Type Here to Get Search Results !

13th & 14th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னை ஐஐடி-யில் உயிரி எரிபொருள் ஆராய்ச்சி
  • அமெரிக்காவைச் சேர்ந்த இக்ஸான்மொபில் எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து உயிரி எரிபொருள் ஆராய்ச்சியில் சென்னை ஐஐடி ஈடுபட உள்ளது. இதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ளது.
  • மத்திய அரசின் உயிரி எரிபொருள் கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட ரூ. 93 ஆயிரம் கோடி மதிப்பிலான உயிரி எரிபொருள் உற்பத்தி நிறுவனங்களின் பொருளாதார வளர்ச்சி இலக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த கூட்டு ஆராய்ச்சி முயற்சியை சென்னை ஐஐடி மேற்கொண்டுள்ளது.
அம்பலூா் பாலாற்றங்கரையில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சோந்த நடுகல் கண்டெடுப்பு
  • வாணியம்பாடி அருகே அம்பலூர் பாலாற்றங்கரையில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடுகல்லானது பாலாற்றில் இருந்து பிரிந்து வரும் கால்வாயில் கிடக்கிறது. கால்வாயைத் தூர்வாரும் போது இக்கல் மண்ணில் இருந்து வெளிப்பட்டுள்ளது. இயந்திரத்தினால் தூர்வாருகையில் நடுகல் இரண்டாக உடைந்துள்ளது.
  • உடைந்த நிலையில் மண்ணில் புதையுண்டு காணப்பட்ட இந்த நடுகல்லை நாங்கள் மீட்டு சுத்தம் செய்து பார்க்கையில், சோழர் காலக் கலைப் பாணியில் அமைந்துள்ள மிகச் சிறந்த நடுகல்லாக அறிய முடிந்தது. நடுகல்லில் உள்ள வீரன் வலது கரத்தில் நீண்ட போர்வாளும், இடது கரத்தில் தற்காப்புக் கேடயத்தையும் கம்பீரமாக ஏந்தியுள்ளான்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நேபாளத்தை விட குறைவு! - உலக வங்கி அறிக்கை
  • அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளத்தை விட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
  • இந்நிலையில் உலக வங்கியின் தெற்காசிய மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2019ம் ஆண்டின் இந்திய பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2021ல் இது 6.9 சதவீதமாகவும், 2022ல் 7.2 சதவீதமாகவும அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியர் அபிஜித் பானர்ஜிக்கு நோபல் பரிசு
  • ஐரோப்பிய நாடான ஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, பொருளாதார துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. 
  • இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், அமைதி, உள்ளிட்ட பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. 
  • இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் வசிக்கும் பொருளாதார அறிஞர் அபிஜித் பானர்ஜி அவரது மனைவியும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவருமான எஸ்தர் டப்லோ அமெரிக்காவைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் மைக்கேல் கிரிமர் ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. 
  • இந்தப் பரிசு தங்கப் பதக்கம் 6.52 கோடி ரூபாய் ரொக்கமும் கொண்டது.உலக அளவில் வறுமை ஒழிப்பிற்கான முன்னோடி திட்டங்களை வகுத்ததால் இந்த மூவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது. 
  • பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற இரண்டாவது பெண் என்ற பெருமையை எஸ்தர் டப்லோ பெற்றுள்ளார். 



நேபாளம் - சீனா இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தானது
  • காட்மண்டுவில் நேபாள அதிபர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் பேச்சு நடத்தியதை அடுத்து பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
  • இதில் திபெத்தில் உள்ள கைரானிலிருந்து (gyiron) காட்மண்ட் வரை சுமார் 70 கிலோமீட்டருக்கு சுரங்க ரயில் அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்கான தொடக்க ஆய்வுகளை சீனாவைச் சேர்ந்த அதிகாரிகள், தொழில்நுட்பக் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.
  • இதே போன்று 28 கிலோமீட்டர் தூரத்திற்கு காட்மண்டுவில் இருந்து சீன எல்லைவரை சாலை போக்குவரத்துக்கான சுரங்கப் பாதை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நேரமும் செலவும் குறையும் என்று கூறப்படுகிறது.
எவரெஸ்ட் சிகரம் உயரம் அளவீடு நேபாளம் சீனா ஒப்பந்தம்
  • எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தை அளவீடு செய்ய நேபாளம் சீனா இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • சீன அதிபர் 12-ம் தேதி நேபாள நாட்டிற்கு சென்றார்.அந்நாட்டின் பிரதமர் கேபிஷர்மா ஒலி மற்றும் சீன அதிபர் ஜிஜின்பிங்கும் பருவகால மாற்றம், சுற்றுச்சூழல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கூட்டாக ஒத்துழைப்பது என ஒப்பந்தம் மேற்கொண்டனர். 
  • இதன் ஒரு கட்டமாக இமயமலையில் அமைந்துள்ள எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரத்தை அளவீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • கடந்த 1954 ம் ஆண்டில் இந்தியா எடுத்த எவரெஸ்ட் சிகரத்தின் உயரமான 8,848 மீட்டர் என்பது தற்போது வரை ஏற்று கொள்ளப்பட்டு வந்துள்ளது. 
  • இதனிடையே கடந்த 2015 ல் நேபாள நாட்டில் நிகழ்ந்த பயங்கர பூகம்பத்திற்கு பின்னர் சிகரத்தின் உயரம் குறித்து தி இமயமலை டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி ஒன்றை வெளியிட்டது. 
  • தொடர்ந்து 2017 ம் ஆண்டில் நேபாள அரசு அந்நாட்டின் சர்வே துறை சார்பில் எவரெஸ்ட் சிகரத்தை அளவீடு செய்ய குழு ஒன்றை அமைத்தது.இக்குழு அடுத்த ஆண்டு இறுதிக்குள் புதிய அளவீடு குறித்த தகவல்களை தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
முதலாவது கப்பல் என கூறப்படும் எனர்ஜி அப்சர்வர் லண்டனில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது
  • மிதக்கும் ஆய்வுக்கூடமாகவும், ஹைட்ரஜன் சக்தியில் இயங்கும் உலகின் முதலாவது கப்பல் எனவும் கூறப்படும் எனர்ஜி அப்சர்வர் லண்டனில் தன் பயணத்தை நிறைவு செய்கிறது.
  • கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதலின் விளைவுகளை அறிந்தவர்கள் ஒன்றுகூடி மின்சாரம், காற்று மற்றும் ஹைட்ரஜனில் இயங்கும் கப்பலை கண்டறிந்தனர்.
  • 2017-ம் ஆண்டு பிரான்சின் செய்ன்ட்-மாலோவில் இருந்து புறப்பட்டு, 25 நாடுகளைக் கடந்து கடைசி நிறுத்தமாக லண்டனின் தேம்ஸ்-க்கு வந்துள்ளது.
  • 168 சதுர மீட்டர் சூரிய மின் தகடுகள், 12 மீட்டர் கடல் சிறகுகள் மூலம் சூரிய மற்றும், காற்றாலை மின் சக்திகள் சேமிக்கப்படுகின்றன. இவை இல்லாத நேரத்தில் கடல் நீரில் இருந்து உப்பு, மினரல்களை நீக்கிய பின், ஆக்சிஜனையும், ஹைட்ரஜனையும் பிரித்து சேமிக்கப்பட்ட சக்தியைக் கொண்டு படகு செலுத்தப்படுவதாக அதன் கேப்டன் எருஸ்ஸார்ட் தெரிவித்தார்.



பி.சி.சி.ஐ., புதிய தலைவர் கங்குலி
  • ஆறாவது ஐ.பி.எல்., தொடரில் ஏற்பட்ட சூதாட்ட சர்ச்சைக்குப் பின் இந்திய கிரிக்கெட்டில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. சுப்ரீம் கோர்ட் சார்பில் அமைக்கப்பட்ட புதிய கிரிக்கெட் நிர்வாகக் குழு (சி.ஒ.ஏ.,) இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) நிர்வகித்து வருகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி லோதா பரிந்துரைகளின் படி, அனைத்து மாநில சங்கங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட்டன.
  • வரும் 23ம் தேதி பி.சி.சி.ஐ., பொதுக்குழு கூடுகிறது. இதில் தலைவர், பொருளாளர் உள்ளிட்ட 6 பதவிகளுக்கு இன்று மாலை 3:00 மணிக்குள் மனு தாக்கல் செய்ய வேண்டும். இதனிடையே முன்னாள் கேப்டனும், மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவருமான கங்குலி, பி.சி.சி.ஐ., தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்தார்.
  • இவருக்கு முன்னாள் தலைவர்கள் சீனிவாசன், அனுராக் தாகூர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மனுதாக்கல் நேரம் முடிந்த நிலையில் கங்குலி புதிய தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். வரும் 23ம் தேதி நடக்கும் கூட்டத்தில் முறைப்படி பதவியேற்க உள்ளார். இதேபோல ஐ.பி.எல்., தலைவராக முன்னாள் வீரர் பிரிஜேஷ் படேல் தேர்வாக உள்ளார்.
உலக குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை
  • 11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. 48 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, ரஷியா வீராங்கனை எகாட்டரினாவுடன் மோதினார்.
  • இதில் மஞ்சு ராணி 4-1 என்ற கணக்கில் ரஷியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார். இதன்மூலம் மஞ்சு ராணி வெள்ளி பதக்கம் வென்றார்.
தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர் வெற்றி - ஆஸ்திரேலியாவின் சாதனையை தகர்த்து இந்தியா உலக சாதனை 
  • தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்று தொடரை வென்றுள்ளது. 
  • இந்த தொடர் வெற்றியின் மூலம் இந்திய அணி தொடர்ந்து 11 ஆவது முறையாக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளது.
  • 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்ற 32 டெஸ்ட் போட்டிகளில் 25 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டியில் தோல்வியும் மற்ற போட்டிகள் டிராவும் ஆகியுள்ளன. இதற்கு முன்னர் ஆஸ்திரேலியா 10 டெஸ்ட் தொடர்களை சொந்த நாட்டில் வென்றுள்ளது. 
  • அந்த சாதனையை இப்போது கோலி தலைமையிலான இந்திய அணி முறித்துள்ளது. கோலி தலைமையேற்ற போது இந்திய அணி டெஸ்ட் அரங்கில் 7 ஆவது இடத்தில் இருந்தது. தற்போது இரண்டு ஆண்டு காலமாக தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel