Friday, 11 October 2019

10th & 11th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழக பாரம்பரிய பொருளை சீன அதிபருக்கு பரிசளித்த பிரதமர்
 • பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சின்பிங் சந்திக்கும் இரண்டாவது உச்சி மாநாடு  மாமல்லபுரத்தில் நடைபெற்றது. அவரை வரவேற்று உபசரித்து மாமல்லபுர சிற்பங்களின் பெருமைகளை பற்றி எடுத்துரைத்தார் பிரதமர் மோடி.
 • இந்த நிகழ்வில் பிரதமர் மோடி தமிழ் பாரம்பரியப்படி வேஷ்டி, சண்டை அணிந்து, தோளில் துண்டு போட்டுக்கொண்டு வந்தது பலருக்கு வியப்பை அளித்தது. மோடி வேஷ்டி, சட்டை அணிவது இதுவே முதல்முறையாகும். 
 • தமிழக பாரம்பரிய அடையாளங்களான நாச்சியார்கோவில் அன்ன விளக்கையும், பலகை படம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் ஓவியத்தையும் பரிசளித்தார். 
தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு, நதிகள் மறுசீரமைப்பு கழக மேலாண் இயக்குனராக சத்யகோபால் ஐஏஎஸ் நியமனம்
 • தமிழ்நாடு நீர்வள பாதுகாப்பு, நதிகள் மறுசீரமைப்பு கழக மேலாண் இயக்குனராக சத்யகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருவாய் நிர்வாக ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற சத்யகோபாலுக்கு தமிழக அரசு மீண்டும் பணி வழங்கியது. 
 • குடிமராமத்து மற்றும் நீர்வள மேம்பாட்டுப் பணிகளை சத்யகோபால் ஐஏஎஸ் மேற்பார்வையிடுவார் என்று அரசு தெரிவித்துள்ளது. சத்யகோபால் பதவியேற்ற நாளில் இருந்து ஓராண்டு பதவியில் இருப்பார் என்று அரசு தெரிவித்துள்ளது.
ஆளில்லா சிறு விமானம் மூலம் பயிா் நிலை ஆய்வு: நாட்டிலேயே முதல்முறையாக தஞ்சாவூா் அருகே அறிமுகம்
 • தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருப்பழனம் கிராமத்தில் ஆளில்லா சிறு விமானம் (டிரோன்) மூலம் பயிா் நிலையை ஆய்வு மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 • எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம், மேக்கா்ஸ் ஹைவ் நிறுவனம் இணைந்து நிரந்தர பசுமைப் புரட்சித் திட்டத்தின்கீழ் இத்தொழில்நுட்பத்தைப் பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்தன.
கீழடியில் கல்திட்டை கண்டெடுப்பு
 • கீழடியில், பழங்கால மனிதர்கள் தங்குமிடமாக பயன்படுத்தும் கல் திட்டை கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில், ஐந்தாம் கட்ட அகழாய்வு, நான்கு மாதங்கள் நடந்து முடிந்துள்ளது. இதில், 700க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
 • ஆதிமனிதன், குகைகளிலும், பாறை இடுக்குகளிலும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பாறைகளின் மறைவில் மழை, வெயில் காலங்களில் தங்களை பாதுகாக்க, கல்திட்டை அமைத்து, அதை மனிதர்கள் வசிப்பிடமாக பயன் படுத்தியிருக்கக் கூடும் எனக் கருதப்படுகிறது. 
 • கீழடியில்,2,600 ஆண்டுகளுக்கு முன்,தமிழர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டறியப்பட்ட நிலையில், கல்திட்டையும் இருப்பது தெரியவந்துள்ளது. 
 • ஐந்தாம் கட்ட அகழாய்வில், சுடுமண் குழாய், தரை தளம் உள்ளிட்டவை கண்டறியப்பட்ட நிலத்தில் இருந்து, 100 மீட்டர் துாரத்தில், கல் திட்டை இருப்பது தெரியவந்துள்ளது. கி.பி., 12ம் நுாற்றாண்டு நடுகல் கண்டுபிடிப்பு
 • அம்பலுார் பாலாற்றில், கி.பி., 12ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, நடுகல் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.
 • வாணியம்பாடி அடுத்த, அம்பலுார் அருகே, தேங்காய் தோப்பு வட்டத்தில், பாலாற்றங்கரையில் பாதி உடைந்த நிலையில், ஒரு நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.இயந்திரத்தில், இப்பகுதியில் துார் வாரிய போது, நடுகல் இரண்டாக உடைந்துள்ளது. 
 • இந்த நடுகல்லை ஆய்வு செய்ததில், கி.பி., 12ம் நுாற்றாண்டை சேர்ந்த, பிற்கால சோழர்கள் ஆட்சியைச் சேர்ந்தது என, தெரிய வந்தது.
 • நடுகல்லில், ஒரு வீரனின் வலது கையில், போர் வாள் உள்ளது. இடது கையில், கேடயம் உள்ளது. போரில் எதிரி விட்ட அம்பு, வீரனின் மார்பில் பாய்ந்து இறந்து கிடக்கிறார். 
 • கல்லின் இடது பக்க மேல்புறத்தில், இரு பெண்கள், வீரனை தேவலோகத்திற்கு அழைத்து செல்வது போல உள்ளது. உடைந்த நிலையில், நடுகல்லின் மேற்புறம் மட்டும் கிடைத்துள்ளது.
'கேரள வங்கி' ஆா்பிஐ அனுமதி
 • கேரளத்திலுள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகள் அனைத்தையும், கேரள கூட்டுறவு வங்கியுடன் ஒன்றிணைத்து 'கேரள வங்கி' என்ற பெயரில் புதிய வங்கியை உருவாக்க அந்த மாநில அரசு ஆா்பிஐ-யிடம் அனுமதி கோரியிருந்தது. கூட்டுறவு வங்கியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவை எடுத்துள்ளதாக மாநில அரசு தெரிவித்திருந்தது.
 • இந்நிலையில், 'கேரள வங்கி' உருவாக்கத்துக்கு ஆா்பிஐ அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் மாநிலத்தின் பெரிய வங்கியாக 'கேரள வங்கி' உருவெடுக்கவுள்ளது.
நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாகக் குறையும்
 • நடப்பு 2019-2020 ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளா்ச்சி 5 சதவீதமாகக் குறைந்தது.
 • பணவீக்கம் கட்டுக்குள் இருந்தாலும், அது நாட்டின் வளா்ச்சியை அதிகரிப்பதற்குப் போதுமானதாக இல்லை. இதனால், இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) நிதிக் கொள்கைக் குழு, வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டியை (ரெப்போ ரேட்) கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து 1.35 சதவீதம் குறைத்துள்ளது. 
 • இந்நிலையில், நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 5.8 சதவீதமாகக் குறையும் என மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. அடுத்த நிதியாண்டில் (2020-2021) நாட்டின் வளா்ச்சி 6.6 சதவீதமாக இருக்குமெனவும் அந்நிறுவனம் கணித்துள்ளது. 
 • நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளா்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என ஆா்பிஐ கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள் அறிவிப்பு
 • இலக்கியத்திற்கான, 2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு போலந்து நாட்டின் எழுத்தாளர் ஓல்கா டோகார்சுக்கு வழங்கப்படுவதாகவும். 
 • 2019ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த பீட்டர் ஹேண்ட்கேவிற்கு வழங்கப்படுவதாகவும் நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.
`A' குரூப் ரத்தத்தை `O' குரூப்பாக மாற்றலாம்
 • 'O' பாசிட்டிவ் பிரிவு ரத்தத்தை அனைவருக்கும் ஏற்ற முடியும். அதனால்தான் 'O' ரத்தப்பிரிவு கொண்டவர்களை' யுனிவர்சல் டோனர்' என்று அழைக்கிறோம்.
 • உலகம் முழுவதும் காணப்படும் ரத்தத்தின் தட்டுப்பாட்டைப் போக்க 'A' பிரிவு ரத்தத்தை 'O' பிரிவாக மாற்றும் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 
 • ஆனால் 'O' ரத்தப்பிரிவு கொண்டவர்களின் சிவப்பணுக்களில் இந்த ஆன்டிஜென்கள் இருக்காது.Research
 • அதனால் 'A' ரத்தப்பிரிவில் இருக்கும் ஆன்டிஜென்னைக் கரைக்கும் முறையைக் கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் விதரி தலைமையிலான குழுவினர் நான்காண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு கண்டறிந்துள்ளனர். 
 • இரைப்பையையும் குடலையும் இணைக்கும் நாளத்தில் (gut) ஒருவகை என்ற பாக்டீரியா செயல்படுகிறது. அதிலிருந்து உருவாகும் நொதிகளுக்கு ஆன்டிஜென்னைக் கரைக்கும் தன்மை உள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளனர். 
 • அந்த பாக்டீரியாவில் சிறிய அளவை 'A' ரத்தப்பிரிவில் செலுத்தும்போது அதிலிருக்கும் ஆன்டிஜென் கரைந்துவிடும். அதனால் 'A' பிரிவு ரத்தம் 'O' பிரிவாக மாறிவிடும்.
சோலார் ஹீட்டர் கண்டுபிடித்த 8வயது சிறுமிக்கு நியூக்லியர் சயின்ஸ் விருது
 • மெக்ஸிகோவின் சியாபாஸ் நகரைச் சேர்ந்த 8 வயது சிறுமியான ஸ்சிட்சில் குவாடலூப் குரூஸ், முற்றிலும் சூரிய சக்தி மூலம் இயங்கி தண்ணீரை சூடாக்கும் சாதனத்தை உருவாக்கியதற்காக UNAM இன் அணுசக்தி அறிவியல் நிறுவன விருதை பெற்றுள்ளார்.
எதியோப்பியா பிரதமருக்கு அமைதிக்கான நோபல் பரிசு
 • ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி, ஆல்பிரட் நோபல் நினைவாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு, ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. 
 • அமைதிக்கான நோபல் பரிசு, ஆப்ரிக்க நாடான, எதியோப்பியாவின் பிரதமர் அபே அகமதுக்கு வழங்கப்படுவதாக, விருது குழுவினர் அறிவித்துள்ளனர்.
 • அண்டை நாடான எரித்ரியாவுடனான, 20 ஆண்டுகளுக்கு மேல் நீடித்த எல்லை பிரச்னையை தீர்த்து வைத்ததற்காகவும், சர்வதேச ஒத்துழைப்புக்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்காகவும், அகமதுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 • மேலும், அமைதிக்கான, 100வது நோபல் பரிசு பெறுபவர் என்ற பெருமையும், அகமதுக்கு கிடைத்துள்ளது. இந்திரா காந்தி விருதுக்கு சண்டி பிரசாத் பட் தேர்வு
 • தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருதுக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர் சண்டி பிரசாத் பட்டை, காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.முன்னாள் பிரதமர் இந்திரா பெயரில், தேசிய ஒருமைப்பாட்டு விருதை, 1985ம் ஆண்டு முதல் காங்கிரஸ் வழங்கி வருகிறது. 2017 - 18ம் ஆண்டுக்கான விருதுக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலரும், சமூக சேவகருமான, சண்டி பிரசாத் பட்டை, காங்., தேர்வு செய்துள்ளது. 
 • உத்தரகண்ட் மாநிலத்தை சேர்ந்த பிரசாத், 85, 'தசோலி கிராம சுவாராஜ்ய சங்கம்' என்ற அமைப்பை, 1964ல் துவக்கி, கிராம சேவைகளில் ஈடுபட்டார். இவருக்கு, 1986ல், பத்மஸ்ரீ; 2005ல், பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டன. 2013ல், இவருக்கு காந்தி அமைதி விருது வழங்கப்பட்டது.
பணக்கார இந்தியர் முகேஷ் அம்பானி:போர்பஸ் வெளியிட்ட பட்டியல்
 • அமெரிக்காவின் முன்னணி பத்திரிகையான போர்பஸ், 2019 ஆம் ஆண்டின் முதல் 10 பணக்கார இந்தியர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 • அதில் ரிலையன்ஸ் குழுத்தின் தலைவர் முகேஷ் அம்பானி 51.4 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் தரவரிசையில் முதலிடத்தையும், தொழிலதிபர் கௌதம் அதானி 15.7 பில்லியன் டாலர் வருமானத்துடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 
 • மூன்றாவது இடத்தில் இந்துஜா சகோதரர்கள், மற்றும் பல்லோஞ்ஜி மிஸ்ட்ரி, உதய் கோடக். ,ஷிவ் நாடார் உள்ளிட்ட 10 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். முகேஷ் அம்பானி தொடர்ந்து 12 வது ஆண்டாக பணக்கார இந்தியராக போர்பஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக சரிந்தது
 • கடந்த ஆகஸ்ட் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. இது, 7 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவு. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 4.8 சதவீதமாக இருந்தது.
 • தொழில்துறை உற்பத்தி, மின் உற்பத்தி மற்றும் சுரங்கத் துறைகளின் மோசமான செயல் திறனால், ஆகஸ்ட் மாதத்தில், தொழில்துறை உற்பத்தி, 1.1 சதவீதமாக குறைந்துள்ளது. 
 • தொழில்துறை உற்பத்தி குறியீட்டில், தயாரிப்பு துறை, 77 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது. இத்துறையானது, ஆகஸ்ட் மாதத்தில், 1.2 சதவீதமாக சரிந்துள்ளது. 
 • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், இதுவே, 5.2 சதவீதமாக அதிகரித்திருந்தது.மின் உற்பத்தியை பொறுத்தவரை, மதிப்பீட்டு காலத்தில், 0.9 சதவீதமாக சரிவை கண்டு உள்ளது. 
 • இதுவே, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், 7.6 சதவீதமாக அதிகரித்திருந்தது.சுரங்க துறையின் வளர்ச்சி, மதிப்பீட்டு காலத்தில், பெரிய மாறுதல்களின்றி, 0.1 சதவீதமாக உள்ளது.
 • நடப்பு ஆண்டில், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி, 2.4 சதவீதமாக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில், 5.3 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வேகமான மொபைல் இன்டர்நெட்: தென்கொரியா டாப்
 • மிக வேகமான மொபைல் இன்டர்நேட் சேவையை பயன்படுத்தும் 145 நாடுகளின் பட்டியலில் இந்தியா 131 வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் டாப் 10 இடத்தில் கூட அமெரிக்கா இடம்பெறவில்லை. 
 • மாறாக 35வது இடத்தில் உள்ளது. முதல் 15 இடங்களில் ஆசிய நாடுகளே இடம்பிடித்துள்ளன. இந்த பட்டியலில் தென்கொரியா (111.00 Mbps டவுன்லோட் வேகமாகவும், 16.51 Mbps அப்லோட் வேகமாகவும் உள்ளன), 2வது இடத்தில் சிங்கப்பூரும், 3வது இடத்தில் சீனாவும், 4வது இடத்தில் ஹாங்காங்கும், 5 வது இடத்தில் ஜப்பானும் உள்ளன. 
 • ஈரான் 6வது இடத்திலும், மாலத்தீவு 7 வது இடத்திலும், மொரீசியஸ் 8 வது இடத்திலும், இலங்கை 9 வதுஇடத்திலும், மலேசியா 10 வது இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில் பாக்., 12 வது இடத்தில் உள்ளது.கங்குலி சாதனையை முறியடித்தாா் கோலி
 • தோனிக்கு அடுத்து 50 டெஸ்ட்களுக்கு கேப்டனாக இருந்த சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்தாா் விராட் கோலி.
 • முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி கடந்த 2008 முதல் 2014 வரை 60 டெஸ்ட்களுக்கு கேப்டனாக பதவி வகித்தாா்.
 • புணேயில் நடைபெறும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் விராட் கோலியின் 50-ஆவது டெஸ்ட் ஆட்டமாகும். இதன் மூலம் சௌரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளாா் கோலி.
இரட்டை சதம் விளாசினார் கோஹ்லி
 • தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் கேப்டன் கோஹ்லி இரட்டை அடித்து அசத்தினார். 
 • 7 டெஸ்ட் அரங்கில் அதிக இரட்டை சதம் அடித்த வீரர்களில் கோஹ்லி, நான்காவது இடத்தை ஜெயவர்தனா (இலங்கை), ஹம்மண்டுடன் (இங்கிலாந்து) 4வது இடத்தை பகிர்ந்து கொண்டார். மூவரும் தலா 7 முறை இரட்டை சதம் அடித்தனர்.
 • பிராட்மேன் (12, ஆஸி.,), சங்ககரா (11, இலங்கை), லாரா (9, விண்டீஸ்) முதல் மூன்று இடத்தில் உள்ளனர். 
 • டெஸ்ட் அரங்கில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் பிராட்மேனை (6996) முந்தினார் கோஹ்லி (7000*). அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர்களில் 7வது இடத்துக்கு முன்னேறினார் 
பஞ்சாப் அணியின் இயக்குனராக கும்ப்ளே நியமனம்
 • இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே, இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். 
 • இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படுவார் என்றும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அவர் அந்த அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment