Type Here to Get Search Results !

3rd & 4th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியாக உயர்வு
  • தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை உயர்த்துவது குறித்து நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
  • இந்நிலையில் தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • அதன்படி இதுவரை ரூ.2.50 கோடியாக இருந்த தொகுதி மேபாட்டு நிதி தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தப்படுகிறது.
சென்னை சர்வதேச திரைப்பட விழா: டிசம்பர் 12ல் தொடங்குகிறது
  • சென்னையில் ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசும், இண்டியன் சினி 
  • அப்பரிசேஷன் அமைப்பும் இணைந்து இதனை நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான 17வது சர்வதேச திரைப்பட விழா வருகிற டிசம்பர் 12 முதல் 19 வரை 8 நாட்கள் நடக்கிறது.
மஹாத்மாவிற்கு பிரான்சில் அஞ்சல்தலை
  • மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.இந்நிலையில், மஹாத்மா காந்தியை கவுரவிக்கும் வகையில், பிரான்சில் அவரது உருவப்படும் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையை பிரான்ஸ் தபால் துறை வெளியிட்டுள்ளது. 
  • உஸ்பெகிஸ்தான், துருக்கி, பாலஸ்தீனம் உள்ளிட்ட நாடுகளும் மஹாத்மா காந்திக்கு அஞ்சல் தலை வெளியிட்டுள்ளன.



டெல்லி-ஜம்மு காஷ்மீர் இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை துவக்கி வைத்தார் உள்துறை அமைச்சர்
  • டெல்லி-ஜம்மு காஷ்மீரின் கட்ரா நகருக்கு இடையேயான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை உள்துறை அமைச்சர் அமித்ஷா கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். 
  • வந்தே மாதரம் ரயிலின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பயண நேரம் 4 மணி நேரம் வரை குறையும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேவை: தமிழகத்துக்கு தேசிய விருது: தில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கினார்
  • மூத்த குடிமக்களுக்கு சிறந்த சேவை அளித்ததற்காக தமிழகத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய விருதை வழங்கி கௌரவித்தார். இந்த விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடமிருந்து, தமிழக அமைச்சர் வி.சரோஜா பெற்றுக் கொண்டார்.
  • முதியோர் நலனுக்காக 2007-இல் இயற்றப்பட்ட சட்ட ஷரத்துகளை முதியோர், பெற்றோர் நலன் காக்கும் வகையில் நாட்டிலேயே சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக தேசிய விருது தமிழகத்திற்கு கிடைத்துள்ளது. 
  • தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா முதியோர் நலன் காக்கும் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தினார். ஆரம்பத்தில் 20 முதியோர் இல்லங்கள் தொடங்கப்பட்டது. 
  • தற்போது 48 ஒருங்கிணைந்த வளாகங்கள் மூலம் முதியோர், குழந்தைகள் பயன்பெற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முதியோருக்கான உணவூட்டும் மானியம் ரூ.653-இல் இருந்து ரூ.1,200ஆகவும், அவர்களுடன் வசிக்கும் குழந்தைளுக்கான மானியம் ரூ.750-இல் இருந்து ரூ.900 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 
  • முதியோர் தொற்று நோய்களுக்கு ஆளாகாமல் இருப்பதற்காக 4,700 பயனாளிகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • முதியோர் இல்லங்கள், ஒருங்கிணைந்த வளாகங்களின் மேம்பாட்டுக்காக நிகழாண்டு ரூ.7.65 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கியுள்ளார். 
  • பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச் சட்டம் 2007 மற்றும் விதி 2009-இன் படி கோட்டாட்சியர்கள் தலைமையின் கீழ் 81 தீர்ப்பாயங்கள், ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளன. 
கேரளம், ஆந்திரா உள்ளிட்ட 7 மாநில தலைமை நீதிபதிகள் நியமனம்
  • மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) ரவிசங்கர் ஜா, பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 
  • அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி அஜய் லாம்பா, குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி இந்திரஜித் மஹந்தி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. மணி குமார், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டனர். 
  • கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி எல். நாராயண சுவாமி, ஹிமாசல பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
  • ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, மத்திய பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, குவாஹாட்டி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே. கோஸ்வாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி விஸ்வநாத் சமாதார், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்ற நீதிபதி விவேக் அகர்வால் ஆகியோர் அலாகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். 
  • தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி பி.வி. சஞ்சய்குமார், பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.



காந்தியடிகளின் சிறப்பு தபால்தலையை வெளியிட்டு கவுரவப்படுத்திய போலந்து
  • காந்தியின் பிறந்த தினமானது இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் போலந்திலும் காந்தியின் பிறந்த நாள் விழா அனுசரிக்கப்பட்டது.
  • அந்நாட்டு தபால் சேவை நிறுவனமான போக்ஸ்டா போல்ஸ்கா, காந்தியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சிறப்பு தபால் தலையை வெளியிட்டு கவுரப்படுத்தியுள்ளது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1% ஆக இருக்கும் : ரிசர்வ் வங்கி கணிப்பு
  • நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பீட்டுள்ளது. வளர்ச்சி விகிதம் 6.9% ஆக இருக்கும் என்ற மதிப்பீட்டை 0.8%குறைத்துள்ளது. 
  • இந்திய ரிசர்வ் வங்கி.அதே நேரம் 2020-2021ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.2% ஆக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.
டேங்கர்களை தாக்கும் 210 ஏவுகணைகள் - இஸ்ரேலிடமிருந்து வாங்கிய இந்தியா
  • இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஸ்பைக் ஏவுகணைகள் 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திறன் பெற்றவை. 
  • எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல்கள் தொடரும் நிலையில், அவசரத் தேவையை கருத்தில் கொண்டு ராணுவ துணைத் தளபதி தனக்குள்ள அவசர கொள்முதல் அதிகாரத்தை கொண்டு 210 ஸ்பைக் ஏவுகணைகளை கொள்முதல் செய்துள்ளார்.
ரூ.25 லட்சத்துக்கு காப்பீடு; தாமதமானால் இழப்பீடு!' - இந்தியாவின் முதல் கார்ப்பரேட் ரயில்
  • இந்தியாவின் முதல் தனியாரால் இயக்கப்பட உள்ள லக்னோ - டெல்லி இடையிலான தேஜாஸ் விரைவு ரயிலை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
  • தற்போது அந்த ரயில், இந்திய ரயில்வேயின்கீழ் செயல்படும் தனிப் பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயக்கப்படுகிறது. 
  • ரயில் தாமதமாக வந்தால் ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்கும். அதன்படி குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் பயணிகளுக்கு ரூ.100 வழங்கப்படும். 
  • அதேசமயம், குறிப்பிட்ட நேரத்துக்கு 2 மணி நேரம் தாமதமாக ரயில் வந்தால் பயணிகளுக்கு ரூ.250 வழங்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே அசுத்தமான ரயில் நிலையங்களில் சென்னைக்கு முதலிடம்
  • நாட்டிலேயே மிகவும் மோசமான நிலையில் அசுத்தமாகக் காணப்படும் பட்டியலில் முதல் பத்து இடங்களில் தமிழக ரயில் நிலையங்களே 6 இடங்களைப் பெற்றுள்ளன.
  • சென்னை பெருங்களத்தூர் முதலிடத்தையும், கிண்டி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து முறையே, டெல்லி சடார் பஜார், மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.
  • இதையடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த வேளச்சேரி, கூடுவாஞ்சேரி. சிங்கப்பெருமாள் கோவில் ஆகியவையும் கேரள மாநிலம் ஒட்டப்பாலம், தமிழகத்தின் பழவந்தாங்கல், பீகாரைச் சேர்ந்த அராரியாகோர்ட், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த குர்ஜா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன.



ஜெனிவாவில் உலக பருத்தி தின விழா; அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்கிறார்
  • உலக பருத்தி தின விழா, அக்., 7 முதல் 11 வரை ஜெனிவாவில் நடக்கிறது. இந்தியா சார்பில், மத்திய ஜவுளி அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்கிறார்.அக்., 7 ம் தேதி உலக பருத்தி தினமாக கொண்டாடப்படுகிறது. 
  • பருத்தி உற்பத்தியில் முன்னிலையில் உள்ள பெனின், பர்கினா பேசோ, சாட் மற்றும் மாலி ஆகிய நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, உலக வர்த்தக அமைப்பு, உலக பருத்தி தின விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்திய பருத்தி கழகம் சார்பில், தமிழகத்தில் உற்பத்தியாகும் தரமான நீண்ட இழை பருத்தியான, 'சுவின்' உட்பட பருத்தியின் வெவ்வேறு ரகங்கள் குறித்து கண்காட்சியும் இடம்பெறுகிறது.
  • மகாத்மா காந்தியின், 150வது பிறந்த தினத்தை முன்னிட்டு, பருத்தியால் தயாரிக்கப்பட்ட அவரது உருவச் சிலையும் இந்த கண்காட்சியில் வைக்கப்படுகிறது.
நிலவில் மின்காந்த துகள் 'ஆர்பிட்டர்' கண்டுபிடிப்பு
  • நிலவின் தரை பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை, சந்திரயான் - 2 விண்கலத்தின், 'ஆர்பிட்டர்' கண்டுபிடித்துள்ளதாக, 'இஸ்ரோ' தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' சார்பில், ஜூலை, 22ல், சந்திரயான் - 2 விண்கலம், விண்ணில் ஏவப்பட்டது. 
பீஹார், கர்நாடகா வெள்ள நிவாரண பணிகளுக்கு ரூ.1,813 கோடி
  • கர்நாடக,பீஹார் மாநிலங்களில் வெள்ள நிவாரண பணிகளுக்காக ரூ.1,813கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • அதன்படி கர்நாடகாவுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1200 கோடியும், பீஹார் மாநிலத்துக்கு முன்கூட்டிய ஒதுக்கீடாக 2 தவணையில் ரூ.613.75 கோடி.
YSR வாகனா மித்ரா திட்டத்தை துவக்கி வைத்தார் ஜெகன் மோகன் ரெட்டி
  • ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஒய்.எஸ்.ஆர் வாகனா ஆட்டோக்கள், டாக்சிகள் மற்றும் மேக்சி வண்டிகளின் சுயதொழில் ஓட்டுநர்களுக்கு ரூ .10,000 கொடுப்பனவு வழங்கும் ஒய்.எஸ்.ஆர் வாகனா மித்ரா திட்டத்தை முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.



ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே தகுதி
  • டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய வீரர் அவினாஷ் சாப்ளே தகுதி பெற்றுள்ளார். 3,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்பில் அவினாஷ் சாப்ளே பங்கேற்கிறார்.
டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இடதுகை பந்து வீச்சாளர் ஜடேஜா
  • டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 200 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இடதுகை பந்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றார் இந்தியாவின் ஜடேஜா.
  • இதற்கு முன் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ரங்கனா ஹெராத், 47வது டெஸ்டில் இந்த மைல்கல்லை எட்டினார். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் மிட்சல் ஜான்சன் (49 டெஸ்ட்), மிட்சல் ஸ்டார்க் (50), இந்தியாவின் பிஷன் சிங் பேடி (51) அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
  • இந்திய அளவில் அதிவேகமாக 200 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களில் அஷ்வினுக்கு (37 டெஸ்ட்) அடுத்த இடம் பிடித்தார் ஜடேஜா (44). ஹர்பஜன் சிங் (46), கும்ளே (47), சந்திரசேகர் (48) அடுத்த மூன்று இடங்களில் உள்ளனர்.
சர்வதே விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் அரேபியர் பூமி திரும்பினார்
  • சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற முதல் அரேபியர் 8 நாட்களுக்குப்பின் பூமி திரும்பினார். சர்வதேச விண்வெளி மையத்துக்கு ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் கடந்த மாதம் 25ம் தேதி புறப்பட்டது. 
  • இதில் ரஷ்ய விண்வெளி வீரர் ஓலக், நாசா வீராங்கனை ஜெசிகா மேயர் ஆகியோருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த ஹசா அல்-மன்சூரி என்ற வீரரும் சென்றார். இந்த மையத்துக்கு சென்ற முதல் அரபு வீரர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 
  • இந்நிலையில் சோயூஸ் விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து நேற்று பூமி திரும்பியது. அதல் அல் மன்சூரியுடன், சர்வதேச விண்வெளி மையத்தில் 203 நாட்கள் தங்கி பணியாற்றிய நாசா வீரர் நிக் ஹாக், ரஷ்ய வீரர் அலெக்சே ஓவ்சின் ஆகியோர் பூமி திரும்பினர். 
இரட்டை சதம் அடித்தார் மயாங்க் அகர்வால்
  • தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மயங்க் அகர்வால், அபாரமாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். 358 பந்துகளில் 22 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel