Type Here to Get Search Results !

1ST DECEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழகம், கேரளத்தில் 544 ரயில் நிலையங்களில் இலவச அதிவேக வைஃபை சேவை
  • தெற்கு ரயில்வேயில் 4,900 கி.மீ. நீளத்துக்கு ஆப்டிகல் ஃபைபா் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைந்த சில மண்டலங்களில் தெற்கு ரயில்வே ஒன்றாக உள்ளது. 
  • தெற்கு ரயில்வேயில் தமிழகம், கேரளத்தில் உள்ள 544 ரயில் நிலையங்களில் அதிவேக வை-பை வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களுக்கு வருகைதரும் மக்களுக்கு இந்த வைஃபை சேவை உதவியாக இருக்கும்.
நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டியது
  • கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டி சாதனை படைத்துள்ளது. மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியை தாண்ட வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால், கடந்த சில மாதங்களாக வசூல் குறைந்து விட்டது. 
  • தொடர்ந்து 3 மாதமாக சரிவை சந்தித்தது. கடைசியாக அக்டோபரில் 95,380 கோடி வசூல் ஆனது. தொடர்ந்து 3 மாத சரிவுக்கு பிறகு கடந்த மாதம் ஜிஎஸ்டி 1,03,492 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 
  • முந்தைய ஆண்டு நவம்பரில் இது 97,637 கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் வசூல் 6 சதவீதம் அதிகரித்துள்ளது. பண்டிகை சீசன் காரணமாக வசூல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 
  • கடந்த மாத ஜிஎஸ்டி வசூலில், மத்திய ஜிஎஸ்டி 19,592 கோடி, மாநில ஜிஎஸ்டி 27,144 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி 49,028 crore கோடி, செஸ் 7,727 கோடி அடங்கும். 2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. 
  • அதில் இருந்து கடந்த மாதத்தையும் சேர்த்து மொத்தம் 8 மாதங்கள் மட்டுமே ஜிஎஸ்டி வசூல் 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. இதுபோல் கடந்த மாதம் 30ம் தேதி வரை, ஜிஎஸ்டிஆர் 3பி படிவத்தை 77.83 லட்சம் பேர் தாக்கல் செய்துள்ளனர். 



2020, 'ஜி - 20' மாநாடு சவுதியில் நடக்கிறது
  • அடுத்த ஆண்டுக்கான, 'ஜி - 20' மாநாடு, மத்திய கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை நடத்தும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, சவுதி அரேபியா பெற்றுள்ளது.உலகின் வளர்ச்சி அடைந்த, 20 நாடுகளை உள்ளடக்கியது. 
  • 'ஜி - 20' அமைப்பு. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேஷியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட, வளர்ச்சி அடைந்த நாடுகள், இந்த அமைப்பில் அங்கமாக உள்ளன.
  • இந்த ஆண்டுக்கான, ஜி - 20 மாநாடு, ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான மாநாடு, மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் நடக்கிறது.அடுத்த ஆண்டு, நவம்பர், 21 மற்றும் 22ல், இந்த மாநாடு நடைபெற உள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.
மராட்டிய சட்டசபை சபாநாயகராக காங்கிரசின் நானா பட்டோலே தேர்வு
  • மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி ஆட்சி அமைத்து உள்ளது. இதில், சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
  • இந்நிலையில், மராட்டிய சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதையடுத்து, மகா விகாஷ் முன்னணி சார்பில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. நானா பட்டோலே சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில் கரோலினா மரின் வெற்றி
  • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடைபெற்றது. பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-12, 21-16 என்ற நேர் செட் கணக்கில் பித்தயாபோர்ன் சைவானை (தாய்லாந்து) தோற்கடித்து பட்டத்தை கைப்பற்றினார்.
சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், கோப்பையை தவறவிட்ட சவுரப் வர்மா
  • சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 36-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சவுரப் வர்மா, 26-ம் நிலை வீரரான வாங் ஜூ வெய்யை (சீனதைபே) எதிர்கொண்டார். 48 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் சவுரப் வர்மா 15-21, 17-21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்து கோப்பையை கோட்டை விட்டார்.



சையது முஷ்டாக் அலி டி20: கா்நாடகம் சாம்பியன்
  • சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. முதலில் ஆடிய கா்நாடகம் 180/5 ரன்களை குவித்தது. பின்னா் ஆடிய தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை குவித்து போராடி தோற்றது. இதையடுத்து ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் வென்று தொடா்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது கா்நாடகம்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்ற இந்திய அணி
  • கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் நடைபெற்று வரும் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய-ஓசியானா குரூப்-1 முதல் சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. 
  • இதன் மூலம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி அடுத்த ஆண்டு (2020) மார்ச் 6 மற்றும் 7-ந் தேதி நடைபெறும் உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெற்றது. உலக குரூப் சுற்றில் இந்திய அணி குரோஷியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றால் இந்திய அணி டேவிஸ் கோப்பை பிரதான சுற்றுக்குள் நுழையும்.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் வாணவேடிக்கைளுடன் தொடக்கம்
  • 13வது தெற்காசியப் போட்டி நேபாளத் தலைநகர் காட்மாண்டுவில் நேற்று தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இப்போட்டியில், இந்தியா, இலங்கை, வங்கதேசம், பூடான், பாகிஸ்தான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 700 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
  • தசரத் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற வண்ணமிகு விழாவில், நேபாள அதிபர் பித்யா தேவி பண்டாரி போட்டியை முறைப்படி தொடங்கி வைத்தார். 
  • போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்-வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். இந்திய அணிக்கு குண்டு எறிதல் வீரர் தேஜிந்தர் பால்சிங் தலைமை வகித்து வந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel