Tuesday, 3 September 2019

1st & 2nd SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

24 மணி நேர குடிநீர் திட்டத்துக்காக பாராட்டு! மாநகராட்சிக்கு 'ஸ்காட்ச்' விருது
 • அகில இந்திய அளவில், மாநகராட்சியால் செயல்படுத்தும் திட்டங்களில், மக்களுக்கு பயன் தரக்கூடிய அவசியமான சிறந்த திட்டம் என்ற அடிப்படையில், கோவை மாநகராட்சியில், 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்கு, 'ஸ்காட்ச்' விருது வழங்கப்பட்டுள்ளது.
2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண்குவளை: கீழடி ஆச்சரியம்
 • சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த சில வருடங்களாக அகழாய்வு நடைபெற்று வரும் நிலையில் கடந்த ஞாயிறன்று 2500 ஆண்டுகளுக்கு முந்தைய சுடாத மண் குவளை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
 • பொதுவாக மண்பாண்டப் பொருள்களை சுட்டால் மட்டுமே, புவியில் மட்காமல் நீண்ட நாள்கள் இருக்கும்! சுடாத மண்பாண்டப் பொருள்கள் சில நூற்றாண்டுகளிலேயே மட்கிவிடும். ஆனால் கீழடியில் கிடைக்கப்பெற்ற ஒரு சுடாத மனுக்களை 2500 ஆண்டுகளாக மக்காமல் உள்ளது. அது மட்டுமின்றி அந்த மண்குவளை பளபளப்பாக இருப்பதாகவும் தொல்லியல் ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்
தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்திரராஜன் நியமனம்
 • தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை  சவுந்திரராஜன் தெலுங்கானா மாநில கவர்னரானார்  கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • தெலுங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்திரராஜன், மஹாராஷ்டிரா கவர்னராக பகத் சிங் கோஷ்யாரி, ஹிமாச்சல் கவர்னராக பண்டாரு தத்தாத்ரேயா, கேரள கவர்னராக ஆரிப் முகமது கான், ஹிமாச்சல் கவர்னராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா, ராஜஸ்தான் கவர்னராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
ஜக்கி வாசுதேவின் 'மிஷன் காவிரி': அதிரடி திட்டம்
 • ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நதிகளை மீட்பதற்காக மக்களின் ஆதரவு பெற 'மிஸ்டு கால்' கொடுக்க சொன்னார். கோடிக்கணக்கான பேர் அதற்கு ஆதரவு அளித்து மிஸ்டு கால் கொடுத்தனர். அந்த ஆதரவுகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் சமர்பித்தார்.
 • பின்பு நதிகளை மீட்டெடுப்பதற்கான வரைவு திட்டத்தை உருவாக்கினர்.
 • இதன் அடுத்த கட்டமாக தற்பொது காவிரி நதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, ஜக்கு வாசுதேவ் அதிரடி திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். 
 • அதாவது 83 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காவிரி வடிநில பகுதியில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரக்கன்றுகள் நடப்பட இருப்பதாகவும், இதன் முதல் கட்டமாக அடுத்த 4 ஆண்டுகளில் 73 கோடி மரக்கன்றுகள் நடப்பட இருப்பதாகவும் கூறியுள்ளார். 
இந்தியாவின் முதல் முதுகெலும்பு அறுவைசிகிச்சை ரோபோ சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு
 • ஐஐடி சென்னையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், நோயாளிகளுக்கு குறைந்த வலிதரும் மற்றும் மலிவான வகையில் கிடைக்கும் முதுகெலும்பு அறுவைசிகிச்சையை செய்யும் இந்தியாவின் முதல் ரோபோட்-ஐ உருவாக்கியுள்ளனர்.
 • இந்த 'முதுகெலும்பு அறுவைசிகிச்சை ரோபோட்' தனது செயல்பாடுகளுக்காக வழக்கமான புகைப்பட வழிகாட்டும் இயந்திர அமைப்பை (Conventional image guided robotic system) பயன்படுத்துகிறது. குறைந்த அளவே ஆக்கிரமிக்கும் அறுவைசிகிச்சையான இதற்கு, ஓபன் சர்ஜரி போல மிகப்பெரிய வெட்டுகள் தேவைப்படாது. 
 • மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தால் நிதியுதவி வழங்கப்பட்ட இந்த திட்டமானது, உத்சாதர் அவிஷ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பமானது டெல்லி ஐஐடியில் நடைபெற்ற டெக்எக்ஸ்(TechEX) நிகழ்வில் உலகின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
புதுவையில் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடக்கம்
 • புதுவையில் தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை முதல்வர் வே.நாராயணசாமி சனிக்கிழமை தொடக்கிவைத்தார்.
 • புதுச்சேரி இந்திரா காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் நடைபெற்ற விழாவுக்கு புதுவை சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் தலைமை வகித்தார். 
 • தேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் புதுவை மாநிலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரம் பேர் பயனடைவர். இதன் மூலம், ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறலாம். இந்தத் திட்டம், முதல்வர் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்துச் செயல்படுத்தப்படும் என்றார் அவர்.ஹரியானாவில் கடன் தள்ளுபடி
 • ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. 
 • இதையடுத்து, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை, மாநில அரசு அறிவிக்கிறது. விவசாய கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வாங்கிய விவசாயிகள், அந்த கடனுக்கான வட்டியை திரும்ப செலுத்த முடியாமல் அவதிப்படுகின்றனர். 
 • இதை மனதில் வைத்து, பயிர் கடனுக்கான, 4,750 கோடி ரூபாய் மதிப்புள்ள வட்டி மற்றும் அபராத தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த அறிவிப்பின் மூலம், 10 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
முக்கிய எட்டு துறைகள் உற்பத்தி 2.1 சதவீதமாக குறைவு
 • உரம், உருக்கு, சிமென்ட், நிலக்கரி, மின்சாரம், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள் ஆகிய எட்டு துறைகளின் உற்பத்தி கடந்த ஆண்டு ஜூலையில் 7.3 சதவீதம் வளர்ச்சியைப் பெற்றிருந்தது. 
 • இந்த நிலையில், நடப்பாண்டு ஜூலையில் அவற்றின் உற்பத்தி வளர்ச்சி 2.1 சதவீதமாக குறைந்துள்ளது. சுத்திகரிப்பு பொருள்கள், நிலக்கரி, இயற்கை எரிவாயு உற்பத்தி மதிப்பீட்டு மாதத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. 
 • அதேபோன்று, உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் உற்பத்தி முறையே 6.6 சதவீதம், 7.9 சதவீதம், 4.2 சதவீதம் என்ற அளவில் சரிந்துள்ளது. 
 • இருப்பினும், கடந்தாண்டு ஜூலையில் 1.3 சதவீதமாக காணப்பட்ட உரத்துறையின் உற்பத்தி நடப்பாண்டில் 1.5 சதவீதம் என்ற அளவில் சற்று வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான நான்கு மாதங்களில் எட்டு துறைகளின் வளர்ச்சி விகிதம் 3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
 • கடந்தாண்டு இதே கால அளவில் காணப்பட்ட வளர்ச்சியான 5.9 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் இது பாதி அளவு குறைவாகும்.
 • எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி விகிதம் நடப்பாண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சரிவடைந்து வருகிறது. ஏப்ரலில் இதன் வளர்ச்சி விகிதம் 5.8 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாக குறைந்தது. 
 • மேலும் இது, மே மாதத்தில் 4.3 சதவீதமாகவும், ஜூன் மாதத்தில் 0.7 சதவீதமாகவும் சரிந்தது என மத்திய அரசு அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் (ஐஐபி), இந்த எட்டு நிறுவனங்களின் பங்களிப்பு 40.27 சதவீத அளவுக்கு உள்ளது.
அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்ப்பு
 • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, அப்பாச்சி ரகத்தைச் சேர்ந்த எட்டு ஹெலிகாப்டர்கள், செப்.,3 இந்திய விமானப் படையில் சேர்க்கப்பட உள்ளன.
 • அதி நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய, தாக்குதல் வகையைச் சேர்ந்த, ஏ.எச்., - 64இ என்ற, அப்பாச்சி ரக ஹெலிகாப்டர், அமெரிக்க நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 
 • தற்போது, உலகில் உள்ள, அதி நவீன, தாக்குதல் திறன் உடைய ஹெலிகாப்டர்களில், இது தான், முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவிடமிருந்து, 22 ஹெலிகாப்டர்களை வாங்க, மத்திய அரசு, 2015ல் ஒப்பந்தம் செய்தது. கார்வி குஜராத் பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
 • கார்வி குஜராத் பவனை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்வின்போது, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மற்றும் துணை முதல்வர் நிதின் படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
'தூய்மை இந்தியா' திட்டத்திற்காக மோடிக்கு அமெரிக்காவில் விருது
 • பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்து 2014ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. வீடுகளில் கழிவறைகள் கட்டுவது, பொதுக்கழிப்பறைகள் அமைப்பது, திடக் கழிவு மேலாண்மை உருவாக்குவது உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது. 
 • இந்தத் திட்டத்தை பாராட்டும் வகையில் அமெரிக்காவின் பில் மற்றும் மெலிந்தா கேட்ஸ் நிறுவனம் விருது ஒன்றை வழங்குகிறது. இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்கா செல்லும் போது, இந்த விருது வழங்கப்படவுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் மூலம் ரூ.98,202 கோடி வருவாய் கிடைத்துள்ளது: மத்திய அரசு
 • ஆகஸ்ட் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் மூலம் ரூ.98,202 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ரூ.98,202 கோடியில் சிஜிஎஸ்டி ரூ.17,733 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.24,239 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.48,958 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலக குத்துச்சண்டை போட்டி: எரிஸ்லேன்டி லாரா சாம்பியன்
 • உலக குத்துச்சண்டை சம்மேளனம் சார்பில் நடைபெற்ற சூப்பர் வெல்டர்வெயிட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் கியூபாவின் எரிஸ்லேன்டி லாரா.துப்பாக்கிச் சுடுதலில் மேலும் ஒரு தங்கம்
 • பிரேசிலில் நடக்கும் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ரைஃபில்பிரிவில் இந்திய வீராங்கனை யாஷ்அஸ்வினி தேஸ்வால் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். 
 • அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக் தொடருக்கு இதுவரை அஸ்வினி, சஞ்சீவ் ராஜ்புத், அஞ்சும் மோட்கில், அபூர்வி சண்டிலா, சவுரவ் சவுத்ரி, அபிஷேக் வர்மா, திவ்யான்ஷ் சிங் பன்வார், ரஹி சம்போத், மனு பாகேர் ஆகிய 9 இந்திய வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர். 
கபில்தேவ் சாதனையை முறியடித்த இஷாந்த் சர்மா
 • விண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஹாமில்டன் விக்கெட்டை வீழ்த்திய இஷாந்த் சர்மா, கபில் தேவ் சாதனையை முறியடித்தார்.
 • கபில், ஆசியாவுக்கு வெளியே 155 விக்கெட் வீழ்த்தியிருந்தார். 156 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் கபிலின் சாதனையை இஷாந்த் முறியடித்தார். 
 • அனில் கும்ப்ளே ஆசியாவுக்கு வெளியே 200 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெண்கலம்
 • பிரேசிலில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெண்கலம் கிடைத்துள்ளது. 
 • அபூர்வி சன்டிலா (ராஜஸ்தான்), தீபக் குமார் (டெல்லி) இணை தங்கம் வென்றுள்ளனர். மேலும் அஞ்சும் மவுட்கில் (சண்டிகர்), திவ்யான்ஸ் சிங் (ராஜஸ்தான்) இணை வெண்கலம் வென்றுள்ளனர். 
விண்டீஸ் அணிக்கு எதிரான தொடரைவென்றது இந்தியா
 • விண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இந்திய அணி, 257 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஜடேஜா, முகமது ஷமி தலா 3 விக்கெட் சாய்க்க, டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது இந்தியா.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment