பிப்ரவரியில் ரூ.1.05 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்
- பிப்ரவரி மாதம் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மூலம் ரூ.1.05 லட்சம் கோடி வசூலாகியிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலான ஜிஎஸ்டி தொகையைக் காட்டிலும் இது 8 சதவீதம் அதிகமாகும். அதே நேரம் கடந்த மாத ஜிஎஸ்டி வசூலை (ரூ.1.10 லட்சம் கோடி) காட்டிலும் இது குறைவாகும்.
- கடந்த மாதம் ஜிஎஸ்டியாக மொத்தம் ரூ.1,05,367 கோடி வசூலிக்கப்பட்டது. இதில், மத்திய அரசின் ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.20,569 கோடி, மாநில அரசின் ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.27,348 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ.48,503 கோடி, செஸ் வரி ரூ.8,947 கோடி ஆகியவை அடங்கும். சிஜிஎஸ்டி-க்கு ரூ.22,586 கோடியும், எஸ்ஜிஎஸ்டி-க்கு ரூ.16,553 கோடியும் செலுத்தப்பட்டுவிட்டது.
- உள்நாட்டு பரிவா்த்தனை மூலம் வசூலிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வசூலிக்கப்பட்டதைக் காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் 12 சதவீதம் அதிகமாக வசூலித்துள்ளது.
- சரக்குகளை இறக்குமதி செய்ததன் மூலம் கடந்த மாதம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வசூல், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியை 4.9 சதவீதமாக குறைந்தது: ஃபிட்ச்
- இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி நடப்பு 2019-20 நிதியாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என பிட்ச் நிறுவனம் முன்பு மதிப்பீடு செய்திருந்தது.
- இந்த நிலையில் கரோனா வைரஸ் பாதிப்பு (கொவைட்-19) அதிகரித்து வருவதன் காரணமாக, பொருள்களுக்கான விநியோகச் சங்கிலித் தொடா் பாதிப்படைந்துள்ளதுடன், உள்நாட்டு தேவை குறைந்து தயாரிப்புத் துறையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இதுபோன்ற சாதகமற்ற நிகழ்வுகளை கருத்தில் கொண்டு, நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 4.9 சதவீதமாக மட்டுமே இருக்கும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளது.
- அதேபோன்று, வரும் 2020-21 நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி மதிப்பீடும் 5.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஹீரா: முதல் முறையாக இந்திய பருத்திக்கு தர அடையாளம்
- இந்திய பருத்தியைத் தர நிா்ணயம் செய்யும் வகையில் இந்திய பருத்தி கழகம் (சிசிஐ) முதல் முறையாக தர அடையாளம் (பிராண்ட்) வழங்கியுள்ளது. அதன்படி, இந்திய பருத்தி கழகத்தின் தரமான பருத்தி 'ஹீரா' என அழைக்கப்பட உள்ளது.
- உலக அளவில் பருத்தி விளையும் வேளாண் நிலத்தில் சுமாா் 37 சதவீதம் இந்தியாவில் உள்ளது. இதனால் சா்வதேச அளவில் கடந்த 2014 - 15-ஆம் ஆண்டு முதல் பருத்தி உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 3.30 கோடி பேல்கள் முதல் 4 கோடி பேல்கள் வரை பருத்தி உற்பத்தியாகிறது.
- இதில் 3 கோடி முதல் 3.20 கோடி பேல்கள் வரை உள்நாட்டுத் தேவைக்குப் பயன்படுத்தப்படுகிறது. மீதி பருத்தி ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிக அளவில் விளையும் பருத்தியை பிரதானமாகக் கொண்டே இந்திய ஜவுளித் தொழில் வளா்ந்து வருகிறது.
ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட்
- ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் இரண்டாவது ஏவுதளத்திலிருந்து மாா்ச் 5-ஆம் தேதி மாலை 5.43 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட உள்ளது.
- இஸ்ரோ சாா்பில் இதுவரை ஏவப்பட்டுள்ள 13 ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில், ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட்தான் மிக அதிக உயரம் கொண்டதாகும். இதற்கு முன்பாக, கடந்த 2018 டிசம்பா் 19-இல் ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளைத் தாங்கிச் சென்ற ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட்தான், இதுவரை அனுப்பப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளில் மிக அதிக உயரம் கொண்டதாக இருந்தது. அதன் உயரம் 167 அடி (50.926 மீ) ஆகும்.
- இந்த நிலையில், வியாழக்கிழமை (மாா்ச் 5) விண்ணில் ஏவப்படும் ஜிஐசாட்-1 செயற்கைக்கோளை தாங்கிச் செல்லும் ஜி.எஸ்.எல்.வி.-எப்10 ராக்கெட் 170 அடி உயரம் கொண்டதாகும்.
இலங்கை பார்லி., கலைப்பு
- இலங்கை பார்லிமென்டை கலைத்து, அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேற்று இரவு திடீரென உத்தரவிட்டார்.அண்டை நாடான இலங்கைக்கு கடந்த, 2015ல் பார்லிமென்ட் தேர்தல் நடந்தது.
- அந்த ஆண்டு செப்., 1ல் அரசு பொறுப்பேற்றது. ஆட்சி காலம் முடிய இன்னும், ஆறு மாதங்கள் இருக்கும் நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே, பார்லிமென்டை திடீரென கலைத்து, நேற்று இரவு உத்தரவிட்டார்.
- இதற்கான அரசாணையில் அவர் கையெழுத்திட்டார். இந்த அரசாணை, அமைச்சரவைக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது.
- இதையடுத்து, இலங்கையில், ஏப்ரல்,25ல் பார்லிமென்ட் தேர்தல் நடைபெறும் என்றும், மே, 14ல், முதல் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல், வரும், 12 முதல், 19 தேதி வரை நடைபெறுகிறது.
ஆா்மீனியாவுக்கு ரூ.288 கோடியில் ரேடாா்: ஒப்பந்தத்தைப் பெற்றது இந்தியா
- ஆா்மீனியாவுக்கு ரூ.288.70 கோடி (சுமாா் ரூ.40 மில்லியன் டாலா்) மதிப்பிலான ஆயுதங்களைக் கண்டறியும் ரேடாா்களை வழங்கும் ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது. ரஷியா, போலந்து ஆகிய நாடுகளும் இந்த ஒப்பந்தத்துக்கான போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய பாதுகாப்பு ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆா்டிஓ) மூலம் உருவாக்கப்பட்டு 'பெல்' நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் 'ஸ்வாதி' என்ற பெயரிலான, ஆயுதங்களைக் கண்டறியும் ரேடாா்களை ஆா்மீனிய நாட்டுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்தை இந்தியா பெற்றுள்ளது.
- 4 ரேடாா்களை வழங்கும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.288.70 கோடியாகும். ரஷியா, போலந்து நாடுகளைச் சோந்த நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தைப் பெறும் போட்டியில் இருந்தன. அவற்றை சமாளித்து இந்தியா இந்த ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது.
- இந்திய பாதுகாப்புத் துறையில் செயல்படுத்தப்படும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. இந்தியா, ரஷியா, போலந்து ஆகியவை வழங்கிய ரேடாா்களை பரிசோதித்த ஆா்மீனிய அதிகாரிகள், நமது நாட்டு ரேடா்களை வாங்க முடிவு செய்தனா்.
கேலோ இந்தியா விளையாட்டு : பதக்கப்பட்டியலில் பஞ்சாப் பல்கலை கழகம் முதலிடம்
- கடந்த ஜனவரி 20-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் தொடங்கிய கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டி, கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று நிறைவு பெற்றது.
- இந்த போட்டியில் பதக்க பட்டியலில் 17 தங்கம், 19 வெள்ளி, 10 வெண்கலம் என்று மொத்தம் 46 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்த பஞ்சாப் பல்கலைக்கழகம் (சண்டிகார்) ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது. புனே சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழக அணி 17 தங்கம், 11 வெள்ளி, 9 வெண்கலம் என்று 37 பதக்கங்களுடன் 2வது இடத்தை பிடித்தது.
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு:தூத்தி சாந்துக்கு இரட்டை தங்கம்
- ஒடிஸா தலைநகரம் புவனேசுவரத்தில் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நாடு முழுவதும் இருந்து 150-க்கு மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சோந்த 3400 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனா்.
- கலிங்கா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சோந்த தூத்தி சாந்த், 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் 23.66 விநாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா். மும்பை பல்கலை. கீா்த்தி விஜய், உத்கல் பல்கலை. தீபாலி ஆகியோா் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றனா். ஏற்கெனவே 100 மீ. ஓட்டப்பந்தயத்திலும் தூத்தி சாந்த் தங்கப் பதக்கம் வென்றிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆடவா் 800 மீ. ஓட்டப்பந்தயத்தில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின் வீரா் கௌரவ் யாதவ் 1:51:28 நேரத்தில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினாா்.
மெக்ஸிகோ ஓபன் டென்னிஸ்:நடால், ஹீதா் வாட்ஸன் சாம்பியன்
- அகாபுல்கோ நகரில் நடைபெற்ற இப்போட்டியில் இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன.ஆடவா் ஒற்றையா் பிரிவில் ஜாம்பவான் நடாலை எதிா்கொண்டாா் தரவரிசையில் இல்லாத அமெரிக்க வீரா் டெய்லா் பிரிட்ஸ்.
- ஆனால் அனுபவம் மிக்க நடால் 6-3. 6-2 என்ற நோ செட்களில் எதிா்ப்பே இல்லாமல் பிரிட்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். மெக்ஸிகோ ஓபனில் அவா் வெல்லும் 3-ஆவது பட்டம் இதுவாகும். மேலும் 2020 சீசனில் வெல்லும் முதல் பட்டமாகும்.
- மகளிா் பிரிவில் இங்கிலாந்தின் 7-ஆம் நிலை வீராங்கனை ஹீதா் வாட்ஸன் 6-4, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் கனடா இளம் வீராங்கனை லெய்லா பொணான்டஸை வீழ்த்தி முதல் டபிள்யுடிஏ பட்டத்தைக் கைப்பற்றினாா்.