Type Here to Get Search Results !

23rd OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழ் நாட்டில் 6 இடங்களில் மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு திட்டம்
  • தமிழ்நாட்டில் திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில், புதிதாக மருத்துவக்கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  • திருப்பூர், நீலகிரி, ராமநாதபுரம், நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய 6 இடங்களில், மத்திய அரசு புதிய மருத்துவ கல்லூரிகள் தலா ரூபாய் 3 கோடியே 25 லட்சம் செலவில் தொடங்க முடிவு செய்து இருப்பதாக தெரிவித்துள்ளது.
  • இதற்கான நிதியில் 60 சதவீதம் மத்திய அரசும், 40 சதவீதம் மாநில அரசின் பங்களிப்பும் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
  • மேலும் அந்தந்த மாவட்ட மருத்துவமனைகள் இந்த மருத்துவ கல்லூரிகளுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
தமிழகத்துக்கு கூடுதல் யூரியா உரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்: சதானந்த கவுடர் அறிவிப்பு
  • தமிழகத்துக்கு கூடுதல் யூரியா உரம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கைப்படி விவசாயிகளுக்கு உதவ நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் சதானந்த கவுடர் தெரிவித்துள்ளார்.
ஊராட்சி அமைப்புகளில் சிறந்த செயல்பாடு: தமிழகத்துக்கு 12 தேசிய விருதுகள்
  • ஊராட்சிகளில் தகவல் மற்றும் தகவல் தொழில்நுட்ப முறைகளை திறம்பட செயல்படுத்தியதற்காக, தேசிய அளவில் தமிழகம் முதன்மை மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசின் மின்னணு பஞ்சாயத்து புரஸ்கார் விருதைப் பெற்றது. 
  • அதேபோல, ஊராட்சிகளுக்கு கூடுதல் அதிகாரங்கள், கூடுதல் நிதி மற்றும் பணியாளர்களை அளித்து திறனை மேம்படுத்திய வகையில், மாவட்ட அளவில் சேலம் மாவட்டத்திற்கும், ஒன்றிய அளவில் ஈரோடு மாவட்டம் - பெருந்துறை, நாமக்கல் மாவட்டம் - பள்ளிப்பாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கும், ஊராட்சிகள் அளவில் சேலம் மாவட்டம் - கோனூர், கோவை மாவட்டம் - மத்வராயபுரம், நாமக்கல் மாவட்டம் - அரசபாளையம், ஈரோடு மாவட்டம் - வெள்ளாளபாளையம், மதுரை மாவட்டம் - கோவில்பாப்பாக்குடி, திருவண்ணாமலை மாவட்டம் - எஸ்.யு. வனம் ஆகிய கிராம ஊராட்சிகளுக்கு தீன் தயாள் உபாத்யாய ஊராட்சிகளை வலிமைப்படுத்தும் விருது வழங்கப்பட்டது.
  • திருப்பூர் மாவட்டம், ராவணப்புரம் ஊராட்சிக்கு வலுவான கிராம சபையின் மூலம் சிறப்பான சாதனைகள் புரிந்ததற்காக நானாஜி தேஷ்முக் ராஷ்டிரிய கெளரவ கிராம சபை தேசிய விருதும், தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் ஊராட்சிக்கு குழந்தைகள் நேய கிராம ஊராட்சிக்கான தேசிய விருதும் என மொத்தம் 12 தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. 
  • தேசிய அளவில் ஊரக வளர்ச்சித் திட்டங்களை தமிழகம் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக, 2012 முதல் இதுவரையில் மாநில அளவில் 12 தேசிய விருதுகள், மாவட்ட அளவில் 19 தேசிய விருதுகள், ஊராட்சி ஒன்றிய அளவில் 12 தேசிய விருதுகள், கிராம ஊராட்சிகள் அளவில் 43 தேசிய விருதுகள் என மொத்தம் 86 விருதுகளை தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. 
  • தமிழக முதல்வரின் ஊக்கத்தின் மூலம் ஒரே நாளில் 12 விருதுகளை உள்ளாட்சி, ஊரக வளர்ச்சித் துறை பெற்றுள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.



பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, 4ஜி சேவை வழங்க பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
  • நிதி நெருக்கடிக்கு ஆளான, பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். தொலைபேசி சேவை நிறுவனங்க‌ளை இணைத்து புதுப்பிப்பதற்கான திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த 2 நிறுவனங்களுக்கும் ஏறக்குறைய 14ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஊழியர்களுக்கான விருப்ப ஓய்வு எனப்படும் வி.ஆர்.எஸ்., 4ஜி ஸ்பெக்ட்ரம்களை ஒதுக்குவதற்கு மத்திய அரசின் நிதி பயன்படுத்தப்படும்‌. இதுமட்டுமின்றி, கோதுமை, பார்லிக்கான விலையை குவிண்டாலுக்கு 85 ரூபாய் உயர்த்தி ஆயிரத்து 925 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • பெட்ரோல் டீசல் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் அல்லாத தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அ‌ளிக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கோதுமை, பருப்பு கொள்முதல் விலை உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • அக்., - மார்ச் வரையிலான, ரபி பயிர் காலத்துக்கான, பல்வேறு பயிர்களுக்கான அடிப்படை ஆதார விலையை உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில், கொள்முதல் விலையை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, கோதுமைக்கான அடிப்படை ஆதார விலை, 1 குவிண்டாலுக்கு, 85 ரூபாய் உயர்த்தப் பட்டு, 1,925 ரூபாய் வழங்கப்படும். 
  • பார்லிக்கான விலை, குவிண்டாலுக்கு, 85 ரூபாய் உயர்த்தப் பட்டு, 1,525 ரூபாய் வழங்கப்படும்.பருப்பு வகைகள் பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், அவற்றுக்கான ஆதார விலையும் உயர்த்தப்படுகிறது.துவரம் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 325 ரூபாய் உயர்த்தப்பட்டு, 4,800 ரூபாய் வழங்கப்படும். 
  • கடலைப் பருப்பின் விலை, குவிண்டாலுக்கு, 255 ரூபாய் உயர்த்தப்பட்டு, 4,875 ரூபாய் வழங்கப்படும்.எண்ணெய் வித்துகளில், கடுகு விதைகளுக்கான ஆதார விலை, குவிண்டாலுக்கு, 225 ரூபாய் உயர்த்தப்பட்டு, 4,425 ரூபாயும்; சூரியகாந்தி விதைகளுக்கு, குவிண்டாலுக்கு, 270 ரூபாய் உயர்த்தி, 5,215 ரூபாயும் வழங்கப்படும். இணைப்பு நஷ்டத்தில் இயங்கும், தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., இணைக்கப்படும்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பு
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார். மும்பையில் பி.சி.சி.ஐ. தலைமையகத்தில் சவுரவ் கங்குலியிடம் பொறுப்பை நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் ஒப்படைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel