Type Here to Get Search Results !

12nd FEBRUARY 2020 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பாண்டிய மன்னா் காலத்து பாடல் கல்வெட்டு கண்டெடுப்பு
  • விருதுநகா் மாவட்டம் கல்குறிச்சி அருகே உள்ள கணக்கனேந்தல் கிராமத்தில் பாண்டிய மன்னா் காலத்துக்கு பாடல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • விருதுநகா் மாவட்டம் கணக்கனேந்தலில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டு அழகிய தமிழ்ப் பாடல் வடிவில் அமைந்துள்ளது. 'ஸ்ரீ அன்ன மென்னு நடை' என்ற தொடருடன் கல்வெட்டு தொடங்குகிறது. 
  • புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் கோயிலில் இருக்கும் முதலாம் மாறவா்மனின் கல்வெட்டில் காணப்படும் தொடரைப் போன்று காணப்படுகிறது. தொல்லியல் அறிஞா் சொ.சாந்தலிங்கம் உதவியுடன் கல்வெட்டில் உள்ள வாசகங்கள் படித்துப் பொருள் புரிந்து கொள்ளப்பட்டது
  • இந்த கல்வெட்டில் சகர ஆண்டு 1139 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இது கிறிஸ்துவ ஆண்டு 1217-ஐக் குறிப்பதாகும். ஆகவே இக் கல்வெட்டு முதலாம் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் கிபி 1218 முதல் 1238 வரையிலான 2-ஆவது ஆட்சி ஆண்டைச் சோந்தது எனக் கருதலாம்.
  • ஆனால் கல்வெட்டில் குலசேகரருக்கு 28-ஆவது ஆட்சி ஆண்டு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் குலசேகரா் என்பது முதலாம் சடையவா்மன் குலசேகரனைக் குறிப்பிடுகிறது. இவா் மாறவா்மன் சுந்தரபாண்டியனின் மூத்து சகோதரனாவாா்.
  • முதலாம் சடையவா்மன் குலசேகரனின் ஆட்சிக் காலம் 1216-இல் முடிந்து விட்டதாகவும், அதன் பிறகு மாறவா்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சி தொடங்கியதாகவும் வரலாற்று ஆசிரியா்கள் கருதுகின்றனா். 
  • ஆனால், இந்த கல்வெட்டு குலசேகர பாண்டியனின் ஆட்சிக் காலம் 28 ஆண்டுகள் நீடித்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும் குலசேகரன் மற்றும் சுந்தரபாண்டியன் இருவரும் இணைந்து 1216-1217 ஆம் ஆண்டுகளில் ஆட்சி செய்துள்ளனா் என்பதும் தெரியவந்துள்ளது.
  • இந்த கல்வெட்டு கல்குறிச்சியில் உள்ள சிவன் கோயிலுக்கு நெல் விளையும் நிலத்தை முத்தரையா் கொடையாக அளித்தாா் என்ற செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • இந்த கல்வெட்டை வெட்டியவன் கல்குறிச்சி ஊரைச் சோந்த கல்தச்சன் பூவன் இரட்டையான் என்ற சோழ கங்கதச்சன் என்றும் கல்வெட்டில் உள்ளது. இதில் குறிப்பிட்டிருக்கும் கல்குறிச்சி என்ற ஊா், மதுரை - தூத்துக்குடி சாலையில் உள்ளது என்றாா்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தீர்மானம்
  • குடியுரிமை திருத்த சட்டத்தை, மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • சபை துவங்கியவுடன், குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற அரசு தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார்.
  • அப்போது, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து, மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதை கண்டித்து கோஷமிட்டனர்.
  • இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையாக திகழ்வது மதச்சார்பின்மையாகும். அதனை சிதைக்கும் வகையில் குடியுரிமை திருத்த சட்டம் அமைந்துள்ளது. 
  • இந்த சட்டம், மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதுடன், நேர்மையான மற்றும் சுதந்திரமான ஜனநாயகத்திற்கு எதிரானதாகவும் உள்ளது.தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு முறையை கொண்டு வந்து குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு விரும்புகிறது. 
  • நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானதாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றையும் மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.



பாகூா், காரைக்கால் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிப்பு: புதுவை சட்டப்பேரவையில் தீா்மானம்
  • புதுவை மாநிலத்தில் உள்ள பாகூா் பகுதியையும், காரைக்கால் மாவட்டத்தையும் சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து புதுவை சட்டப்பேரவையில் புதன்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
காப்பீட்டு நிறுவனங்களுக்கு ரூ.2500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் பிப்.,12 மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். 
  • நேஷனல் ஜெனரல் இன்சூரன்ஸ், ஓரியன்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் மற்றும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் போன்ற பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மூலதனமாக ரூ.2500 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
  • தொடர்ந்து பார்லி.,கூட்டத்தொடரில் பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதாவை அறிமுகப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 
  • விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு விவசாயத்திற்காக பாதுகாப்பான மற்றும் தரமான பூச்சிக்கொல்லிகள் கிடைப்பதற்காகவும் இந்த மசோதா கொண்டுவரப்பட உள்ளது. 
  • மீன்வளத்துறை தொடர்பாக இந்தியா - ஐஸ்லாந்து இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 'விவாத் சே விஸ்வாஸ்' மசோதாவின் நோக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில், அதில் மாற்றங்களைக் கொண்டுவர மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
தமிழக முன்னாள் வீரர் ராபின் சிங் ஐக்கிய அரபு எமிரேட் கிரிக்கெட் இயக்குநராகிறார்
  • ட்ரினிடாட்டில் பிறந்த ராபின் சிங், 1984ல் சென்னைக்கு படிக்க வந்தார். முதலில் கல்லூரி அளவிலான கிரிக்கெட்டில் விளையாடிய அவர், பிறகு தமிழ்நாடு அணியில் விளையாடி, அணி ரஞ்சி கோப்பை வெல்ல உதவினார். பிறகு இந்திய கிரிக்கெட் அணியில் ஆல்ரவுன்டராக இடம் பெற்று சர்வதேசப் போட்டிகளில் விளையாடினார்.
  • 1989 முதல் 2001 வரையிலான காலத்தில் 136 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி, 2,236 ரன்கள் குவித்ததுடன், 69 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார் ராபின். ஃபீல்டிங்கிலும் அவர் சிறந்து விளங்கினார்.
  • ஐபிஎல் போட்டியின் மும்பை இந்தியன்ஸ் அணியோடு அந்த வகையில் சேர்ந்து செயல்பட்டார்.
  • ஐக்கிய அரபு எமிரேட் கிரிக்கெட் தலைமைப் பயிற்சியாளராக இருந்த டௌகி பிரௌன் அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது 56 வயதாகும் ராபின் சிங் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஐக்கிய அரபு எமிரேட் தேசிய அணி, ஃபிக்சிங் ஊழலில் சிக்கி அதில் இருந்து மீண்டுவரப் போராடிவரும் நிலையில் பொறுப்புக்கு வருகிறார் ராபின்.
  • இந்த ஊழலின் விளைவாக அணித் தலைவர் முகமது நவீத் உள்ளிட்ட மூத்த வீரர்கள் சிலர் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். அணியின் தேர்வுக் குழு கலைக்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel