Type Here to Get Search Results !

18th NOVEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தலைமைத் தகவல் ஆணையராக ஆர்.ராஜகோபால் நியமனம்
  • தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் தலைமைத் தகவல் ஆணையராக, ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.வெங்கடேசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 
கொடைக்கானல் ஆதிமனிதன் கல்திட்டைகள் சுற்றுலாப்பட்டியலில் இடம் பிடிப்பு
  • கொடைக்கானல் மலையில் பேத்துப்பாறை கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஆதிமனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக, கல் குகைகள், கல்திட்டைகள் உள்ளன.
  • இவற்றை மத்திய தொல்லியல் துறை பாதுகாத்து வரும் நிலையில், தற்போது திண்டுக்கல் மாவட்ட சுற்றுலா தலங்கள் கையேட்டில் பேத்துப்பாறை கல் திட்டைகள் இடம்பெற்றுள்ளதாக சுற்றுலா இயக்குனர் அமுதவள்ளி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம்
  • ஒடிஷா செஞ்சுரியன் பல்கலைக் கழகம் கமலுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. நாளை நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சியில் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் கலந்து கொண்டு கமலுக்கு டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கிறார்
மேகலாயா அமைப்புக்கு தடை
  • வடகிழக்கு மாநிலமான மேகலாயாவில் செயல்படும், எச்.என்.எல்.சி., எனப்படும் ஹைன்யூடிரப் தேசிய பிரிவினைவாத கவுன்சில் என்ற பயங்கரவாத அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருவதாலும், சதி திட்டங்களில் ஈடுபட்டு வருவதாலும் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2000ல் விதிக்கப்பட்டிருந்த தடை, பின்னர் நீக்கி கொள்ளப்பட்டது.



கத்தார்- இந்திய கடற்படைகள் பயிற்சி
  • இந்தியா, கத்தார் கடற்படை பயிற்சி தோகாவில் துவங்கியது. இதன் மூலம் தகவல் பரிமாற்றம், கடற்பகுதியில் ஏற்படும் பிரச்னைகளை ஒற்றுமையுடன் கையாள்வது போன்றவை மேம்படும். 
  • ஐ.ஓ.என்.எஸ். எனும் இந்தியப் பெருங்கடல் கடற்படைகளின் தன்னார்வ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் இந்தியா, கத்தார் உட்பட 35 நாடுகள் உள்ளன. பிரச்னைகளின் போது தகவல் பரிமாற்றம், நாடுகள் இணைந்து சவால்களை கையாள்வது போன்றவற்றில் இந்நாடுகள் ஈடுபடும். 
  • இந்தியா-கத்தார் நாடுகளின் கூட்டுப் பயிற்சி முகாம் கத்தாரில் நவ. 17 ல் துவங்கி 21 வரை நடக்கிறது. இதில் இந்திய கடற்படை மற்றும் கத்தாரி எமிரி கடற்படை வீரர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்காக ஐ.என்.எஸ். டிரிகண்ட் கப்பல், பி 8-1 விமானம் இந்தியாவில் இருந்து தோகா சென்றன.
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
  • பிரபல 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் தனது பில் (மற்றும்) மெலிண்டா கேட்ஸ் என்ற அறக்கட்டளை சார்பில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைசார்ந்த அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருகிறார்.
  • இந்நிலையில், இந்தியா வந்துள்ள பில் கேட்ஸ் இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது இந்தியாவில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் தொடர்பாக பிரதமரிடம் பில் கேட்ஸ் விளக்கிக் கூறினார். 
  • பின்னர் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சகம் சார்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.
ராஜ்யசபாவின் 250 வது கூட்டத்தொடர்
  • ராஜ்யசபாவின் 250 வது கூட்டத்தொடர் நவ.,18 அதன் தலைவரும் துணை ஜனாதிபதியுமான வெங்கைய்யா நாயுடு தலைமையில் நடைபெறுகிறது.நாட்டின் உயரிய சபையாக கருதப்படும் ராஜ்யசபாவின் முதல் கூட்டம் 1952 ம் ஆண்டு மே மாதம் நடைபெற்றது. 
  • இதுவரை 249 கூட்டத்தொடர்களை நிறைவு செய்த ராஜ்யசபா, இன்று 250 வது கூட்டத்தொடரை எட்டி உள்ளது. இதனை முன்னிட்டு, ராஜ்யசபா குறித்த புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 
  • அதில், 249 கூட்டத் தொடர்களை நிறைவு செய்துள்ள ராஜ்யசபாவில் இதுவரை 3817 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் 60 மசோதாக்கள் பல்வேறு காரணங்களால் லோக்சபாவில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகின. 
  • 1952 ம் ஆண்டு முதல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது முதல் இதுவரை 3,818 சட்டங்கள் பார்லி.,யில் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • மொத்தம் 118 பக்கங்களை கொண்ட இந்த நினைவு மலரில் ராஜ்யசபாவின் வரலாறு, சமூக மாற்றம், பொருளாதார மாற்றம், தொழில்துறை வளர்ச்சி, சுகாதாரம், கல்வி, விவசாயம், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றில் ராஜ்யசபாவின் பங்கு, அவையில் நிறைவேற்றபட்ட முக்கிய சட்டங்கள், ராஜ்யசபா செயல்பாடுகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன. 



பாகிஸ்தான் சாகின்-1 ஏவுகணை சோதனை
  • பாகிஸ்தான் ராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் சாகின் 1 ஏவுகணையை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்ததாக அறிவித்துள்ளது. 
  • கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்குதல் நடத்தும் காஸ்னவி ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் நடத்தியது. 
  • இது 290 கி.மீ. தூரத்தில் தரையில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் பெற்றதாகும். இந்நிலையில் அணு ஆயுதத்துடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை நடத்தியதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
உலக கால்பந்து: பிரேசில் சாம்பியன்
  • பிரேசிலில், 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடரின் 18வது சீசன் நடந்தது. இதன் பைனலில் பிரேசில், மெக்சிகோ அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பிரேசில் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 4வது முறையாக (1997, 1999, 2003, 2019) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
  • இதன்மூலம் இத்தொடரில் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்கிறது. முதலிடத்தில் நைஜீரியா (5 முறை, 1985, 1993, 2007, 2013, 2015) உள்ளது.
  • மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பிரான்ஸ், நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, 3வது இடம் பிடித்தது.
கிராண்ட்பிரி கார் பந்தயத்தில் பெல்ஜியம் வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்
  • நடப்பு சீசனில் 30வது போட்டியாக, சா பாலோ நகரில் நேற்று நடைபெற்ற பந்தயம் விறுவிறுப்பாக காணப்பட்டது. 
  • உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஹாமில்டன், முன்னணி வீரர்களான செபஸ்டியன் வெட்டல், லெக்ரெக், போட்டஸ் ஆகியோரின் கார்கள் ஒத்துழைக்காத நிலையில் போட்டியில் பின்தங்கினர்.
  • இறுதியில் 306 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை ஒரு மணி 33 நிமிடம் 14 வினாடிகளில் கடந்து ரெட்புல் அணியின் வெர்ஸ்ட்டாப்பன் வெற்றி பெற்றார். பிரான்ஸ் வீரர் பியர் கேஸ்லி இரண்டாம் இடத்தையும், ஸ்பெயின் வீரர் கார்லஸ் செயின்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.a

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel