Type Here to Get Search Results !

30th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடி அகழாய்வில் தானியம் சேகரிக்கும் மண்பானை கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், நெல் உள்ளிட்ட தானியம் சேகரிக்கும் பெரிய மண்பானை வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • இதன்மூலம், 2,500 ஆண்டுகளுக்கு முன் தானியங்களைச் சேகரிக்க மண்பாண்டப் பொருள்களை பயன்படுத்தியதும், விவசாயத்திலும் இப்பகுதி சிறந்து விளங்கியதும் தெரியவந்துள்ளது.
கீழடி அருகே 2020 மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் தொடங்கப்படும்: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன்
  • கீழடி அருகே 2020 மார்ச் மாதத்திற்குள் அருங்காட்சியகம் தொடங்கப்படும் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 
  • கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக ரூ. 3 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். 
  • இதை தொடர்ந்து கீழடியில் மொத்தம் 142 ஆய்வுகள் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். 
கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மணிக்குமாரை நியமிக்க பரிந்துரை
  • சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மணிக்குமார் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி - ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் 
  • நீதிபதி அஜய் லம்பா - கவுஹாத்தி உயர்நீதிமன்றம் 
  • நீதிபதி ரவி சங்கர் ஜா - பஞ்சாப் & அரியானா உயர்நீதிமன்றம் 
  • நீதிபதி நாராயண சுவாமி - ஹிமாச்சல் பிரதேச உயர்நீதிமன்றம் 
  • நீதிபதி இந்திரஜித் மஹந்தி - ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 
  • நீதிபதி அருப் குமார் கோஸ்வாமி - சிக்கிம் உயர்நீதிமன்றம்



தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி முதலீடுகளை ஈர்க்கும் வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடு பயணம் மேற்கொண்டிருக்கிறார். 
  • இதன் ஒரு பகுதியாக, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை சார்பில் அமெரிக்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. 
புதுச்சேரியில் ஆயுஷ்மான் திட்டம் அமல்
  • ஆயுஷ்மான் பாரத் திட்டம் 31ம் தேதி( இன்று) காலை அமல்படுத்தப்படும். புதுச்சேரியில் 3 லட்சத்து 40 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளன. 
  • புதுச்சேரி மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு தந்து, அனைவருக்கும் அமல்படுத்துவதாக, சுகாதார அமைச்சர்கள் மாநாட்டில் உறுதி தந்துள்ளனர். 
ஹிமாச்சலில் மதமாற்ற தடை சட்டம்
  • ஹிமாச்சல பிரதேச சட்டசபையில், கட்டாய மதமாற்ற தடை சட்டம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தின் சில பகுதிகளில், திருமணம் போன்றவற்றை காரணம் காட்டி, கட்டாய மதமாற்றம் செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. 
  • இதைத் தொடர்ந்து, கட்டாய மதமாற்றத்தை குற்றமாக கருதி, ஏழு ஆண்டுகள் வரை, சிறை தண்டனை விதிக்கும் வகையில், மாநில சட்டசபையில், மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
  • இதன் மூலம், மதமாற்றத்துக்காக செய்யப்படும் திருமணங்களும் செல்லாததாக்கப்படும். எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு, குரல் ஓட்டெடுப்பின் மூலம், சட்டம் நிறைவேற்றப்பட்டது.



கும்பல் கொலையை தடுக்க மசோதா
  • மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கே, சந்தேகத்தின் பேரில், ஒருவரை கூட்டமாக அடித்துக் கொல்லும் சம்பவம் சமீப காலமாக அதிகரித்துள்ளது. 
  • இதையடுத்து, இதை தடுக்கும் நோக்கில், கும்பல் கொலை தடுப்பு மசோதா, மேற்கு வங்க சட்டசபையில், நேற்று நிறைவேற்றப்பட்டது. கும்பலாக சேர்ந்து ஒருவரை அடித்துக் கொல்வது, குற்றச் செயலாக, இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
அரசு வங்கிகள் இணைப்பை அறிவித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகள் இணைப்பு குறித்து அறிவித்துள்ளார். அதன்படி தற்போதுள்ள 12 பொதுதுறை வங்கிகள் கீழ்க்கண்டவாறு இணைக்கப்பட உள்ளன.
  • பஞ்சாப் நேஷனல் வங்கி, யுனைடெட் இந்தியா வங்கி, ஓரியண்டல் காமர்ஸ் வங்கி ஆகியவை இணைய உள்ளன. இந்த வங்கிகளில் மொத்த 11437 கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளில் ரூ.17.95 கோடி அளவில் வர்த்தகம் நடைபெறுகிறது.
  • யூனியன் வங்கி, ஆந்திரா வங்கி மற்றும் கார்ப்பரேஷன் வங்கிகள் இணைய உள்ளன ..
  • இந்தியன் வங்கியும் அலகாபாத் வங்கியும் இணைந்து 7 ஆவது பெரிய பொதுத்துறை வங்கியாக மாற உள்ளன. இந்த் வங்கியில் ரூ.8.08 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறுகின்றன.
  • கனரா வங்கி மற்றும்சிண்டிகேட் வங்கி இணைந்து 4 ஆவது பெரிய வங்கியாக மாற உள்ளனர். இந்த வங்கிகள் ரூ.15.20 லட்சம் கோடி வர்த்தகம் செய்து வருகின்றன.
  • பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் செண்டிரல் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய இரு வங்கிகளும் தனியாக இயங்க உள்ளன. இந்த வங்கிகள் வேறெந்த வங்கிகளுடனும் இணையப்போவது இல்லை.
  • நீரவ் மோடி மாதிரியில் வங்கிகளில் மோசடி செய்வோரை தடுக்க, வங்கிகள், தலைமை ரிஸ்க் ஆபீசர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற உத்தரவும் ்தில் முக்கியமானது.
  • பொது மேலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட அதிகாரிகளின் செயல்திறனை மதிப்பிடுவதற்கு பொதுத்துறை வங்கிகளின் வாரியக் குழு அமைக்கப்பட வேண்டும்
  • கடன்கள் மற்றும் அதுசார்ந்த விவகாரங்களை கண்காணிக்க சந்தையில் இருந்து தலைமை ரிஸ்க் அதிகாரிகளை நியமிக்க வங்கிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டாஃபே சிஇஓ-வாக சந்தீப் சின்ஹா நியமனம்
  • டாஃபே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) சந்தீப் சின்ஹா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவர் இதற்கு முன் குமின்ஸ் இந்தியா நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தவர். சிஇஓ நியமனத்தைத் தொடர்ந்து, எஸ். சந்திரமோகன், டி.ஆர்,கேசவன் ஆகியோர் குழு தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.



UEFA-ன் சிறந்த வீரர் - விர்ஜைல் வேன் டைக்
  • 2018-19 சீஸனின் UEFA பிளேயர் ஆஃப் தி இயர் விருதை லிவர்பூல் அணியின் டிஃபண்டர் விர்ஜைல் வேன் டைக் வென்றுள்ளார். 
  • கடந்த 10 ஆண்டுகளில் ஒரேயொரு கோப்பை மட்டுமே வென்றிருந்த அந்த அணி, இவர் வருகைக்குப் பிறகு, தொடர்ந்து இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. 
  • கடந்த பிரீமியர் லீக் சீஸனில் அதிக கிளீன் ஷீட்கள் வைத்தது. மொத்த சீஸனிலும் குறைந்த கோல்கள் (22 கோல்கள்) விட்ட அணி லிவர்பூல்தான்.
  • ரொனால்டோ (74 புள்ளிகள்), மெஸ்ஸி (207 புள்ளிகள்) என இரு பெரும் வீரர்களையும் பின்னுக்குத்தள்ளி 305 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இந்த விருதை வென்றார் வேன் டைக். 
  • மகளிர் கால்பந்தின் ஆதிக்க சக்தியாய் விளங்கும் லயான் அணியின் ரைட்பேக் லூசி பிரான்ஸ், பெண்களுக்கான ஆண்டின் சிறந்த வீரர் விருதை வென்றார். 
  • கடந்த பாலன் டி ஓர் விருதை வென்ற ஆடா ஹெகன்பெர்க், அமாண்டின் ஹென்றி ஆகிய இருவரையும் பின்னுக்குத்தள்ளி அவர் இந்த விருதை வென்றுள்ளார். 
  • இந்த ஆண்டுக்கான UEFA பிரெசிடன்ட் விருது முன்னாள் மான்செஸ்டர் யுனைடட் வீரர் எரிக் கான்டோனாவுக்கு வழங்கப்பட்டது.
உலக துப்பாக்கி சுடுதல்: அபிஷேக் வர்மாவுக்கு தங்கம், செளரவ் செளதரிக்கு வெண்கலம்
  • பிரேசிலின் ரியோடி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் ஏற்கெனவே மகளிர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை இளவேனில் முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்தார். அதைத் தொடர்ந்து ஆடவர் 50 மீ. ரைபிள் பிரிவில் சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளிப் பதக்கத்துடன் ஒலிம்பிக் தகுதியும் பெற்றார்.
  • இந்நிலையில் வெள்ளிக்கிழமை ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவு இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் அபிஷேக் வர்மா 244.2 புள்ளிகளுடன் முதலிடம் பெற்று தங்கத்தை கைப்பற்றினார். 
  • துருக்கியின் இஸ்மாலியில் கெலஸ் வெள்ளி வெற்றார். இளம் வீரர் செளரவ் செளதரி 221.9 புள்ளிகளுடன் வெண்கலமே வென்றார்.
  • செளரவ் செளதரி நிகழாண்டு 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே வர்மா, செளரவ் செளதரி ஒலிம்பிக் தகுதியைப் பெற்று விட்டனர்.
சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு விருது 
  • ஆசிய விளையாட்டு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் ஆசிய நாட்டைச் சேர்ந்த சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களை கவுரவிக்க முடிவு செய்தது.
  • முதல் ஆசியாவுக்கான விருதுகள் விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் சிறந்த ஆசிய தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்ட மேரி கோமுக்கும் , சிறந்த வீரராக தேர்வு செய்யப்ட்ட தென் கொரியாவின் கால்பந்து வீரரான சன் ஹியுங்-மின்னுக்கும் வழங்கப்பட்டது.
  • ஜப்பான் பெண்கள் கால்பந்து அணி சிறந்த அணியாகவும், கத்தார் ஆண்கள் அணி சிறந்த அணியாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel