Type Here to Get Search Results !

17th MARCH 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார்: உயர் நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக 8 பேர் பதவியேற்பு
  • சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட நீதிபதிகள் பி.டி.ஆஷா, எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ், ஜி.கே.இளந்திரையன், கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், பி.புகழேந்தி, செந்தில்குமார் ராமமூர்த்தி மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகிய 9 பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரைத்தது.
  • இந்த பரிந்துரையை ஏற்று 9 நீதிபதிகளையும் நிரந்தர நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். இவர்களில், நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் டில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டதால், மீதமுள்ள எட்டு நீதிபதிகளும், இன்று நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 
  • சென்னை உயர் நீதிமன்றத்தில், அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதி பணியிடங்களில் தற்போது, 21 இடங்கள் காலியாக உள்ளன.
ராணுவத்தைப் போன்று கடற்படையிலும் பெண்களுக்கு சம உரிமை வழங்க SC உத்தரவு
  • உச்சநீதிமன்றம், "ஆண் அதிகாரிகளைப் போலவே பெண்களும் திறமையுடன் பயணிக்க முடியும், எந்தவிதமான பாகுபாடும் இருக்கக்கூடாது" என்று கூறியது. 
  • இந்திய கடற்படையில் நிரந்தர கமிஷன் வழங்குவதில் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் இருவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • 14 ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்றிய பெண் அதிகாரிகளுக்கு உயர் பதவி வழங்க வேண்டும். ராணுவத்தில் பெண்களை நியமிப்பதற்கான உத்தரவை நிரந்தரமாக வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 
  • மேலும், பெண்களுக்கு ராணுவத்தில் சமத்துவம் வழங்க மறுக்கும் மத்திய அரசின் வாதத்துக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க மறுக்கும் மனநிலையை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தனர்.



கொனோராவிற்காக புதிதாக google's verily வெப்சைட் அறிமுகம்
  • கூகுளின் துணை நிறுவனமான, வெரிலி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை செய்துகொள்ள ஏதுவாக தனி வெப்சைட்டை அமெரிக்காவில் துவங்கியுள்ளது. கொரோனா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நலனுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. 
  • அதில், ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளதா? பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிப்பது என்பதை அறிய கூகுள் புதிய வெப்சைட் துவங்குவதாக குறிப்பிட்டார். அந்த வகையில், தற்போது, கூகுளின் துணை நிறுவனமான வெரிலி கொரோனா குறித்த வெப்சைட்டை துவங்கியுள்ளது.
  • தற்போது அமெரிக்கா கலிபோர்னியாவில் மட்டும் துவங்கப்பட்டுள்ள இந்த வெப்சைட்டை பயன்படுத்த, அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை கொண்டுள்ளதாகவும், இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், பொதுசுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் கையெழுத்திட வேண்டும் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவனம், கலிபோர்னியா கவர்னர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வெப்சைட் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க தேச முதல் அதிபர் ஷேக் முஜிபுர் ரஹ்மான் 100-வது பிறந்தநாள் விழா: காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார் பிரதமர்மோடி
  • வங்கதேசத்தினரால் `வங்கபந்து' என்றழைக்கப்படும், ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை வெகு விமரிசையாக கொண்டாட அந்நாட்டு அரசு முடிவு செய்தது. கடந்த 1971ல் வங்கதேசம் உருவானபோது அதன் முதல் அதிபராக பொறுப்பேற்று கொண்ட முஜிபுர், பின்னர் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார். 
  • இங்கிலாந்துக்கான வங்கதேச தூதர் சயிதா முனா தஸ்னீம் கூறுகையில், இம்மாதம் 17ம் தேதி வங்கதேசத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. அதே தேதியில் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்த நாளும் கொண்டாடப்படுகிறது. 
  • இதில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினரில் இந்திய பிரதமர் மோடியும் ஒருவராவார். வங்கதேச விடுதலையில் இந்தியா முக்கிய பங்காற்றி உள்ளது. முஜிபுர் ரஹ்மான் அதிபராக இருந்த போது, அப்போதைய இந்திய பிரதமர் இந்திராவுடன் இணைந்து, ஆக்கப்பூர்வநடவடிக்கைகள் எடுத்தனர்'' என்றார்.
  • இருப்பினும், நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்ள, அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 17ம் தேதி வங்கதேச தலைநகர் தாகா செல்வதற்கான பயண திட்டங்கள் வகுக்கப்பட்டன. 
  • ஆனால், வங்கதேசத்திலும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளதை தொடர்ந்து, பிரதமர் மோடியின் அந்நாட்டு பயணத் திட்டம் ரத்து செய்தார். 
  • இந்நிலையில், வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100 வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்க உள்ளார். மேலும், பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
வங்கி மின்னணு பரிவர்த்தனைகளை கிராம மக்களுக்கு விளக்க 33 நிதி கல்வியறிவு மையம்: 1.37 லட்சம் பேர் பயனடைந்ததாக தகவல்
  • பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு, மின்னணு (டிஜிட்டல்) பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. ஆனால், கிராமப்புற மக்களிடையே இதுகுறித்து போதிய அளவுக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லை.
  • குறிப்பாக, டெபிட் கார்டு மூலம் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பது, இணையதளம் மூலமான வங்கி பரிவர்த்தனைகள், ஆர்டிஜிஎஸ், நெஃப்ட் மற்றும் செயலிகள் மூலம் மூலம் பணப்பரிமாற்றம் உள்ளிட்டவை அம்மக்களை சென்றடையவில்லை.
  • இப்பிரச்சினைக்குத் தீர்வு காண, கிராமப் பகுதிகளில் நிதிகல்வியறிவு மற்றும் கடன் ஆலோசனை மையங்களை அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. 
  • இதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கனரா வங்கி, இந்தியன் வங்கி மற்றும் எஸ்பிஐ ஆகியவை தமிழகம் முழுவதும் 30 மாவட்டங்களில் 33 மையங்களை அமைத்துள்ளன. இதைத்தவிர, தமிழ்நாடு கிராம வங்கி28 மையங்களை நிறுவியுள்ளது.
  • இந்த மையங்கள் மூலம் மாதத்துக்கு 2 முகாம்களை நடத்தி மின்னணு பரிவர்த்தனைகள் குறித்து விளக்கமளிக்க வேண்டும். மேலும் விவசாயிகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்தக் குடிமக்கள் ஆகியோருக்கென சிறப்பு முகாம்களை நடத்தவும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
  • இதன்படி, பிரதி மாதம் 3-வதுவெள்ளிக்கிழமை இந்த முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாம்கள் மூலமாக இதுவரை 1.37 லட்சம் கிராமப்புற மக்கள் பயனடைந்துள்ளனர். வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel