- தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வை 2.70 லட்சம் பேர் எழுதினர். வினாத்தாள் மிக எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
- இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் ஒரு மாதத்தில் காவல் துறை இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
- மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பாளர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகிய பிரிவுகளில் 8 ஆயிரத்து 826 காலிப் பணியிடங்களுக்காக 228 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2.70 லட்சம் பேர் தேர்வெழுதினர்.
- இதற்காக 32 மாவட்ட தலைநகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் 228 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
- காவல் துறை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. டி.ஐ.ஜி.க்கள் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
- காவலர் எழுத்துத் தேர்வுக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர்.
- எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதித் தேர்வுக்கு அனுமதிக்கபடுவர்.
- கயிறு ஏறுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். மார்பு அளவு, உயரம் ஆகியற்றையும் கணக்கிட்டு உடல் தகுதித் தேர்வில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். இந்த இரண்டிலும் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும்.
- வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் ஒரு மாதத்தில் காவல் துறை இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றனர்.
காவலர் எழுத்துத் தேர்வு உத்தேச விடைகள் வெளியீடு / TNUSRB POLICE CONSTABLES EXAM ANSWER KEY RELEASED 019
August 26, 2019
0
Tags