Type Here to Get Search Results !

21st and 22nd SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம்
  • கீழடியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் மதுரை அருகே கீழடி கிராமத்தில் 4ம் கட்ட அகழாய்வு முடிவின் அறிக்கையை தமிழக தொல்லியல் துறை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. 
  • அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்வு செய்ததில் அவை கி.மு.6ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல் துறை தகவல் வெளியிட்டுள்ளது. சங்க காலத்திற்கும் முன்னதாகவே தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.
  • முதல் மூன்று கட்ட அகழாய்வின்படி, கீழடியில் கிடைத்த பொருட்கள் 2200 ஆண்டுகளுக்கு பழமையானவை என்று கருதப்பட்டது. ஆனால், 4ம் கட்ட ஆய்வில் இது மேலும் 400 ஆண்டுகளுக்கு பழமையானது என்று தெரிய வந்துள்ளது.
  • 'கீழடியில் நடந்த முதல் 3 அகழாய்வு முடிவுகளைப் பெற டெல்லி செல்ல இருக்கிறேன். விரைவில் மூன்று கட்ட அகழாய்வு முடிவுகள் வெளியிடப்படும். கீழடி அகழாய்வில் கிடைத்த அரிய கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்வதற்கு கீழடி பகுதியில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா. பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
    திருச்சியில் 10-ஆம் நூற்றாண்டின் சோழர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
    • திருச்சி உறையூரில், சாலை ரோடு பகுதியில் அமைந்துள்ள தான்தோன்றீஸ்வரர் கோயிலில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால கல்வெட்டு ஒன்று வரலாற்றுத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    • கோயில் முக மண்டபத்தின் தென்புறச்சுவரில் காணப்படும் இக்கல்வெட்டு, தமிழ் எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. எழுத்துக்கள் பதிவாகியுள்ள கல்துண்டுகள் மிகவும் சிதைந்திருப்பதால் கல்வெட்டை மசிப்படி எடுக்க முடியவில்லை. 
    • பொ.கா. 911-இல், முதல் பராந்தக சோழரின் நான்காம் ஆட்சியாண்டின் போது பதிவாகியுள்ள இக்கல்வெட்டு, கொடும்பாளூர் வேளிர்குல அரசர் தென்னவன் இளங்கோவேளாரான, தேவியருள் ஒருவரான அனயதஞ்சயதிரமதியார் சார்பாக இக்கோயில் இறைவனுக்கு அளிக்கப்பட்ட கொடை பற்றி தெரிவிக்கிறது.
    கூட்டுறவு வங்கி தலைவராக ஆர்.இளங்கோவன் தேர்வு
    • தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியின் தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இந்த பதவிக்கு சேலம் கூட்டுறவு வங்கியின் தலைவரான ஆர்.இளங்கோவனும், துணை தலைவராக கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரான எஸ்.ஆசைமணி ஆகியோர் நிர்வாக குழு உறுப்பினர்களால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    7 கைத்தறி நெசவாளர்களுக்கு, சிறந்த நெசவாளர்களுக்கான விருதுகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி
    • 27 கைத்தறி நெசவாளர்களுக்கு, சிறந்த நெசவாளர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசுத்தொகையை முதலமைச்சர் பழனிசாமி வழங்கினார். 
    • சிறந்த நெசவாளர் விருது, சிறந்த வடிவமைப்பாளர்களுக்கான விருதுகள் ரூ. 6.75 லட்சத்திற்கான காசோலைகளுடன் வழங்கப்பட்டது.



    தஹில்ரமாணியின் ராஜினாமா ஏற்பு - புதிய தலைமை நீதிபதியாக (பொறுப்பு) வினீத் கோத்தாரி நியமனம்
    • சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமாணி கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்த தஹில் ரமாணி, மகாராஷ்டிர மாநில அரசு வழக்கறிஞராக இருந்தார்.
    • பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக 2017-ஆம் ஆண்டு வரை பதவி வகித்தார். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவரை மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது.
    • இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தஹில் ரமாணி கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை குடிய
    • ரசுத் தலைவருக்கு கடந்த 6-ஆம் தேதி அனுப்பியிருந்தார்.இவரது ராஜினாமாவை ஏற்கக் கூடாது எனக் கோரியும் இவரை மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றக் கூடாது எனக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஹில் ராஜினாமா கடிதம் கொடுத்ததை அடுத்து அவரது அமர்வில் பட்டியலிடப்பட்ட வழக்குகளை அவர் விசாரிக்கவில்லை.
    • கொலிஜியத்தின் பரிந்துரை மற்றும் தனது பதவி விலகல் கடிதத்தின் மீது குடியரசு தலைவர் முடிவெடுக்கும் வரை வழக்குகளை விசாரிப்பதிலிருந்து தஹில் விலகியிருந்தார். இதனிடையே அரசு பங்களாவில் இருந்து தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியேறினார்.
    • இந்த நிலையில் அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
    அமெரிக்காவில் 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி: இந்தியர்கள் உற்சாகம்
    • பிரதமர் மோடி செப். 21 முதல் 27 வரை அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இப்பயணத்தின் முக்கிய நிகழ்ச்சியாக டெக்சாஸ் மாகாணத்தின் ஹூஸ்டன் நகரில் உள்ள 'என்.ஆர்.ஜி. கால்பந்து மைதானத்தில்' 'ஹவ்டி மோடி' நிகழ்ச்சி நடந்தது.
    பீகாரின் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையம் - துவக்கிவைத்தார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
    • பீகார் மாநிலத்தில் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையத்தை துவக்கி வைத்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
    • இந்த மகளிர் மட்டும் தபால் அலுவலகத்தில், தலைமை அதிகாரி முதல் தபால் விநியோகம் செய்பவர் வரை அனைத்தும் மகளிரே.  
    • பீகார் மாநிலத்தின் முதல் ஆதார் கேந்திர மையத்தையும் துவக்கி வைத்தார். இது நாட்டின் பத்தாவது ஆதார் கேந்திர மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
    • இந்திய அளவில், முதல் மகளிர் மட்டும் தபால் நிலையம், கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டெல்லியில் துவக்கி வைக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.



    கல்லி பாய் திரைப்படம் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை
    • 2020ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருத்திற்கு 28 இந்திய திரைப்படங்கள் பரிந்துரைக்கப்பட அதில் அதிகாரப்பூர்வமாக "கல்லி பாய்" திரைப்படம் தேர்வாகியுள்ளது.
    பொதுக்கணக்கு குழு தலைவராக அக்பருதீன் ஓவாய்சி தேர்வு
    • தெலுங்கானா மாநில சட்டமன்ற பொதுக்கணக்கு குழு தலைவராக மாநில AIMIM கட்சியின் தலைவரான அக்பருதீன் ஓவாய்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • இந்த குழுவின் மற்ற உறுப்பினர்களாக காங்கிரஸ் MLA டி.ஸ்ரீதர் பாபு மற்றும் த.தே.கூவின் சாண்ட்ரா வெங்கட்ட வீரையா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
    சீனாவில் தங்கம் வென்ற சிவகாசி எஸ்.ஐ
    • சீனாவில் நடந்த, உலக காவல் துறையினருக்கான, தடகள போட்டியில், சிவகாசி எஸ்.ஐ., கிருஷ்ணமூர்த்தி, தங்கம் வென்றார்.
    • 5,000 மீ., வேக நடை போட்டியில் பங்கேற்ற, கிருஷ்ணமூர்த்தி, 29 நிமிடங்களில், அத்துாரத்தை கடந்து, முதலிடம் பெற்று, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
    • 2017ல், சீனாவில் நடந்த, ஆசிய தடகள போட்டியில், நான்காவது இடம் பெற்றார்.



    உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கத்தை தட்டித் தூக்கிய இந்திய வீரர் 
    • உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 52 கிலோ எடைப் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது. இதில், ஆசிய சாம்பியனான 23 வயது இந்திய வீரர் அமித் பங்கால் உஸ்பெகிஸ்தான் நாட்டின் ஷகோபிதின் ஸோய்ரோவை எதிர்கொண்டார். 
    • இதில், ஸோய்ரோவ் இந்திய வீரர் அமித் பங்காலை 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கம் வென்றார். இதில் தோல்வியடைந்த அமித் பங்கால் வெள்ளிப்பதக்கம் வென்றார். 
    • இதன்மூலம், உலக குத்துச்சண்டையில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அமித் பங்கால் பெற்றுள்ளார்.
    இந்திய தென் ஆப்ரிக்கா 'டுவென்டி-20' தொடர் சமன்
    • தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' போட்டியில் பேட்ஸ்மேன்கள் ஏமாற்ற இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்ந்தது. 
    • இதன் மூலம், மூன்று போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமன் ஆனது. 
    உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் இந்தியாவின் ராகுல் அவேர்
    • உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: ஆண்கள் 61 கிலோ பிரிவில் இந்தியாவின் ராகுல் அவேர் அமெரிக்காவின் டைலர் கிராஃபை வீழ்த்தி வெண்கலம் வென்றார். 
    • ராகுலின் வெண்கலப் பதக்கத்திற்குப் பிறகு, உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் எண்ணிக்கை இப்போது ஐந்து இடங்களுக்குச் சென்றுள்ளது.



    சீன ஓபன் பாட்மிண்டன் பட்டம் வென்றார் கரோலினா
    • சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரின் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
    • இதில் கரோலினா மரின் 14-21, 21-17, 21-18 என்ற செட் கணக்கில் தாய் ஜு யிங்கை வீழ்த்தினார். முதல் செட்டை தாய் ஜு யிங் சிறப்பாக விளையாடி 21-14 என எளிதில் வென்றார். 
    பான்பசிபிக் ஓபன் டென்னிஸ்: நவோமி ஒசாகா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்
    • பான்பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டி ஜப்பானில் உள்ள ஒசாகா நகரில் நடந்தது. இதில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா, 41-ம் நிலை வீராங்கனையான ரஷியாவின் அனஸ்டாசியா பாவ்லிசென்கோவாவை சந்தித்தார். 
    • 69 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் நவோமி ஒசாகா 6-2, 6-3 என்ற நேர்செட்டில் பாவ்லிசென்கோவாவை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். 
    • நவோமி ஒசாகா 470 தரவரிசை புள்ளியுடன் ரூ.1 கோடி பரிசு தொகையும் அள்ளினார். 2-வது இடம் பெற்ற பாவ்லிசென்கோவா ரூ.54 லட்சத்தை பரிசாக பெற்றார்.
    காயத்தால் பைனலில் விலகல் தீபக் பூனியாவுக்கு வெள்ளி பதக்கம்
    • கஜகஸ்தானில் நடைபெற்று வரும் இந்த தொடரின் இறுதிப் போட்டியில், 2016 ரியோ ஒலிம்பிக்சில் தங்கப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் ஹாசன் யாஸ்தானிசராட்டியுடன் மோதவிருந்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக தீபக் பூனியா காயத்தால் விலக நேரிட்டது. இதையடுத்து ஹாசன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
    • 2வது இடம் பிடித்த தீபக் வெள்ளிப் பதக்கம் பெற்றார். இந்த தொடரில் இந்தியாவின் வினேஷ் போகத், பஜ்ரங் பூனியா, ரவி தாஹியா ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றிருந்த நிலையில், தீபக் 4வது பதக்கமாக வெள்ளி வென்றார். இவர் இந்தியாவுக்கு ஒரு ஒலிம்பிக் 'கோட்டா' இடத்தையும் உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel