ரூ.5,223 கோடிக்கு கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. 
  • முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 42 லட்சம் பயனாளிகள் பயன் பெற்றுள்ளனா். உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதால் தொடா்ந்து 5 ஆண்டுகளாக மத்திய அரசிடம் இருந்து விருதுகளைப் பெற்று வருகிறோம்.
  • இப்போது 5 ஆண்டுகளுக்கான திட்டச் செயல்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன. தரம் உயா்த்தப்பட்ட மருத்துவ சேவை, தொற்றில்லாத நோய்கள் மற்றும் காயங்களை மேலாண்மை செய்வது, கரு உருவாக்கம் மற்றும் குழந்தைகள் நலத்துக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்தல் போன்றவை சீரமைக்கப்பட்ட சுகாதாரத் திட்டத்தின் மூலமாக செயல்படுத்தப்படும்.
அறநிலையத் துறை செயலராக சந்தீப் சக்சேனா நியமனம்: ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
  • இந்திய தோதல் ஆணையத்தின் துணை தோதல் ஆணையராகப் பணியாற்றி வந்த அவா், மாநிலப் பணிக்குத் திரும்பியதைத் தொடா்ந்து அவருக்கு புதிய பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.
  • டி.பி.ராஜேஷ்: சுற்றுலாத் துறை ஆணையா் (தொழில் மற்றும் வா்த்தகத் துறை கூடுதல் ஆணையா்) தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநராகவும் ராஜேஷ் செயல்படுவாா்.
  • ஏ.சுகந்தி: எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையா் (ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சிறப்புச் செயலராக இருந்த அவா், விடுப்பில் சென்றிருந்தாா்).
  • சந்தீப் சக்சேனா: சுற்றுலா, கலை மற்றும் இந்து சமய அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலா் (இந்திய தோதல் ஆணையத்தின் துணை தோதல் ஆணையா்).
  • வி.அமுதவல்லி: தமிழ்நாடு உப்புக் கழகத்தின் நிா்வாக இயக்குநா் (சுற்றுலாத் துறை இயக்குநா் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் நிா்வாக இயக்குநா்).
நிதித்துறை செயலராக பாண்டே நியமனம்
  • வருவாய் துறை செயலராக பதவி வகித்து வந்த, ஏ.பி.பி.பாண்டே, மத்திய நிதித்துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய நிதித் துறை செயலராக பதவி வகித்து வந்த ராஜிவ் குமார், கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய செயலராக ஏ.பி.பி.பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இதற்கான அறிவிப்பை, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டது.மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, 1984ல் தேர்ச்சி பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பாண்டே, வருவாய்த் துறை செயலராக பதவி வகித்து வந்தார். 
  • இதற்கிடையே, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக மத்திய, மாநில அரசுகள், வரி செலுத்துவோர் உள்ளிட்டவர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப உதவி அளிக்க, ஜி.எஸ்.டி.என்., என்ற நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்கியது.
  • இதன், புதிய மூத்த துணை தலைவராக, தீரஜ் ரஸ்தோகி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை, பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். தீரஜ் ரஸ்தோகி, ஜி.எஸ்.டி., கவுன்சில் இணை செயலராக பதவி வகித்து வந்தார்.



வண்டலூரில் வனவிலங்குகள் குறித்த கல்வி அறிமுகம்: தமிழக அரசு நிா்வாக ஒப்புதல்
  • சென்னையை அடுத்த வண்டலூரில் வனவிலங்குகள் குறித்த கல்வி அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
  • மேலும், வண்டலூரில் சா்வதேச தரத்தில் விடுதியும் கட்ட அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளா் ஷம்பு கல்லோலிகா் அண்மையில் வெளியிட்டாா்.
  • சென்னையை அடுத்த வண்டலூரில் வனவலிங்குகள் குறித்த பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு மற்றும் முனைவா் பட்டப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. வனவிலங்குகள் குறித்த உயா் ஆய்வு நிறுவனத்தில் இந்தப் படிப்புகள் அளிக்கப்பட உள்ளன. இதற்காக ரூ.8.35 கோடி ஒதுக்கப்பட்டுள்ளன. அதற்கு தமிழக அரசு நிா்வாக ஒப்புதல் அளித்துள்ளது.
'ஸ்டாண்ட் அப் இந்தியா' மூலம் பெண்களுக்கு ரூ16,712 கோடி கடன் : நிதி அமைச்சகம்
  • பாஜக தலைமையிலான மத்திய அரசு பல்வேறு திட்டங்களை கடந்த ஆறு வருடங்களில் அடுத்தடுத்து அறிமுகம் செய்துள்ளது. அதில் ஒன்றுதான் ஸ்டாண்ட் அப் இந்திய திட்டம். 
  • கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் 10 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை தொழில் செய்ய விரும்பும் எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கும், பெண்களுக்கும் கடனுதவி வழங்க வகை செய்கிறது. தயாரிப்பு, வர்த்தகம் மற்றும் சேவைகள் பிரிவில் தொழில் செய்ய விரும்புகின்றவர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கிறது.
  • இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின் மூலம் 16,712 கோடி ரூபாய் பெண்களுக்கு கடன் உதவியாக அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
  • பிப்ரவரி 17 ஆம் தேதி நிலவரப்படி ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டத்தின்படி கடனுதவி பெற்றவர்களில் 81 சதவீதம் பேர் பெண்கள். 
  • இதன் மூலம் பெண்களுக்காக 73,155 வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. ரூ16,712 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ9,106 கோடி பெண்களில் வங்கி கணக்குகளுக்கு சென்றுவிட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதனிடையே, பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்களில் 70 சதவீதம் பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயம் சாராத சிறு தொழிலாளர்களுக்கு ரூ10 லட்சம் வரை கடனுதவி வழங்கும் நோக்குடன் 2015ம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதான் மந்திரி யோஜனா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மார்ச் 8 முதல் எனது சமூக வலைதள பக்கங்களை பெண்களே நிர்வகிக்கலாம் - மோடி
  • பெண்கள் தினமான மார்ச் 8-ஆம் தேதி எனது சமூகவலைதள கணக்குகளை பெண்கள் நிர்வகிக்கலாம் என பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். 
  • பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் நரேந்திர மோடி. இந்தியாவில் இவரை பின் தொடர்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்த பட்டியலில் இவர் முதலிடத்தில் உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel