Type Here to Get Search Results !

3rd AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

மக்கள்தொகை கணக்கெடுப்பு: 34வகையான விவரங்களுடன் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடக்கம்
  • இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2020ம் ஆண்டு) ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு குடும்பதில் 34 வகையான விவரங்கள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
  • 2021-ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இதில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல் முறையாக வீட்டில் எத்தனை மொபைல்போன்கள் உள்ளது என்பது உள்பட 34 வகையான விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளது.
  • இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொருவருக்கும் மொபைல் போன் அத்தியாவசமாகி உள்ள நிலையில், கணக்கெடுப்பின்போது, ஸ்மார்ட் மொபைல் போன் விவரம், வங்கி கணக்கு விபரங்கள் கேட்டகப்பட உள்ளது. அத்துடன் டிடிஎச் அல்லது கேபிள் இணைப்பு, இன்டர்நெட் வசதி, சொந்த வீடு, உட்பட பல விபரங்கள் கேட்கப்பட உள்ளது.
  • அத்துடன் இந்த மக்கள்தொகையில் மூன்றாம் பாலினத்தவர்களின் விபரமும் சேர்க்கப்பட உள்ளது. இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிக்காக கிட்டதட்ட 31 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ரூ.3ஆயிரத்து 600 கோடியை மத்திய அரசிடம் திருப்பி ஒப்படைத்த தமிழக அரசு
  • மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்கி வருகிறது. அதன்படி தமிழகத்துக்காக மத்திய அரசு 2017-18ம் ஆண்டுக்காக ரூ. 5 ஆயிரத்து 920 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த தொகையில் ரூ.3ஆயிரத்து 676 கோடியை தமிழகம் மீண்டும் திருப்பிக் கொடுத்துள்ளது. அதாவது ரூ.2 ஆயிரத்து 243 கோடியை மட்டுமே தமிழகம் பயன்படுத்தியுள்ளது.
  • சிஏஜி வெளியிட்ட அறிக்கையில் திட்டம் வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி குறித்து விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் (housing scheme) மத்திய அரசு ரூ.3,082.39 கோடி ஒதுக்கியதாகவும் அதில் ரூ.728 கோடி மட்டுமே பயன்படுத்தப்பட்டு ரூ.2,354.38 கோடி திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் சில திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்களையும் சிஏஜி வெளியிட்டுள்ளது. அதன்படி,
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் திருப்பி அனுப்பப்பட்ட நிதி - ரூ.247.84 கோடி
  • பெண்கள் முன்னேற்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.23.84 கோடியை தமிழக அரசு அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது
  • ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி - ரூ.100 கோடி, அதில் பயன்படுத்தப்பட்ட நிதி - ரூ.2.35 கோடி. திருப்பி அனுப்பப்பட்ட நிதி - ரூ.97.65 கோடி



உலக கேடட் மல்யுத்தம்: தங்கம் வென்றார் கோமல்
  • உலக கேடட் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 2-ஆவது தங்கப் பதக்கம் வென்றது.
  • மகளிர் 40 கிலோ பிரிவில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி 15 வயது கோமல் தங்கம் வென்றார்.
  • ஏற்கெனவே 65 கிலோ பிரிவில் சோனம் இந்தியாவின் முதல் தங்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
ரஷிய குத்துச்சண்டை: நீரஜ், லவ்லினாவுக்கு தங்கம்
  • ரஷிய குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீராங்கனைகள் நீரஜ், லவ்லினோ போரோகைன் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
  • கஸ்பிஸ்க் நகரில் உம்கனோவா சர்வதேச குத்துச்சண்டை போட்டியின் மகளிர் பிரிவு இறுதி ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இதில் 69 கிலோ எடை பிரிவில் லவ்லினா 3-2 என்ற புள்ளிக்கணக்கில் ரஷியாவின் அஸ்ஸுன்டா கன்போராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.
  • 57 கிலோ பிரிவில் நீரஜ் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் ரஷியாவின் மலிகா ஷகிடோவாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel