- 2019-ம் ஆண்டு, இன்னும் மூன்று நாள்களில் நிறைவடைந்து புதிய ஆண்டு பிறக்க உள்ளது. இந்த ஆண்டு, இந்திய ரயில்வே துறைக்கு மிகவும் சிறப்பான ஆண்டாக அமைந்துள்ளதாக அந்நிர்வாகம் அறிவித்துள்ளது.
- இந்திய ரயில்வே போக்குவரத்து வரலாற்றில் 2019-ம் ஆண்டு, அதிக பாதுகாப்பான ஆண்டாக இருந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரங்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
- அதன்படி,`2019-ம் ஆண்டில் ஏற்பட்ட ரயில் விபத்துகளில் எந்த ஒரு பயணியும் உயிரிழக்கவில்லை. கடந்த 2018-19 ம் ஆண்டு, 16 பேர் உயிரிழந்தனர். அவர்களில் அதிகமானோர் ரயில்வே ஊழியர்கள். இதே எண்ணிக்கை 2017-18 ம் ஆண்டில் 28 ஆகவும் 2016-17- ம் ஆண்டில் 195 ஆகவும் இருந்தது.
- 1990-95-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு ரயில் விபத்தினால் உயிரிழப்பவர்களின் சராசரி எண்ணிக்கை 500-க்கும் மேல் இருந்துள்ளது.
- அது, பத்து ஆண்டுகளுக்குப் பிறகான புள்ளிவிவரத்தில், அதாவது 2013-18-ம் ஆண்டுகளில், ஓர் ஆண்டுக்கு சராசரியாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை 110 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,500 ஆகவும் குறைந்துள்ளது.
2019 பாதுகாப்பான ஆண்டு - ரயில்வே துறை / MOST SAFEST YEAR OF RAILWAY 2019
December 29, 2019
0
Tags