Friday, 6 September 2019

6th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சந்திரயான்2
 • சந்திரயான் 2 திட்டத்தின் இறுதிக்கட்டமாக, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணியில், கடைசி நிமிடங்களில் சிக்னல் கிடைக்காமல் போனது.
 • சந்திரயான் 2 திட்டத்தின் நிறைவுப்பணியான, விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கும் பணிக்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்வை நேரலையில் காண, பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வந்திருந்தார்.
 • திட்டமிட்டபடி நிலவை நோக்கிச் சென்ற விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்க 2.1 கிலோ மீட்டர் தொலைவே இருந்தபோது, சிக்னல் துண்டிக்கப்பட்டது. 
 • இதனால், சிக்னல் மீண்டும் வரும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்ரோ மையமே நிசப்தமானது. பின்னர், பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், விக்ரம் லேண்டரிலிருந்து எதிர்பார்த்தபடி சிக்னல் கிடைக்கவில்லை என்று அறிவித்தார்.
 • எனினும், எதிர்வரும் விண்வெளித் திட்டங்களில் விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என பிரதமர் மோடி நம்பிக்கையூட்டினார். சந்திரயான்-2 திட்டத்தின் 95 சதவிகித பணிகளை நிலவை ஓராண்டு சுற்றி வந்து ஆர்பிட்டர் மேற்கொள்ளவுள்ளது
கீழடி அகழாய்வில் மேலும் ஓர் உறைகிணறு கண்டெடுப்பு
 • கீழடியில் 2015-ல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதை பரிசோதித்ததில் சுமார் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
 • தொடர்ந்து மத்திய தொல்லியல்துறை 2 மற்றும் 3-ஆம் கட்ட அகழாய்வோடு பணிகளை நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ஆம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது.
 • தொடர்ந்து 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வுப் பணி தொல்லியல்துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை 5 பேரின் நிலங்களில் 30-க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டுள்ளன. 
 • இதில் மணிகள், அணிகலன்கள், பானை ஓடுகள், குறியீடு ஓடுகள், உறைகிணறுகள், இரும்பு பொருள்கள், செப்புக் காசுகள், உணவு குவளை, தண்ணீர் ஜாடி உள்பட 750-க்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. மேலும் அதிகளவில் சுவர்கள், கால்வாய்கள், தரைத்தளம், உறைகிணறு ஆகியனவும் கண்டெடுக்கப்பட்டன.
 • இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகழாய்வின் போது முருகேசன் என்பவரது நிலத்தில் மேலும், ஒரு உறைகிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கிணற்றில் இதுவரை 2 உறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
சபரிமலை கோயிலுக்கு தனி சட்டம் : கேரள அரசு
 • சபரிமலை கோயிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிப்பதாக சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு அறிவித்துள்ளது.
 • கேரள மாநிலத்தில் பந்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 முதல் 50 வயதுடைய பெண்கள் நுழைய மாநில அரசு தடை விதித்திருந்தது. 
 • இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைத்து வயதுடைய பெண்களும் கோவிலுக்கு செல்லலாம் என கடந்த ஆண்டு செப்டம்பரில் தீர்ப்பு அளித்து உத்தரவிட்டது. ஆனாலும் இந்த உத்தரவை மாநில அரசு ஏற்க மறுத்தது. 
 • சபரிமலை கோவிலில் நுழைய முயன்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த டிசம்.,- ஜன., மாதங்களில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து பல போராட்டங்களும் நடந்தது. ஆண் வேடமிட்டு நுழைய முயன்ற பெண்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். 
 • மேலும் பல போராட்டங்களால் சபரிமலை பகுதியில் பரபரப்பு நிலவியது.இந்நிலையில் சபரிமலை கோவிலை நிர்வகிக்க தனிச்சட்டம் கொண்டு வர ஆலோசிக்கப்பட்டு வருகிறது. 
 • தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவிலின் நிர்வாகத்திலும் மாற்றம் கொண்டுவரவும் ஆலோதனை நடக்கிறது. இவ்வாறு சுப்ரீம்கோர்ட்டில் கேரள அரசு தெரிவித்துள்ளத. 
 • மேலும் மண்டலபூஜை, மகரவிளக்கு விழாவிற்காக சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. 
 • கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைமை செயலாளர், திருவிதாங்கர் தேவசம்பர்டு தலைவர் மற்றும் பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகளவிலான குடிநீர் தொட்டிகள் மற்றும் கழிவறைகள் கட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தேஜஸ் போர் விமானங்கள் தயாரிக்க எச்.ஏ.எல்., நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம்
 • ரூ.45 ஆயிரம் கோடியில் 83 தேஜஸ் போர் விமானங்களை தயாரிக்க எச்.ஏ.எல்., நிறுவனத்துடன் இந்திய விமானப்படை ஒப்பந்தம் கையெழுத்தானது.
 • உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில், எச்.ஏ.எல்., நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்நிறுவனம் தயாரித்த 16 தேஜஸ் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
5 முறை ஹாட்ரிக் விக்கெட்; இலங்கை வீரர் லசித் மலிங்கா சாதனை
 • மூத்த இலங்கை வேகப்பந்து வீச்சாளரும், அணியின் கேப்டனுமான லசித் மலிங்கா, நியூசிலாந்திற்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியின் போது நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
 • 36 வயதான மலிங்கா, மூன்றாவது ஓவரில் கொலின் மன்ரோ, ஹமிஷ் ரதர்ஃபோர்ட், கொலின் டி கிராண்ட்ஹோம் மற்றும் ரோஸ் டெய்லர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரண்டு ஹாட்ரிக் எடுத்த ஒரே பந்து வீச்சாளர் என்ற பெருமையினையும் பெற்றார்.
 • 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் மேற்கிந்தியத் தீவுகளில் நடந்த சூப்பர் எட்டு போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மலிங்கா இந்த சாதனையை முதன்முதலில் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 • ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் ஒரு டி20 போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அயர்லாந்துக்கு எதிராக இந்த சாதனையை செய்தார்.
 • சர்வதேச கிரிக்கெட் பொறுத்தவரையில் இது மலிங்காவின் ஐந்தாவது ஹாட்ரிக் விக்கெட்டாகும். இதன் மூலம் ஐந்து முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே வீரர் என்னும் பெருமையினையும் பெற்றார் மலிங்கா. இவருக்கு முன்னதாக பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வசிம் அக்ரம் நான்கு முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment