Type Here to Get Search Results !

22nd OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

குடிநீருக்கான சுடுமண் குழாய் கண்டுபிடிப்பு : கீழடி அகழாய்வில் கிடைத்த புது ஆச்சரியம்
  • கீழடி அகழாய்வுக் குழிகளை மூடும்போது, மேம்பட்ட சுடுமண் குழாய் அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டம், கீழடியில், இதுவரை, ஐந்து கட்டங்களாக அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன.
  • அப்போது, அகழாய்வுக் குழி ஒன்றின், 52 செ.மீ., ஆழத்தில், 20 செ.மீ., விட்டமுள்ள வாய்ப் பகுதியுடன் கூடிய, 60 செ.மீ., நீளமுள்ள, சுடுமண் குழாய் கண்டுபிடிக்கப்பட்டது. அது, இரண்டு குழாய்களால் இணைக்கப்பட்டிருந்தது. அதன் ஒவ்வொன்றிலும், தலா, 5 விளிம்புகள் இருந்தன. 
  • குழாயை உறுதியாக்கி, பாதுகாப்பான தண்ணீரை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த விளிம்புகள், பார்வைக்கு, சுருள் வடிவத்தில் உள்ளன. இக்குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில், வடிகட்டும் வகையில், மூன்று துளைகள் இடப்பட்டுள்ளன.இந்த குழாய்களின் கீழ்ப்பகுதியிலும், அகழாய்வு செய்யப்பட்டது.
  • அப்போது, பீப்பாய் வடிவிலான, மூன்று, சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு, ஒரே குழாயாக இருந்தது. அதன் வாய்ப் பகுதியிலும், வடிகட்டி பொருத்தப்பட்டிருந்தது. வடிகட்டப்பட்ட நீர் செல்லும் குழாயின் இறுதிப் பகுதி, இரண்டடுக்கு பானைக்குள் செல்கிறது.
  • இவ்வாறு, ஒரே இடத்தில் அமைக்கப்பட்டிருக்கும், வெவ்வேறு விதமான இரண்டு சுடுமண் குழாய்களுக்கும், வெவ்வேறு பயன்பாடு இருந்திருக்க வேண்டும்.இந்த வடிகால் குழாய்களின் கீழ்ப்பகுதியை அகழாய்வு செய்தபோது, சுடுமண் கூரை ஓடுகள் பதிக்கப்பட்ட தரைப்பகுதி காணப்பட்டது. 
சென்னையில் நவ.14-இல் உலகத் தமிழ் தொழில் முனைவோர் மாநாடு தொடக்கம்
  • எழுமின் அமைப்பு சார்பில் முதலாவது உலகத் தமிழ் தொழில்முனைவோர் மாநாடு, 2018 டிசம்பரில் மதுரையில் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 2-ஆவது மாநாடு கடந்த மே மாதம் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்றது. 
  • இதில் வணிகப் பரிமாற்றம், ஏற்றுமதி-இறக்குமதி, தொழில்நுட்பங்கள் பரிமாற்றம் என 102 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை' - ஆய்வு செய்து டாக்டர் பட்டம் பெற்றார் சார்லி
  • இயக்குநர் கே. பாலசந்தரின் பொய்க்கால் குதிரை திரைப்படம் மூலம் 1983 ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நகைச்சுவை நடிகர் சார்லி. இவர் குணசித்திரம் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 
  • 59 வயதாகும் சார்லி 'தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை' என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.
  • தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாணவர்களுக்கு முனைவர் மற்றும் கௌர டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
  • கடந்த 2013 ஆம் ஆண்டு 'தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு' என்ற தலைப்பில் அழகப்பா பல்கலை கழகத்தில் சார்லிஎம்.பில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
`மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' வென்றார் சென்னைப் பெண் அக்‌ஷரா ரெட்டி
  • கேரளாவில் நடந்த `மிஸ்சூப்பர் க்ளோப் இந்தியா 2019' டைட்டிலைவென்ற சென்னைப் பெண்ணானஅக்‌ஷரா ரெட்டி, அதன் இறுதிக்கட்டமாக கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற `மிஸ் சூப்பர் குளோப் வேர்ல்டு 2019' போட்டியிலும் டைட்டிலை வென்று சென்னை திரும்பியுள்ளார். 



தெற்கு ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி "ரயில் தண்டோரா"
  • ரயில்வே ஊழியர்கள், பயணியர் மற்றும் ஒப்பந்ததாரர்களின் விரைவான பரிவர்த்தனைகளுக்கு, ரயில் தண்டோரா என்ற புதிய செயலி உதவியாக இருக்கும். 
  • பயணிருக்கான வசதிகள், பயண கட்டணங்கள், உணவு மற்றும் சரக்கு பிரிவு சேவைகள், கட்டணங்கள், பொது விண்ணப்பங்கள் உள்ளிட்ட, பல்வேறு வசதிகள் குறித்தும், இச்செயலியில் தெரிந்து கொள்ளலாம்.
  • ரயில்வே ஊழியர்களுக்கான சுற்றறிக்கைகள், சலுகை விண்ணப்ப படிவங்கள், வருங்கால வைப்பு நிதி விண்ணப்ப படிவங்கள் குறித்தம் தெரிந்து கொள்ளலாம். வாடிக்கையாளர்கள், வணிக கையேடு மற்றும் வணிக குறியீடுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.
சிறந்த பல்கலை., தர வரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த மும்பை ஐஐடி
  • ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த 'குவாக்குரெலி சைமன்ஸ்' என்ற ஆய்வு நிறுவனம் சர்வதேச அளவிலான கல்வி நிலையங்களின் தரப்பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதுபோல் நம் நாட்டில் உள்ள பல்கலைகளின் தர வரிசை பட்டியலையும் வெளியிடுகிறது.
  • இந்நிலையில் அந்த நிறுவனம் தற்போது 'இந்திய பல்கலை தர வரிசை - 2020' என்ற ஆய்வை நடத்தி அதுகுறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஐ.ஐ.டி. எனப்படும் தொழில்நுட்ப உயர் கல்வி நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. 
  • கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் பயிற்சி மையம் இரண்டாவது இடத்தையும் டில்லி - ஐ.ஐ.டி. மூன்றாவது இடத்தையும் சென்னை - ஐ.ஐ.டி. நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.
  • காரக்பூர் - ஐ.ஐ.டி.க்கு ஐந்தாவது இடமும் கான்பூர் - ஐ.ஐ.டி.க்கு ஆறாவது இடமும் கிடைத்துள்ளது. இந்த தர வரிசை பட்டியலில் டில்லி பல்கலை ஏழாவது இடத்தையும் ஐதராபாத் பல்கலை எட்டாவது இடத்தையும் பிடித்துள்ளன. 
  • ரூர்கேலா - ஐ.ஐ.டி. ஒன்பதாவது இடத்தையும் கவுகாத்தி - ஐ.ஐ.டி. 10வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்த பட்டியலில் சென்னை - அண்ணா பல்கலை 16வது இடத்தில் உள்ளது.
ஜஸ்டின் ட்ரூடோ: இரண்டாவது முறையாக கனடா பிரதமராகிறார்
  • ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ 1972ம் ஆண்டு குறைவான வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதால், இப்போதைய தேர்தல், அப்போதைய வெற்றியை ஒப்பிட்டு பார்க்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.
  • முன்னதாக, கனடாவின் புதிய அரசை அமைக்கும் கட்சியை தேர்தெடுப்பதற்காக மக்கள் வாக்களித்த நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப முன்னணி நிலவரங்கள் காட்டின.
  • ஜஸ்டின் ட்ரூடோவின் லிப்ரல் கட்சியும், ஷீரின் கன்சர்வேட்டிவ் கட்சியும் சுமார் 34% வாக்குகளை பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
  • கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஆண்ட்ரூ ஷீரிடம் இருந்து கடும் போட்டியை ட்ரூடோ எதிர்கொண்டார்.



2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் 2021 முதல் அஸ்ஸாமில் அரசு பணி இல்லை
  • அஸ்ஸாம் அரசு 2017-ம் ஆண்டு அம்மாநில சட்டசபையில் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது அத்தீர்மானம்.
  • இந்த கூட்டத்தில் புதிய நில சீர்திருத்தக் கொள்கை மற்றும் 2 குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு அரசு பணி இல்லை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதனடிப்படையில் நிலமற்ற பழங்குடி மக்களுக்கு வேளாண்மை செய்யவும் வீடு கட்டவும் நிலம் ஒதுக்கீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் தந்தது.
  • மேலும் அரசு வழங்கும் இலவச நிலத்தை 15 ஆண்டுகாலத்துக்கு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முடியாது எனவும் அரசு அறிவித்துள்ளது. இச்சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
உலக முப்படைகள் விளையாட்டு போட்டி: 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார்
  • உலக முப்படைகள் விளையாட்டு போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் ஆனந்தன் குணசேகரன் தங்கம் வென்றார். சீனாவில் நடைபெற்று வரும் போட்டியில் 12 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியா இமாலய வெற்றி: தொடரை வென்று அசத்தல்
  • இந்தியா வந்த தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடந்தது.
  • தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ், 202 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக வென்றது.
  • சொந்தமண்ணில் இந்திய அணியை அசைப்பது அவ்வளவு எளிதல்ல. கடைசியாக பங்கேற்ற 32 டெஸ்டில் 26ல் வென்றது. 5 டெஸ்ட் 'டிரா' ஆனது. ஒன்றில் மட்டும் தோற்றது. இதில் 6 விக்., அல்லது 75 ரன்னில் வென்றது தான் குறைந்தபட்ச வெற்றி. அந்தளவுக்கு இந்திய அணி ஆதிக்கம் தொடர்கிறது.
  • இந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய டெஸ்ட் தொடரில் மொத்தம் 65 சிக்சர்கள் அடிக்கப்பட்டன. இந்தியா 47 சிக்சர் அடித்தது. டெஸ்ட் தொடரில் ஒரு அணி சார்பில் அடிக்கப்பட்ட அதிக சிக்சர்கள் இது தான்.
  • டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி முதலில் விண்டீசை (2-0) வீழ்த்தி 120 புள்ளிகள் பெற்றது. தற்போது தென் ஆப்ரிக்காவை முழுமையாக வெல்ல (3-0) கூடுதலாக 120 புள்ளிகள் கிடைத்தன. மொத்தமாக 240 புள்ளிகளுடன், பட்டியலில் 'நம்பர்-1' அணியாக நீடிக்கிறது. நியூசிலாந்து (60), இலங்கை (60) அடுத்த இரு இடத்தில் உள்ளன.
  • மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய துவக்க வீரர்கள் அதிக ரன்கள் எடுத்தது இம்முறை தான். ரோகித் (529), மயங்க் (340)அகர்வால் மொத்தம் 869 ரன்கள் எடுத்தனர். 2009, இலங்கை தொடரில் இதற்கு முன் 860 ரன்கள் எடுத்தது தான் அதிகம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel