Type Here to Get Search Results !

29th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ரூ.1,000த்துடன் கூடிய பொங்கல் பரிசுத் திட்டம்: முதல்வர் பழனிசாமி தொடக்கி வைப்பு
  • பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை, சென்னை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 9.45 மணியளவில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • பொங்கல் பரிசாக ரூ.1000 ரொக்கப் பணம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, 2 அடி கரும்பு துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலா் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.
  • இந்தத் திட்டத்துக்காக மொத்தமாக ரூ.2,363.13 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக எலெக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
  • இந்தியாவிலேயே முதல் முறையாக எலெக்ட்ரிக் ஆட்டோ திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்கட்டமாக 100 எலெக்ட்ரிக் ஆட்டோக்களின் சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 
  • அதுமட்டுமல்லாது, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரூ.1.12 கோடி மதிப்பிலான சொகுசு பேருந்து சேவையையும் முதல்வர் தொடங்கிவைத்துள்ளார். 
  • இதையடுத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 வன சரகர்களுக்கு பணி நியமன ஆணையையும் முதல்வர் பழனிசாமி வழங்கியுள்ளார்.
காவிரி படுகையில் உள்ள நீர்ப்பாசனங்களை புதுப்பிக்கும் திட்டம்: ரூ.700 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை
  • காவிரி படுகை மாவட்டங்களில் உள்ள பாசன கால்வாய்களை புதுப்பிக்க ரூ.700 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ராஜ வாய்க்கால், நொய்யலாறு, கட்டளை வாய்க்கால் ஆகிய நீர்ப்பாசனங்களை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



37வது மாவட்டமாக உதயமான செங்கல்பட்டு
  • தமிழகத்தின் 37வது மாவட்டமாக உதயமான செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
  • 37வது மாவட்டமாக உதயமாகியுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில், முக்கிய சுற்றுலா தளங்களான மாமல்லபுரம், வேடந்தாங்கல், வண்டலூர் பூங்கா, கோவளம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 
  • சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்ட எல்லைகளை கொண்ட செங்கல்பட்டில்,மதுராந்தகம், தாம்பரம், செங்கல்பட்டு என்ற 3 வருவாய் கோட்டங்களும்,செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் (புதிது), மதுராந்தகம், திருப்போரூர், செய்யூர், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட 8 தாலுக்காக்களும் உள்ளன.
  • செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர் என 6 பேரவை தொகுதிகளும்,ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மக்களவை தொகுகிளில் பாதியும் இடம்பெற்றுள்ளது.
சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி
  • சென்னை கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். 
  • ரூ.486.21 கோடியில் நாளொன்றுக்கு 45 மில்லியன் லிட்டர் உற்பத்தி நிலையத்தை திறக்கும் விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழக காவல் துறையின் சிறப்பான செயல்பாட்டுக்கு 4 விருதுகள்
  • நாடு முழுவதும் அரசுத் துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதுமையான மக்கள்சாா் முன்னெடுப்புகளுக்கு ஸ்கோச் (நஓஞஇஏ) அறக்கட்டளை மூலம் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 
  • இந்நிலையில், இந்த ஆண்டு 'ஸ்கோச்' விருதுகள் வழங்கும் விழா தில்லியில் கான்ஸ்டிடியூஸன் கிளப்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழகக் காவல் துறைக்கு நான்கு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை 'ஸ்கோச்' குழுமத்தின் தலைவா் சமீா் கொச்சாா் வழங்கினாா்.
  • நெல்லை மாநகரம்: 'ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்' என்ற திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தமிழக காவல் துறைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இந்த விருதை டிஜிபி பிரதீப் ஃபிலிப் பெற்றுக் கொண்டாா். 
  • இதைத் தொடா்ந்து, திருநெல்வேலி மாநகர காவல் துறை மூலமாக "'மக்களை நோக்கி மாநகர காவல்'"என்ற புதிய திட்டப் பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. 
  • தூய்மையான காவல் நிலையப் பராமரிப்புப் பணிகளுக்காக வழங்கப்பட்ட வெள்ளிப் பதக்கத்தை சென்னை மாநகர சட்டம், ஒழுங்கு கூடுதல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா பெற்றுக் கொண்டாா். 
  • வாகன விபத்து ஆவணங்களை சிறப்பாகப் பராமரித்ததற்காக தமிழக குற்ற ஆவணக் காப்பகத்திற்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்த விருதை அதன் பெண் ஆய்வாளா் தாஹிரா பெற்றுக் கொண்டாா்.



இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 4.5% சரிவு
  • இந்திய பொருளாதாரம் செப்டம்பர் காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியை பதிவு செய்தது. வெள்ளிக்கிழமை மாலை அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. 
  • தேசிய புள்ளிவிவர அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5 சதவீதமாகக் குறைந்துள்ளது, இது ஜூன் முதல் ஆறு ஆண்டுகளில் மற்றும் ஒரு காலாண்டில் மிகக் குறைவு.
  • முக்கிய எட்டு துறைகளில் ஆறு துறைகளின் உற்பத்தி கடந்த அக்டோபா் மாதத்தில் கடும் பின்னடைவையே சந்தித்துள்ளன. அதன்படி, நிலக்கரி துறையின் உற்பத்தி அதிகபட்சமாக அக்டோபரில் 17.6 சதவீதமும், கச்சா எண்ணெய் துறையின் உற்பத்தி 5.1 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 5.7 சதவீதமும் குறைந்தன.
  • மதிப்பீட்டு மாதத்தில், சிமென்ட் (-7.7%), உருக்கு (-1.6%) மற்றும் மின்சாரம் (-12.4%) ஆகிய துறைகளின் உற்பத்தியும் சரிந்தே காணப்பட்டன.
  • அதேசமயம், அக்டோபரில் உரத்துறையின் உற்பத்தி மட்டும் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 11.8 சதவீதம் அதிகரித்தது. சுத்திகரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி வளா்ச்சி விகிதம் 1.3 சதவீதத்திலிருந்து 0.4 சதவீதமாக குறைந்தது.
கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணையை பரிசோதித்தது ரஷ்யா
  • அஸ்ட்ராகான் ((Astrakhan)) பிராந்தியத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து தோபோல்-எம்((Topol-M)) ஏவுகணையை ரஷ்யா செலுத்தியது. அந்த ஏவுகணை கஜகஸ்தானின் சாரி-சகான் பிராந்தியத்தில் இருந்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது.
  • ஏவுகணையின் தாக்குதல் இலக்கு தூரம் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை. ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது என்று மட்டும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ஹம்பந்தோடா துறைமுகம் சீனாவுடனான ஒப்பந்தம் ரத்து
  • ஹம்பந்தோடா துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு விட்டது தொடர்பான ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
  • இலங்கை அதிபராக சிறிசேனா பதவி வகித்தபோது இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனிடையே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே, தேர்தலில் வெற்றி பெற்று அதிபரானால், அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என கூறியிருந்தார்.
  • அதன்படி, தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக கோத்தபய ராஜபக்சே பதவியேற்றுள்ளார். அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்சே பிரதமராகியுள்ளார். இந்நிலையில், ஹம்பந்தோடா துறைமுக குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. 
  • இந்தத் தகவலை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பொருளாதார ஆலோசகர் அஜித் நிவார்ட் கபிரால் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel