வெளியுறவுத்துறை பணி மையத்தின் பெயர் 'சுஷ்மாஸ்வராஜ் பணி மையம்' என மாற்றம்
- டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறை பணி மையத்தின் பெயர் 'சுஷ்மாஸ்வராஜ் பணி மையம்' என மாற்றப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
- பிரவாசி பாரதிய கேந்திரத்தின் பெயர் 'சுஷ்மா ஸ்வராஜ் பவன்' என சுஷ்மா ஸ்வராஜின் பிறந்தநாளையொட்டி பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
ஏர்-இந்தியாவின் புதிய தலைவர் ராஜீவ் பன்சால்
- ஏர்-இந்தியாவின் புதிய தலைவராக, ஐஏஎஸ்., அதிகாரி ராஜீவ் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஏர்-இந்தியா தலைமை நிர்வாக இயக்குநராக இருந்த அஸ்வானி லோகானியின் பதவிக்காலம் முடிவடைந்ததால், அப்பதவி காலியாக இருந்தது.
- இந்நிலையில், ஏர்-இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக ஐஏஎஸ்., அதிகாரி ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவையின் நியமனக் குழு இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- 1988ம் ஆண்டு நாகலாந்து கேடரின் ஐஏஎஸ் பேட்ஜ் அதிகாரியான இவர், தற்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக உள்ளார்.
உலகின் பெரிய ஸ்டேடியம்: டிரம்ப் திறக்கிறார்
- குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உலகின் மிகப்ெபரிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் 700 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரிலான இந்த அரங்கில் மொத்தம் ஒரு லட்சத்து 10ஆயிரம் பேர் உட்கார்ந்து போட்டியை ரசிக்கலாம்.
- இந்த அரங்கு முழுவதும் இரவை பகலாக்கும் ஒளிரும் மின்வசதி செய்யப்பட்டுள்ளது. அப்படி ஒளிரும் போது இந்த அரங்கில் எங்கும் நிழலையே பார்க்க முடியாதாம்.
- சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த அரங்கை பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், இந்தியா வரவுள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிப்.24ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.