Type Here to Get Search Results !

12th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இந்திய- சீன கலாசார தொடர்புகள் ஆய்வு செய்ய தனி அகாதெமி
  • தமிழகத்துக்கும், சீனாவின் பிஜியன் மாகாணத்துக்கும் இடையேயுள்ள கலாசாரத் தொடர்புகள் குறித்து ஆராய்ச்சி செய்திட தனி அகாதெமி அமைக்க இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.
வர்த்தக சமநிலைக்கு இருதரப்பு உயர்நிலைக் குழு: பிரதமர் மோடி-சீன அதிபர் ஒப்புதல்
  • இந்தியா, சீனா இடையே சிறப்பான வர்த்தக சமநிலையை ஏற்படுத்துவதற்கு இருதரப்பு உயர்நிலைக் குழுவை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் முடிவு செய்துள்ளனர். 
  • தங்களது நாடுகளில் உள்ள சர்வதேச அளவிலான பிரச்னைகளான பருவநிலை மாறுபாடுகள், நீடித்த நிலைத்த மேம்பாட்டு இலக்குகள் ஆகியவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர். 
  • பருவநிலை மாறுபாடுகள் போன்ற பிரச்னைகளில் தனி நாடுகளின் செயல்பாடுகளைக் கொண்டு சர்வதேச சமுதாயம் எவ்வாறு பயன்பெற முடியும் என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
  • மூன்றாவது அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைக்காக சீனா வர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்தார். இதனை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.



டில்லியில் சர்வதேச பெண்குழந்தை தின விழா
  • இந்திய கண் மற்றும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு சார்பில் டில்லியில் சர்வதேச பெண்குழந்தை தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக முன்னாள் சபாநாயகர் மீராகுமார் பங்கேற்றார். 
இந்தியா-சீன ராஜதந்திர தொடர்புகளை அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் ஒப்புதல்: விஜய் கோகலே
  • இந்தியா - சீன நாடுகள் இடையேயான ராஜதந்திர தொடர்புகளை மேலும் அதிகரிக்க இரு நாட்டு தலைவர்களும் பேசியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலர் விஜய் கோகலே தெரிவித்தார்.
உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம்க்கு வெண்கலம்
  • உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் வெண்கலம் வென்றுள்ளார். 51 கிலோ எடைபிரிவின் அரையிறுதியில் துருக்கியின் புசெனாஸியிடம் 4-1 என்ற புள்ளி கணக்கில் போராடி மேரி கோம் தோல்வியுற்றார். 
  • உலக குத்துச்சண்டையில் 6 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 8 பதக்கம் வென்று மேரி கோம் சாதனை படைத்துள்ளார்.
18 வயதுக்குட்பட்டோா் உலக யூத் செஸ்: சாம்பியன் பட்டம் வென்றாா் 14 வயது பிரகனாநந்தா
  • உலக யூத் செஸ் சாம்பியன் போட்டியில் 18 வயது ஓபன் பிரிவில் தங்கப்பதக்கத்துடன் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் 14 வயது கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞாநந்தா. மேலும் இப்போட்டியில் இந்தியா 3 வெள்ளிப்பதக்கம் உள்பட 7 பதக்கங்களை வென்றது.



100 மீட்டர் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனைப் படைத்தார் டூட்டி சந்த்
  • தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் டூட்டி சந்த் 11.22 வினாடிகளில் கடந்து முதல் இடம் பிடித்தார். 
  • இதற்கு முன் டூட்டி சந்த் 11.26 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அவரது தேசிய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.
தஜிந்தர் சிங் தேசிய சாதனை: தேசிய தடகளத்தில் அசத்தல்
  • தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர் பால் சிங் புதிய தேசிய சாதனை படைத்தார்.ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், 59வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 
  • இதில் ஆண்களுக்கான குண்டு எறிதல் பைனலில் தஜிந்தர் பால் சிங் டூர் பங்கேற்றார். இவர், 3வது வாய்ப்பில் அதிகபட்சமாக 20.92 மீ., துாரம் எறிந்து, புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன் இவர், கடந்த ஆண்டு ஜகார்த்தாவில் நடந்த ஆசிய விளையாட்டில் 20.75 மீ., துாரம் எறிந்தது தேசிய சாதனையாக இருந்தது.
  • ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் முறையே நோவா நிர்மல் டாம் (45.88 வினாடி), விஸ்மாயா (52.71 வினாடி) ஆகியோர் முதலிடம் பிடித்தனர்.
  • பெண்களுக்கான 20 கி.மீ., நடை போட்டியில் ரயில்வேஸ் அணியின் பாவனா ஜத், பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 38 நிமிடம், 30.00 வினாடியில் கடந்து முதலிடத்தை கைப்பற்றினார். 
  • இதன்மூலம் தேசிய ஓபன் தடகளத்தில் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன், 2006ல் டில்லியில் நடந்த இத்தொடரில் தீப்மாலா தேவி, இலக்கை ஒரு மணி நேரம், 39 நிமிடம், 30.40 வினாடியில் கடந்திருந்தார்.
தேசிய ஓபன் தடகள 100 மீட்டர் தடை ஓட்டத்தில் கனிமொழி தங்கம் வென்றார்
  • 59-வது தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் ரெயில்வே வீராங்கனை சி.கனிமொழி 14.05 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். 
  • தமிழக வீராங்கனை ஆர்.நித்யா 14.15 வினாடியில் கடந்து வெள்ளிப்பதக்கமும், மற்றொரு ரெயில்வே வீராங்கனை எலிசபெத் அன்டோ 14.24 வினாடியில் கடந்து வெண்கலப்பதக்கமும் வென்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel