Friday, 20 September 2019

20th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

காஞ்சிபுரம் அருகே 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு
 • காஞ்சிபுரம் அருகேயுள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த படைவீரரின் உருவம் பொறித்த நடுகல் வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 • தமிழக வரலாற்றில் கோயிலில் தொண்டு செய்வோருக்காக பல்வேறு ஊர்களை அகரம் என்ற பெயரில் இறையிலி நிலங்களாகப் பிற்காலச் சோழர்கள் வழங்கியுள்ளனர். இறையிலி நிலங்கள் என்பவை வரி விலக்கு அளிக்கபட்ட பகுதிகளாகும்.
 • அக்கிராமங்களில் இருந்து சோழர் காலத்தில் வரி வசூல் செய்யப்படவில்லை. அதேபோல் கோவிந்தவாடி அகரம் கிராமமும் சோழர் காலத்தில் புகழ்பெற்று விளங்கிய ஊராகும்.
 • அதன் அடையாளமாக, இவ்வூரில் உள்ள மாரியம்மன் கோயிலில் ஒரு நடுகல் காணப்படுகிறது. மாரியம்மன் கோயில் கருவறைக்கு வெளியில் அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தின் வலது புறச் சுவற்றில் நடுகல் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. வழிபாட்டில் உள்ள இந்நடுகல் கி.பி.12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும்.
 • இந்நடுகல்லில் படைவீரன் ஒருவன் இடது கையில் வில்லைத் தாங்கியுள்ளான். அவனது வலது கையில் உள்ள அம்பு வில்லில் பூட்டப்பட்டுள்ளது. தலையில் நேராக நீண்ட கொண்டையும், முகத்தில் பெரிய மீசையும் உள்ளது.
 • வலது தோள்பட்டையின் பின்புறம் அம்புகளை செருகி வைக்கும் அம்புக்கூடு காணப்படுகிறது.
 • வலது கையில் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இடுப்பில் அரையாடையுடன், கால்கள் இரண்டும் இடது புறம் நோக்கித் திரும்பிய நிலையில் காணப்படுகின்றன.
 • இந்த அடையாளங்கள் யாவும் வீரனுக்குரியவையாகும். எனவே, இந்நடுகல் வீரன் ஒருவனுக்காக எடுக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. போர்க் களத்தில் வீர மரணம் அடைந்த வீரன் ஒருவனுக்காக இந்த நடுகல் அமைக்கப்பட்டிருக்கலாம்.
வேளாண்மைத் துறைக்கு ஐந்தாவது முறையாக கிரிஷி கர்மான் விருது
 • தமிழக அரசின் முயற்சிகளாலும், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேளாண்மைத் துறை கடைப்பிடித்த புதிய சாகுபடி தொழில்நுட்பங்களாலும் கடந்த 2011-12-ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நான்கு ஆண்டுகளில் 100 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உணவு தானியம் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. இந்தச் சாதனைக்காக நான்கு முறையும் கிரிஷ் கர்மான் விருதினை மத்திய அரசு வழங்கியுள்ளது.
 • கடந்த 2011-12-ஆம் ஆண்டில் 101.52 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியமும், 2013-14-ஆம் ஆண்டில் 6.14 லட்சம் மெட்ரிக் டன் பயறுவகை உற்பத்தி செய்து சாதனை அடைந்ததற்கும், 2014-15-ஆம் ஆண்டில் 40.79 லட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தி செய்தும், 2015-16-ஆம் ஆண்டிலும் உணவு தானிய உற்பத்திக்காகவும் தமிழக அரசு விருதுகளைப் பெற்றது.
 • 2016-17-ஆம் ஆண்டில் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்ட போதும் அரசின் சீரிய முயற்சிகளால் 2017-18-இல் 107.13 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 
 • இதுபோன்ற சாதனைகளுக்காக வேளாண்மைத் துறைக்கு ஐந்தாவது முறையாகவும் கிரிஷி கர்மான் விருதினை மத்திய அரசு அளித்துள்ளது. வெட்கிரைண்டர்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு
 • ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 37 வது கூட்டம் கோவா மாநிலம் பனாஜியில் நடைபெற்றது. ஆடைகள் மற்றும் பைகளில் பயன்படுத்தப்படும் ஜிப்புகளுக்கான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிதமாகவும், கடல் எரிபொருள்கள் மீதான வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகவும், கல் குழவிகளை கொண்ட வெட் கிரைண்டர்களுக்கான வரி 12 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாகவும், 5 சதவிகிதமாக இருந்த சமையல் புளிக்கான வரி முற்றிலும் நீக்கப்படுவதாகவும் கூறினார்.
 • உள்நாட்டில் தயாரிக்கப்படாத பாதுகாப்பு துறைக்கு தேவையான சில சிறப்பு பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். 
 • 17 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளதை ஒட்டி, அந்த போட்டி சார்ந்த சரக்கு மற்றும் சேவைகளுக்கான வரியும் விலக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கார்ப்பரேட் வரி 25.2 சதவீதமாக குறைப்பு 
 • நிதி சலுகைகள் மற்றும் வரி விலக்குகள் பெற்று வரும் நிறுவனங்களுக்கு நிதி நிவாரணம் அளிக்கும் வகையில், குறைந்தபட்ச மாற்று வரி எனப்படும் மேட் வரியை தற்போதைய 18.5 சதவீதம் என்ற அளவில் இருந்து 15 சதவீதமாக குறைத்து உள்ளோம்.
 • இந்நிலையில், எந்தவொரு வரிவிலக்கு உள்ளிட்டவற்றையும் எதிர்பார்க்காத நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி 22 சதவீதமாக குறைக்கப்படும். 
 • அரசிடமிருந்து ஊக்கத்தொகை அல்லது மற்ற சலுகைகளை பெறும் நிறுவனங்களுக்கு ஏற்கனவே கார்ப்பரேட் வரி 35 சதவீதம் இருந்த சூழலில் தற்போது அது 25 சதவீதமாக குறைக்கப்படும்.
 • இன்னமும் உலக அளவில் அதிக அளவு கார்ப்பரேட் வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 • ''மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், 2019-20 நிதி ஆண்டின் வருமான வரி சட்டத்தில் ஒரு புதிய திருத்தம் சேர்க்கப்படுகிறது. அதன்படி அக்டோபர் 1, 2019 அல்லது அதற்கு பிறகு பதிவாகும் புதிய உள்நாட்டு நிறுவனங்களுக்கு , 15 சதவீதத்தில் வருமான வரி செலுத்த ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது'' என்று நிதி அமைச்சர் குறிப்பிட்டார்.
 • உள்நாட்டு நிறுவனங்களுக்கு 30 சதவீதம் கார்ப்பரேட் வரியும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 40 சதவீதம் கார்ப்பரேட் வரியும், வெளிநாட்டு இந்தியாவில் விதிக்கப்படுகிறது. மேலும், சுகாதாரம் மற்றும் கல்வி தொடர்பான கூடுதல் வரி 4 சதவீதம் விதிக்கப்படுகிறது.
சர்தார் படேல் ஒற்றுமை விருது
 • தேச ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்புக்காக சேவையாற்றும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளை கவுரவிக்கும் வகையில், ஆண்டு தோறும், சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது வழங்கப்படவுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.ஒரே நாளில் 2000 புள்ளிகள் உயர்ந்து இந்திய பங்குச்சந்தை வரலாற்று சாதனை
 • வாரத்தின் கடைசி வர்த்தக தினமான இன்று பங்கு சந்தையில் 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்றம் கண்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
 • நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவித்த வரி சலுகையால் பங்குசந்தை புள்ளிகள் உயர்வு பெற்று உள்ளன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரே நாளில் 2 ஆயிரம் புள்ளிகளை தாண்டி தற்போது வர்த்தகம் நடைபெற்று வருகிறது. தேசிய பங்குச் சந்தையான தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 600 புள்ளிகளை தாண்டி வர்த்தகமானது.
 • தயாரிப்பு துறையில் புதிய முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வருமான வரி சட்டத்தில் 2019 - 20 நிதியாண்டு முதல் புதிதாக ஒரு பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. 
 • அதன்படி அக்டோபர் 1ஆம் தேதிக்கு பிறகு தயாரிப்பு துறையில் தொடங்கப்படும் எந்த புதிய உள்ளூர் நிறுவனமும் 15 சதவீதம் மட்டும் வரி செலுத்தலாம் என்றும், வேறு எந்த சலுகைகளும் பலன்களும் பெறாதமால் 2023 மார்ச் 31ஆம் தேதிக்குள் தயாரிப்பை தொடங்கும் நிறுவனங்களுக்கு மட்டும் இந்த சலுகை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 
 • இதன் மூலம், முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ஒரே நாளில் ரூபாய் இரண்டு லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவில் நான்கு நாடுகள் இணைந்து ராணுவ கூட்டு பயிற்சி
 • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சார்பாக, ரஷ்யாவில் பன்னாட்டு ராணுவப் பயிற்சி நடைபெற்று வருகிறது. 
 • இந்த பன்னாட்டு ராணுவ கூட்டுப் பயிற்சியில் இந்தியா, ரஷ்யா, சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் பங்கேற்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 • வரும் செப்டம்பர் 23ம் தேதி வரை நடைபெறும் பன்னாட்டு ராணுவ பயிற்சியில் தத்தமது நாட்டின் சாகசங்கள் மற்றும் துல்லிய தாக்குதல்களை செய்து காட்டி ராணுவ வீரர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
 • ஹெலிகாப்டர் சாகசங்கள், பறந்து பறந்து தாக்குதல், ஊர்ந்து சென்றும், மறைந்திருந்தும் தாக்குதல், குண்டு மற்றும் பீரங்கிகளைக் கொண்டு தாக்குதல்கள் என போர் முறைகள் தத்ரூபமாக நடத்தப்பட்டுள்ளது.
 • பயங்கரவாதத்தை முறியடிக்கும் முனைப்பில் பல்வேறு நாடுகள் செயல்பட்டு வரும் நிலையில், பன்னாட்டு பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள ராணுவ வீரர்களின் சாகச வீடியோ காட்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியாவுக்கு வெண்கலப் பதக்கம்
 • கஜகஸ்தானில் உள்ள நுர்-சுல்தானில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான 65 கிலோ எடைபிரிவில் இந்தியாவைச் சேர்ந்த பஜ்ரங் புனியா வெண்கல பதக்கத்திற்கான சுற்றில் மங்கோலியாவைச் சேர்ந்த கிராப்லெரை எதிர்கொண்டார்.
 • அப்போது பஜ்ரங் புனியா ஒரு கட்டத்தில் 0-6 என பின் தங்கியிருந்தார். அதன்பின் சிறப்பாக சண்டையிட்டு 8-7 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்று வெண்கல பதக்கம் வென்றார்.
 • கடந்த ஆண்டு இதே போட்டியில் வெள்ளிப்பதக்கமும், 2013-ல் வெண்கல பதக்கமும் அவர் வென்றிருந்தார்.
 • இந்த வெற்றியின் மூலம் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் மூன்று பதக்கங்களை புனியா வென்றுள்ளார்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment