Type Here to Get Search Results !

4th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இந்திய ஜனாதிபதிக்கு கினியா அரசின் உயரிய விருது
  • இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தற்போது பெனின், காமியா, கினியா ஆகிய நாடுகளுக்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அவருக்கு கினியா நாட்டில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது, உயர்நிலை அதிகாரிகள் ஜனாதியுடன் இரு நாட்டுக்கு இடையில் உள்ள பரஸ்பர உறவு குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள்.
  • இந்திய ஜனாதிபதி கினியாவுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். 
  • கினியா நாட்டின் உயரிய விருது நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் என்னும் விருதாகும்.இந்த விருதை அந்நாட்டு அரசாங்கம் இந்திய ஜனாதிபதியை கவுரவிக்கும் வகையில் ராம்நாத் கோவிந்துக்கு வழங்கி உள்ளது.
கிராமங்களின் வளர்சிக்காக "60 நாள் ஆக்சன் திட்டம்" KCR அறிவிப்பு
  • கிராம நிர்வாகத்தில் சாத்தியமான முன்னேற்றம் குறித்து விவாதிக்க சனிக்கிழமை பிரகதி பவனில் பஞ்சாயத்து ராஜ் துறையின் அதிகாரிகளுடன் மறுஆய்வுக் கூட்டத்தை நடத்திய பின்னர் முதலமைச்சர் இந்த முடிவை எடுத்தார். 
  • இது ஒரு 'சக்தி வாரம்' மற்றும் ஹரிதா ஹராம் திட்டங்கள் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என் கே.சி.ஆர் தெரிவித்துள்ளார். மேலும், பஞ்சாயத்து ராஜ், மண்டல் பரிஷத், ஜில்லா பரிஷத் ஆகிய இடங்களில் உள்ள காலியிடங்களும் நிரப்பப்படும் என்றும், கிராம மேம்பாட்டுக்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் கொண்டு வரும் என்றும் முதல்வர் அறிவித்தார்.
  • 60 நாள் ஆக்சன் திட்டத்தின் ஒருபகுதியாக, மிசன் பாகிரதா(Mission Bhagiratha)) திட்டத்தின் கீழ், அனைவருக்கும், தூய்மையான குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும் என்றார். 



தாய்லாந்து டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளம் இணையர்
  • தாய்லாந்து ஓபன் வேர்ல்டு டூர் 500 டென்னிஸ் போட்டியில், இந்தியாவின் சத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
  • இவர்கள் சீனாவைச் சேர்ந்த உலக சாம்பியன்களான லி ஜுன் ஹுய் மற்றும் லியூ யு சென் ஆகியோரை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இவர்களின் வெற்றி 21-19, 18-21, 21-18 ஆகிய செட் கணக்குகளில் பெறப்பட்டது.
  • இந்த வெற்றியின் மூலம் உலக டென்னிஸ் தரவரிசையில் முதல் 10 வீரர்களின் வரிசைக்கு முன்னேறியுள்ளனர். மேலும் வேர்ல்டு டூர் 500 போட்டியில் இரட்டையர் பட்டத்தை இந்தியா வெல்வது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து மல்யுத்தம்: தங்கம் வென்றார் வினேஷ் போகட்
  • வார்ஸாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் 53 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகட் 3-2 என்ற புள்ளிக் கணக்கில் உள்ளூர் வீராங்கனை ரோக்ஸனாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
  • இரண்டு மாதங்களில் வினேஷ் வெல்லும் தொடர் 3-ஆவது தங்கமாகும். கடந்த மாதம் துருக்கியில் நடைபெற்ற யாசர்டோகு போட்டி, ஸ்பெயின் கிராண்ட்ப் ரீ போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel