Type Here to Get Search Results !

8th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடி அகழாய்வில் இரும்புத் துண்டுகள் கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில், தமிழக அரசு சார்பில் 5 -ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தோண்டப்பட்ட குழிகளில் இதுவரை ஏராளமான பழங்காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 
  • தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரும்புத் துண்டுகள், 2,500 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது.
பர்கூரில் புதிய கற்கால மற்றும் பெருங்கற்காலப் பொருள்கள் கண்டுபிடிப்பு!
  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே குட்டூர் கிராமத்தில் புதிய கற்கால மற்றும் பெருங்கற்கால தொல் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
  • இந்த ஆய்வின்போது பெருங்கற்கால மக்கள் பயன்படுத்திய பொருள்கள், பானை ஓடுகள், குயவர்கள் பானை செய்யவும் மெருகேற்றவும் பயன்படுத்தும் சுடுமண் கட்டி தட்டும் கருவிகள், விலங்கின் எலும்புத்துண்டுகள் மற்றும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள், பருப்பு உடைக்கும் கல் கருவிகள், தானியம் அரைக்கப் பயன்படும் கருவிகள், கவண் கற்கள் ஆகியவை கிடைத்தன.
  • பேராசிரியர்இரண்டு பண்பாடுகளுக்குரிய தொல்லியல் எச்சங்கள் கிடைத்திருப்பதால் இப்பகுதி மக்கள் புதிய கற்காலத்தில் இருந்து பெருங்கற்காலப் பண்பாட்டுக்கு முன்னேறியவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.
  • மேலும் ரசகோட்டப்பானை ஓடுகள், கறுப்பு பானை மூடி, நீண்ட பிடியுடன்கூடிய சிவப்பு பானை ஓடுகள், பலவித அலங்கார வேலைப்பாடு கொண்ட சிவப்பு பானை ஓடுகள் ஆகிய பானை ஓடுகளையும் கண்டுபிடித்தோம்.
  • விவசாயிகள் நிலத்தை உழுது சீர்ப்படுத்தி செம்மைப்படுத்தும் பணியை மேற்கொள்வதால், பெரும்பான்மையான கருவிகள் சிதைந்த நிலையிலே கிடைக்கப் பெற்றன. பெரும்பான்மையாகக் குயவர்கள் பயன்படுத்தும் தொழில் கருவிகள் கிடைத்திருப்பதால், இவை அனைத்தும் குயவர் சமுதாயத்தைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும்
கருக்கலைப்பு தொடர்பான சட்ட முன்வரைவு மத்திய சட்டத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது: மத்திய அரசு
  • கருக்கலைப்பு செய்வதற்கான காலத்தை 20 வாரங்களில் இருந்து 24 வாரங்கள் ஆக உயர்த்த கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்தது. 
  • கருக்கலைப்பு தொடர்பான சட்ட முன்வரைவு தயாரிக்கப்பட்டு மத்திய சட்டத் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார குடும்பநலத் துறை பதில் அளித்துள்ளது. 
டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி 2 எம்.எல்.ஏக்கள் திடீர் தகுதிநீக்கம்
  • டெல்லியைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இருவரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் அணில் பாஜ்பாய் மற்றும் தேவேந்திர ஷெராவத் ஆகியோர் தகுதி நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் அறிவித்துள்ளார். 
  • ஏற்கனவே ஒரு எம்.எல்.ஏ தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது டெல்லியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 70 தொகுதிகளில் போட்டியிட்டு 67ல் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. 
  • தற்போது 3 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஆம் ஆத்மியின் பலம் 64 ஆக குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது



மருத்துவ கமிஷன் மசோதாவுக்கு ஒப்புதல்
  • பார்லிமென்டின் இரு சபைகளிலும், தேசிய மருத்துவ கமிஷன் மசோதா நிறைவேறிய நிலையில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த், நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளார்.
  • ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளதால், மத்திய அரசாணை வெளியாகும். அதன் பின், விதிமுறைகள் வகுக்கப்படும். அதை தொடர்ந்து, தேசிய மருத்துவ கமிஷன் அமைக்கப்படும். இந்தப் பணிகள், ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும்.மத்திய அரசின், தொலைநோக்கு திட்டம் இது. 
பிரணாப் முகர்ஜிக்கு 'பாரத ரத்னா' விருது
  • முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி உட்பட மூவருக்கு, நாட்டின் உயரிய, 'பாரத ரத்னா' விருது, நேற்று வழங்கப்பட்டது.கடந்த ஜனவரியில், முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி, 'பாரதிய ஜனசங்' தலைவர், மறைந்த, நானாஜி தேஷ்முக் மற்றும் மறைந்த பாடகர், பூபென் ஹசரிகாவுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்தது. 
  • விருது வழங்கும் விழா, டில்லி, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது. இதில், ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்திடம் இருந்து, பிரணாப் முகர்ஜி, விருது பெற்றார்.
  • அதுபோல, ஹசரிகாவின் மகன், தேஜ்; நானாஜி தேஷ்முக்கின் நெருங்கிய உறவினர், விக்ரம்ஜீத் சிங் ஆகியோரிடம், விருது வழங்கப்பட்டது.
  • நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி, வெங்கையா நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வு அறிவித்த தென்னாப்பிரிக்க மூத்த வீரர்
  • தென்னாப்பிரிக்க அணியின் மூத்த வீரரான ஹாஷிம் ஆம்லா திடீரென நேற்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 
  • 2004ம் ஆண்டு தென்னாப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுகமான ஆம்லா, 2008ம் ஆண்டில் ஒருநாள் அணியிலும் சேர்க்கப்பட்டார். தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9282 ரன்களையும் 181 ஒருநாள் போட்டிகளில் ஆடி 8113 ரன்களையும் குவித்துள்ளார். 



ஆக்கர்மேன் உலக சாதனை
  • ஒரு 'டுவென்டி-20' போட்டியில் 7 விக்கெட் சாய்த்து உலக சாதனை படைத்துள்ளார் தென் ஆப்ரிக்காவின் கோலின்ஆக்கர்மேன். இங்கிலாந்தில் 'விட்டாலிட்டி பிளாஸ்ட்' என்ற 'டுவென்டி-20' தொடர் நடக்கிறது. 
  • ஆக்கர்மேன் 4 ஓவரில் 18 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.இதையடுத்து 'டுவென்டி-20' வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர் என புதிய உலக சாதனை படைத்தார். 
  • இதற்கு முன் 2011ல் கவுன்டி தொடரில் கிளாமர்கன் அணிக்கு எதிராக, சாமர்சட் அணிக்காக விளையாடிய மலேசிய பவுலர் அருள் சுப்பையா 5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அதிகமாக இருந்தது
தேர்தல் முறைகேடு விவகாரம் - இந்திய வில்வித்தை சங்கத்தை சஸ்பெண்ட் செய்த உலக வில்வித்தை அமைப்பு
  • இந்திய வில்வித்தை சங்கத்தில் இரு பிரிவினருக்கு இடையே மோதல் இருந்து வந்தது. இதனால் தேர்தலை டெல்லியிலும், சண்டிகரிலும் நடத்த முடிவு செய்தனர். இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
  • இதற்கிடையே தேர்தலை சரியான முறையில் நடத்தாவிடில், இந்திய வில்வித்தை சங்கம் சஸ்பெண்ட் செய்யப்படும். உலகளவிலான தொடரில் பங்கேற்க இயலாது என்று உலக வில்வித்தை அமைப்பு எச்சரித்தது. தேர்தல் குறித்த விவகாரம் கோர்ட்டில் இருப்பதால் கால அவகாசம் கேட்கப்பட்டது.
  • உலக வில்வித்தை அமைப்பு ஜூலை 31-ந்தேதி வரை அவகாசம் கொடுத்தது. ஆனால் அந்த தேதிக்குள் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால் உலக வில்வித்தை அமைப்பு இந்திய வில்வித்தை சங்கத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஐரோப்பிய மாஸ்டர்ஸ் ஹாக்கி: இந்திய மகளிருக்கு வெண்கலம்
  • இத்தாலியின் டுரின் நகரில் ஐரோப்பிய மாஸ்டர்ஸ் போட்டி கடந்த ஜூலை 24-ஆம் தேதி தொடங்கி ஆக. 5-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் அனைத்து விளையாட்டுகளிலும் 40 வயதுக்கு மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். ஹாக்கியிலும் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் கலந்து கொண்டன. 
  • தமிழகத்தின் ரேகா பார்த்தசாரதி தலைமையில் 12 பேர் கொண்டன அணி பங்கேற்றது. இத்தாலி, இந்தியா, இங்கிலாந்தின் 2 மகளிர் அணிகள் பங்கேற்ற இதில் இங்கிலாந்து-2 அணியை வீழ்த்திய இந்திய அணி, இத்தாலியுடன் டிரா செய்தது. இங்கிலாந்து 1-அணியுடன் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.
  • உலகப் போட்டிக்கும் தகுதி: இதன் மூலம் வரும் 2021-இல் ஜப்பான் கான்ஸாய் நகரில் நடைபெறவுள்ள உலக மாஸ்டர்ஸ் போட்டிக்கும் இந்திய மகளிரணி தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel