Type Here to Get Search Results !

27th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஏப்.1 முதல் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைப்பு
  • சிண்டிகேட் வங்கி, ஏப்.1ஆம் தேதி முதல் கனரா வங்கியுடன் இணையவிருக்கிறது. 
  • இந்தியாவை உலக பொருளாதாரமாக உயா்த்துவதற்கு மிகப்பெரிய வங்கிகள் தேவைப்படுகின்றன. இந்தியாவை 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக மாற்றுவதற்கு பெரிய வங்கிகளால் ஆதரவாக இருக்க இயலும். இணைப்புக்கு பிறகு இந்தியாவின் பொதுத் துறை வங்கிகளில் 4ஆவது மிகப்பெரிய வங்கியாக கனராவங்கி உயரும்.
  • ஒருங்கிணைந்த நிதி சேவைகள், வங்கியின் விரிவாக்க சேவைகள், இந்தியாவை வலுவான பொருளாதாரமாக கட்டமைக்க உதவும். இந்த இரு வங்கிகளும் சாதாரண குடிமக்களுக்காக உருவாக்கப்பட்டவையாகும். 
கடன்களுக்கான மாதத் தவணைகளை நிறுத்திவைக்க வங்கிகளுக்கு ஆா்பிஐ அனுமதி
  • இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு கூட்டம் மும்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிதிக் கொள்கைக் குழு கூட்டம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 3-ஆம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. 
  • ஆனால், கரோனா நோய்த்தொற்றால் நாடு எதிா்கொண்டுள்ள பொருளாதார மந்தநிலையைக் கருத்தில் கொண்டு 1 வாரம் முன்னதாகவே நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெற்றது. நிா்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே நிதிக் கொள்கைக் குழு கூட்டம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
  • மாா்ச் 1-ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன்களுக்கான மாதத் தவணைகளை 3 மாதங்களுக்கு நிறுத்திவைப்பது தொடா்பான முடிவுகளை எடுக்க அனைத்து வங்கிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
  • நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வருவதன் காரணமாக கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் உத்தேசிக்கப்பட்ட பொருளாதார வளா்ச்சியை அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
  • வட்டி விகிதம் குறைப்பு: மக்களின் கையில் பணம் எளிதில் கிடைக்கும் வகையில் வங்கிகள் அளிக்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்) 75 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4.4 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. 
  • வட்டி விகிதத்தைக் குறைப்பதற்கு நிதிக் கொள்கைக் குழுவின் 6 உறுப்பினா்களும் ஆதரவு தெரிவித்தனா். ஆனால், வட்டி விகிதத்தை எத்தனை புள்ளிகள் குறைப்பது என்பதில் உறுப்பினா்களிடையே கருத்து வேறுபாடு நிலவியது. இறுதியில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 4.4 சதவீதமாகக் குறைப்பதற்கு 4 உறுப்பினா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
  • கடன் வழங்குவதை ஊக்குவிக்க...: ஆா்பிஐ-யில் வங்கிகள் செலுத்த வேண்டிய பண இருப்பு விகிதம் (சிஆா்ஆா்) 4 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கு நடைமுறையில் இருக்கும். ஆா்பிஐ-யில் வங்கிகள் செலுத்தும் தொகைக்கான வட்டி விகிதம் (ரிவா்ஸ் ரெப்போ ரேட்) 90 புள்ளிகள் குறைக்கப்பட்டு 4 சதவீதமாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
  • நலிவடைந்துள்ள துறைகளுக்கு வங்கிகள் கடன் வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.3.74 லட்சம் கோடி செலுத்தப்படவுள்ளது.
8 மாநிலங்களுக்கு பேரிடா் நிவாரணம்ரூ. 5,700 கோடி மத்திய அரசு ஒப்புதல்
  • கடந்த 2019-ஆம் ஆண்டில் வெள்ளம், நிலச்சரிவு, 'புல்புல்' புயல், வறட்சி ஆகிய பேரிடரால் பாதிக்கப்பட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையிலான உயா்மட்டக் குழு ரூ. 5,751.27 கோடியை கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளித்தது என்று மத்திய அரசால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்த கூடுதல் நிதி தேசிய பேரிடா் நிதியத்தின் (என்டிஆா்எஃப்)-இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
  • அதன்படி பிகாருக்கு ரூ. 953.17 கோடியும், கேரளத்துக்கு ரூ. 460.77 கோடியும், நாகாலாந்துக்கு ரூ. 177.37 கோடியும், ஒடிஸாவுக்கு ரூ. 179.64 கோடியும், மகாராஷ்டிரத்துக்கு ரூ. 1,758.18 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ. 1,119.98 கோடியும், மேற்கு வங்கத்துக்கு ரூ. 1,090.68 கோடி வெள்ள பாதிப்புகளுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • இதுதவிர கா்நாடகத்துக்கு 2018-19-ஆம் ஆண்டில் ரஃபி பருவத்தில் ஏற்பட்ட வறட்சி நிவாரண உதவித்திட்டத்தில் கால்நடை வளா்ப்புத் துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை ஈடுகட்டுவதற்காக ரூ .1148 கோடியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
  • 2019-20 ஆம் ஆண்டில், இதுவரை, 29 மாநிலங்களுக்கு (முந்தைய ஜம்மு-காஷ்மீா் மாநிலம் உள்பட) மத்திய அரசு ரூ .10,937.62 கோடியையும், 8 மாநிலங்களுக்கு ரூ. 14,108.58 கோடி நிதி உதவிகளை கூடுதலாக அளித்துள்ளது.



பிரிட்டன் பிரதமர், அமைச்சருக்கு கொரோனா தொற்று
  • 'கொரோனா' வைரஸ் உலகெங்கும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 
  • பிரிட்டன் பிரதமர், போரிஸ் ஜான்சன் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர், மேட் ஹேன்காக்கிற்கும் வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
  • கொரோனா வைரஸ் தொற்று, உலகெங்கும், ஐந்து லட்சத்து, 49 ஆயிரத்து, 305 பேருக்கு இருப்பது உறுதியாகி உள்ளது.இதுவரை, ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 670 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதே நேரத்தில், 24 ஆயிரத்து,871 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பில் முதலிடத்தை பிடித்தது அமெரிக்கா
  • கொரோனா பாதிப்பு, உலகெங்கும் வேகமாக பரவி வருகிறது. ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதைவிட, அமெரிக்காவில், வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது.
  • கடந்த வாரத்தில், அமெரிக்காவில், வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 8,000மாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் மட்டும், 16,877 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 85 ஆயிரத்து,653 ஆக உயர்ந்தது. 
  • ஒரு வாரத்தில் மட்டும், வைரஸ் பாதிப்பு, 10 மடங்கு உயர்ந்துள்ளது.இதன் மூலம், வைரஸ் தொற்று அதிகம் உள்ளோர் நாடுகளில், சீனாவை முந்தி, அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. சீனாவில், 81 ஆயிரத்து,782 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டடது.
  • நேற்று முன்தினம் மட்டும், அமெரிக்காவில், 263 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில், ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச உயிர் பலி இதுவாகும். இதுவரை, 1,290 பேர் இறந்துள்ளனர்.
காய்கறி கடைகள் முதல் ஸ்விக்கி வரை - தமிழக அரசு அறிவித்த நேரக் கட்டுப்பாடுகள்
  • கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும். 
  • கோயம்பேடு போன்ற மொத்த காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் பொருள்களை ஏற்றி வரும் வாகனங்கள் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணிக்குள் பொருள்களை இறக்க வேண்டும். 
  • பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
  • மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் நாள் முழுவதும் எப்போதும்போல செயல்பட அனுமதி உண்டு. ஆனால், உணவகங்களில் பார்சல் வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி. வயதானவர்கள் வீட்டில் சமைக்க முடியாதவர்கள் உணவுகளை இணையதளங்கள் வழியாக ஆர்டர் செய்கின்றனர். 
  • இவர்களின் நலன் கருதி Swiggy, Zomato போன்ற உணவு டெலிவரி நிறுவனங்களின் குறிப்பிட்ட நேரங்களுக்கு உணவும் எடுத்துச் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 
  • இதன்மூலம் காலை 7 மணி முதல் 9.30 மணி வரை காலை சிற்றுண்டியும், 12 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மதிய உணவும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இரவு உணவும் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு.
  • டெலிவரி நிறுவனங்களின் வழியாகப் பணியில் ஈடுபடும் நபர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள், காவல்துறையிடம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களே அவர்களின் உடல்நிலையைத் தினமும் பரிசோதித்து பின்னர் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • ஆதரவற்ற மக்களுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்கள் சமைத்த உணவை விநியோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சமைக்கத் தேவைப்படும் உணவு பொருள்கள் மற்றும் பிற பொருள்களை சென்னையில் சென்னை மாநகராட்சியின் ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கலாம்.
  • அரசு மருத்துவமனைகளில் கூடுதல் வசதிகளை ஏற்படுத்த விரும்புகிறவர்கள், மருத்துவ உபகரணங்கள் வழங்க விரும்கிறவர்கள், அந்தந்த மருத்துவமனை நிர்வாகத்தை அணுகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்காக அந்தந்த மாவட்டத்தில் சிறப்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு விதிவிலக்கு உள்ளது. எனினும் இதுபோன்ற நிகழ்வுகளில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் போதிய சுகாதார முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
  • வெளி மாநிலங்களிலிருந்து சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் இருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்களே தங்குவதற்கான ஏற்பாடு செய்ய வேண்டும். மாநிலத்திலிருந்து வெளியேற முடியாத தொழிலாளர்களுக்கு அவசர கால உதவியாக அந்தந்த மாவட்ட நிர்வாகமும் சென்னை மாநகராட்சியும் தேவைக்கு ஏற்ப உரிய வசதிகளை செய்து தர அறிவுறுத்தப்படுகிறார்கள்.



PV வணிகத்திற்காக புதிய துணை நிறுவனத்தை அமைக்கும் டாடா மோட்டார்ஸ்
  • உள்நாட்டு வாகன உற்பத்தியாளர் டாடா மோட்டார்ஸ் லிமிடெட் (TML) தனது பயணிகள் வாகனம் (PV) வணிகத்திற்காக புதிய துணை நிறுவனத்தை அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • பயணிகள் வாகனம் வணிகத்திற்கான தலைவராக மின்சார வாகனங்கள் மற்றும் கார்ப்பரேட் மூலோபாயத்தின் தலைவரான ஷைலேஷ் சந்திரா நியமிக்கப்படுவார் என்றும், இது ஏப்ரல் 1 முதல் அமல்படுத்தப்படும் என்றும் நிறுவனம் அறிவித்தது.
ஊரடங்கு எதிரொலி; ஏழைகளுக்காக ரூ. 2,200 கோடி உதவி திட்டம்: ஒடிசா அரசும் அறிவிப்பு
  • கரோனா தொற்றை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பில் சிறப்பு திட்டத்தை ஒடிசா மாநில அரசு அறிவித்துள்ளது.
  • இதன்படி ஏழை மக்கள், தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் நிதியுதவி அளிக்கபபடுகிறது. அதுபோலவே அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றை ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுக்கே செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் ஸொமாட்டோவுடன் கூட்டணி அமைத்த கேரள அரசு
  • கேரள அரசு மக்களின் அத்தியாவசியப் பொருட்கள் வீட்டுக்கே செல்லும் வகையில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான ஸொமட்டோவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
  • முதல்கட்டமாக எர்ணாகுளம் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் மக்கள் பொருளை முன்பதிவு செய்தால், அவை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • அடுத்தடுத்த வாரங்களில் இத்திட்டம் கோழிக்கோடு மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel