Type Here to Get Search Results !

30th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் - விருதுகள் வழங்கி கவுரவித்த மத்திய அரசு
  • உடல் உறுப்பு தானத்தில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழகத்திற்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருதை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்சவர்தனிடம் இருந்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். டெல்லியில் பத்தாவது இந்திய உடல் உறுப்பு தான தின விழா நடைபெற்றது.
  • அதில், உடல் உறுப்பு தானத்தில் மிக சிறப்பாக செய்யக்கூடிய சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு விருதும், இரண்டு கைகளை இழந்தவருக்கு, இறந்தவரின் கைகளை பொருத்தி அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் ரமாதேவிக்கு விருதும் என்பன உள்ளிட்ட 3 விருதுகள் தமிழகத்திற்கு கிடைத்தன. தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பேப்பரெக்ஸ் எக்ஸ்போ' சர்வதேச காகித கண்காட்சி
  • டில்லியில், 'பேப்பரெக்ஸ்' எனப்படும், சர்வதேச காகிதக் கூழ், காகிதம் மற்றும் துணை பொருட்கள் துறையின், 14வது பிரமாண்ட கண்காட்சி, டிச., 3ல் துவங்குகிறது.
  • உலகளவில், காகிதம் மற்றும் அதுசார்ந்த துணை பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இத்துறையின் புதிய கண்டுபிடிப்புகள், நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட வற்றை தெரிந்து கொள்ளவும், சந்தை வாய்ப்புகளை அறிந்து, பயன்படுத்தவும், 'பேப்பரெக்ஸ்' கண்காட்சி உதவும்.பத்திரிகை தொழிலுக்கு தேவையான காகிதம், வர்த்தகத்திற்கான அட்டைப் பெட்டி, நுகர்வோர் பயன்பாட்டிற்கான, 'டிஷ்யூ' காகிதம் ஆகிய மூன்று துறைகளுக்கு, இக்கண்காட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இதில், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா உள்ளிட்ட, 25 நாடுகளைச் சேர்ந்த, 700க்கும் அதிகமான நிறுவனங்கள், பங்கேற்று, அவற்றின் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளன. 
  • இக்கண்காட்சியில், காகிதம் மற்றும் அதுசார்ந்த துறைகளின் வளர்ச்சி, வர்த்தக வாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பான கருத்தரங்குகள், கலந்தாய்வு கூட்டங்களும் நடைபெறும். 



ரூ.5,027 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் கையெழுத்து
  • தமிழக தொழில்துறை சாா்பில் 'தொழில் வளா் தமிழ்நாடு' என்ற தலைப்பில் தொழில் துறையில் முதலீடு மற்றும் திறனாய்வு மாநாடு கிண்டியில் சனிக்கிழமை நடைபெற்றது. 
  • தமிழக அரசு, உலக அளவில் தொழில் முதலீடுகளை ஈா்க்கும் வகையில் முதல் உலக முதலீட்டாளா்கள் மாநாடு கடந்த 2015-இல் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இரண்டாம் முறையாக கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் உலக முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மூலம் ரூ. 3 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளன. 
  • இதன்படி, 219 திட்டங்கள் செயல்படுவதற்கான தயாா் நிலையில் உள்ளன. உலக முதலீட்டாளா் மாநாடு முடிந்து 10 மாதங்களில் ரூ. 19 ஆயிரம் கோடி முதலீட்டில் 63 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி 83,800 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • இதன்படி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட நோக்கியா நிறுவன தொழிற்சாலையை சால்காம்ப் நிறுவனம் வாங்கி மின்னணு சாதன உற்பத்தியில் ஈடுபட உள்ளது. ரூ. 2,500 கோடி முதலீட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மின்னணு சாதன உற்பத்தியைத் தொடங்கி உள்ளது. இதன் மூலம் 20 ஆயிரம் போ வேலைவாய்ப்பு பெறுவா் என்றாா்.
  • ரூ.5,027 கோடி முதலீட்டில் 2,0351 போ வேலைவாய்ப்பு பெறும் வகையில் 9 தொழில் நிறுவனங்களுடனும், ரூ.28.43 கோடி மதிப்பில் நாகப்பட்டினம் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் 3 புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள், டிஆா்டிஓ, சென்னை ஐஐடியுடன் இணைந்து தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் பெருவழித் திட்டத்துக்கும் முதல்வா் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • ஏற்கெனவே புரிந்துணா்வு ஒப்பந்தம் போடப்பட்ட 3 அமெரிக்க நிறுவனங்களின் திட்டங்களையும், ரூ.60 கோடி மதிப்பில் 3 உயா்நிலை திறனாய்வு மேம்பாட்டு மையங்களும் தொடங்கப்பட்டன.
முதன்முறையாக இரவில் சோதனை செய்யப்பட்ட அக்னி-3 ஏவுகணை
  • ஒடிசா மாநில கடற்பகுதியில் உள்‌ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. அக்னி-3 ஏவுகணை, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன்கொண்டதாகும். 
  • சுமார் 17 மீட்டர் அகலமும்‌ 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
  • அக்னி-3 ஏவுகணையின் செயல்திறனைக் கண்டறிய ஏற்கனவே மூன்று முறை சோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது முதன்முறையாக இரவில் சோதித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கூறியுள்ளது.
டெல்லியில் இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை
  • டெல்லியில் இந்தியா-ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் இரு நாடுகளுக்கிடையே கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டோஷிமிட்ஸு ஆலோசனை நடத்தி வருகின்றனர்.



வரும் 2021 முதல் தங்க நகைகளுக்கு 'BIS' ஹால்மார்க் முத்திரை கட்டாயம்
  • தங்க நகைகள் மற்றும் தங்கத்தில் செய்யப்படும் கலைப்பொருள்களுக்கு வரும் 2021 ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஹால்மாா்க் முத்திரை பெறுவது கட்டாயம் என்று மத்திய நுகா்வோா் விவகாரத்துறை அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வான் கூறியுள்ளாா்.
  • கடந்த 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் தரச்சான்று அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் இப்போது புழக்கத்தில் உள்ள தங்க நகைகளில் 40 சதவீதம் ஹால்மாா்க் தரச்சான்று முத்திரை கொண்டதாகும். 
  • இப்போது 14 கேரட், 18 கேரட், 22 கேரட் என மூன்று பிரிவுகளில் தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரை அளிக்கப்படுகிறது. இதில் 22 கேரட் தங்க நகைகள்தான் பெருமளவில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
  • மூன்று இலக்க எண், ஆயிரம் வடிவத்திற்கு ஒரு பகுதியிலுள்ள தங்கத்தின் தூய்மையைக் குறிக்கிறது; 958, 916, 875, 833,792,750,708,667, 585, 375. இவ்வாறு ஒரு BIS 916 ஹால்மார்க் 1000 க்கு 916 தூய்மைக்கு சான்றளிக்கும், அதாவது 91.6%, இது 22 காரட் தூய்மை தங்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு பட இயக்குனருக்கு ஐஎப்எப்ஐ., விருது
  • கடந்த சில நாட்களாக கோவாவில் 50 இந்திய சர்வதேச திரைப்பட திருவிழா நடைபெற்றது. 26 நாடுகளிலிருந்து சுமார் 190 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. அவற்றில் 90 படங்கள் இந்திய படங்கள் தான். 
  • இந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஜல்லிக்கட்டு திரைப்படத்தின் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவருக்கு ஐஎப்எப்ஐ., 2019 சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.
  • இவர், ஏற்கனவே 49வது சர்வதேச திரைப்பட விழாவிலும் தான் இயக்கிய இ-மா-யூ என்கிற படத்திற்காக விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை
  • டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 7,000 ரன்களை கடந்து ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் சாதனை படைத்துள்ளார். 126 இன்னிங்ஸில் 7,000 ரன்களை கடந்து இங்கிலாந்தின் வாலி ஹேமண்ட் சாதனையை ஸ்டீவ் ஸ்மித் முறியடித்துள்ளார்.
  • 7000 ரன்களை கடந்த 11வது ஆஸ்திரேலியா வீரர் என்ற பெருமையை பெற்றார் ஸ்டீவன் ஸ்மித். 2010ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களமிறங்கினார். ஸ்மித் என்பது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel