Type Here to Get Search Results !

9th DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இளசை மணியனுக்கு 'தினமணி'யின் மகாகவி பாரதியாா் விருது 
  • மகாகவி பாரதியாரின் 138-ஆவது பிறந்த நாளையொட்டி, அவா் பிறந்த எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் இரண்டாவது ஆண்டாக தினமணி நாளிதழ் சாா்பில் புதன்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கலந்துகொண்டு பாரதி ஆய்வாளா் இளசை மணியனுக்கு மகாகவி பாரதியாா் விருதை வழங்க இருக்கிறாா்.
சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
  • 17வது சர்வதேச திரைப்படவிழா டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. உலக சினிமாவின் நாயகனாக விளங்கும் கமலஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசனை பாராட்டி 'வாழ்நாள் சாதனையாளர் விருது'வழங்கப்பட உள்ளது.
  • 1986ல் கன்னடத்தில் வெளியான 'தபாரனா கதே' திரைப்படத்திற்காக தேசிய விருதும், கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றவர்.
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றப்பட்டது. 
  • இறுதியில் மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பி.க்களும், எதிராக 80 எம்.பி.க்களும் வாக்களித்தனர். இதைத் தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.



தத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ஒப்புதல்
  • தத்ரா நாகர் ஹைவேலி மற்றும் டாமன் டையூ ஆகிய யூனியன் பிரதேசங்களை ஒரே யூனியன் பிரதேசமாக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
  • குஜராத் அருகே அடுத்தடுத்து உள்ளவை தத்ரா நாகர் ஹைவேலி, டாமன் டையூ யூனியன் பிரதேசங்கள். 35 கி.மீ தொலைவில் உள்ள இந்த இரு யூனியன் பிரதேசங்களையும் ஒரே யூனியன் பிரதேசமாக்க மத்திய அரசு முடிவு செய்தது.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டதால் மொத்த யூனியன் பிரதேசங்கள் எண்ணிக்கை 9 ஆனது. தற்போது 8 ஆக குறைந்துள்ளது.
நிறைவேறியது ஆயுத சட்டத்திருத்த மசோதா
  • லோக்சபாவில் ஆயுத சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. இச்சட்டத்திருத்தத்தின்படி, துப்பாக்கி உரிமம் வைத்திருப்போர் இனி 2 ஆயுதங்களை வைத்திருக்க முடியும்.
திருவாங்கூர் தேவசம் போர்டின் இடைக்கால ஆணையராக பி.எஸ்.திருமேனி நியமனம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
  • திருவாங்கூர் தேவசம் போர்டின் இடைக்கால ஆணையராக பி.எஸ்.திருமேனியை நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
  • கேரள அரசு பரிந்துரைத்த அதிகாரிகள் பட்டியலில் இருந்து இடைக்கால ஆணையராக பி.எஸ்.திருமேனியை உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
தண்ணீர் தரத்தில் இந்தியா 120வது இடம்: நிதி ஆயோக்
  • நிதிஆயோக் கடந்த ஆண்டு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நாட்டில் 60 கோடி மக்கள் தண்ணீர் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். தண்ணீர் தர ஆய்வு குறித்து 122 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியா 120வது இடம் பெற்று மிக மோசமான நிலையில் உள்ளது. 
  • கிட்டத்தட்ட 70 சதவீத நீர், இந்தியாவில் மாசுபட்டுள்ளதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.5வது நீர்பாசன கணக்கெடுப்பின்படி, நாட்டில் 20.52 மில்லியன் கிணறுகள் உள்ளன. இதில் தோண்டப்பட்ட கிணறுகள், ஆழமற்ற குழாய் கிணறுகள், ஆழமான குழாய் கிணறுகள் மற்றும் நடுத்தர குழாய் கிணறுகள் அடக்கம். 



'பிரபஞ்ச அழகி'யானார் தென் ஆப்பிரிக்க பெண்
  • அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் பிரபஞ்ச அழகி போட்டி நடந்தது. உலக நாடுகளை சேர்ந்த 90 பெண்கள் போட்டியிட்டனர். இதில் இறுதிச்சுற்றுக்கு இந்த அழகி வர்டிகா சிங் உட்பட 20 பேர் தேர்வாகினர். 
  • இவர்களிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. இதில் சிறப்பாக பதிலளித்த தென் ஆப்பிரிக்க பெண் டுன்சி பிரபஞ்ச அழகியாக அறிவிக்கப்பட்டார். 
  • 2வது இடத்தை மெக்சிகோவின் சோபியா அராகனும், 3வது இடத்தை ப்ரூட்டோ ரிகோவை சேர்ந்த மேடிசனும் பெற்றனர்.
ஊக்க மருந்து சோதனை முறைகேட்டில் சிக்கியதால் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்க 4 ஆண்டுகள் தடை
  • மாஸ்கோவிலுள்ள ஆய்வகத்தில் வீரர்களுக்கு நடைபெற்ற ஊக்க மருந்து சோதனையில் ரஷ்ய அதிகாரிகள் முறைகேடு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டது. 
  • சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் நிர்வாக குழு கூட்டத்தில், ரஷ்யாவுக்கு 4 ஆண்டுகள் தடை விதிக்க ஒரு மனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் அடுத்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா கலந்து கொள்ள முடியாது. மேலும் சர்வதேச அளவிலான போட்டிகளை ரஷ்யா நடத்தவும் முடியாது. தடை உத்தரவை எதிர்த்து விளையாட்டுப் போட்டிகளுக்கான நீதிமன்ற தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய ரஷ்யாவிற்கு 21 நாட்கள் அவகாசம் உள்ளது.
கபடி: இந்திய பெண்கள் 'தங்கம்'
  • நேபாளத்தில் 13வது தெற்காசிய விளையாட்டு நடக்கிறது. இதில் இன்று (டிச.,09) நடந்த பெண்கள் கபடி போட்டி பைனலில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீராங்கனைகள் முடிவில் 50-13 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வென்றனர். 
  • கால்பந்தில் கலக்கல் பெண்கள் கால்பந்து போட்டியின் பைனலில் இந்தியா, நேபாள அணிகள் மோதின. 18வது நிமிடத்தில் இந்தியாவின் பாலா தேவி முதல் கோல் அடித்தார். முதல் பாதியில் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது பாதியில் இந்தியாவின் ரத்தன்பாலா 56வது நிமிடம் தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 
  • முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
  • இதுவரை இந்தியா 138 தங்கம், 80 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 260 பதக்கங்கள் வென்றுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel