Type Here to Get Search Results !

ஜூலை மாதத்தில் மட்டும் 227 பதக்கங்கள் வேட்டையாடிய இந்திய வீரர், வீராங்கனைகள் / INDIAN GOT 227 MEDALS IN JULY MONTH 2019


  • கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சர்வதேச அரங்கில் இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் 227 பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
  • 31 நாட்கள் காலக்கட்டத் தில் தடகளம், மல்யுத்தம், பளு தூக்குதல், ஜூடோ, பாட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென் னிஸ், பாரா-துப்பாக்கி சுடுதல், துப்பாக்கி சுடுதல் ஆகிய 9 விளையாட்டுகளில் நடைபெற்ற ஆட்டங்களில் இந்திய வீரர், வீராங்கனைகள் ஒட்டுமொத்த மாக 227 பதக்கங்களை வென் றுள்ளனர்.
  • 6 முறை உலக சாம்பியனான குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் இந்தோனேஷியாவில் நடை பெற்ற பிரஸிடன்ட் கோப்பையில் தங்கப் பதக்கம் வென்றார். 
  • மல்யுத்தத்தில் துருக்கியில் நடை பெற்ற போட்டியில் வினேஷ் போகத் தங்கம் வென்று அசத் தினார். மேலும் ஜூடோவில் தபாபி தேவி, பளு தூக்குதலில் மீரா பாய் சானு, துப்பாக்கி சுடுதலில் மெஹூலி கோஷ், இளவேனில் வாளரிவன் ஆகியோரும் சர்வதேச போட்டிகளில் சாதித்தனர்.
  • ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்ப தக்கம் வென்ற பி.வி.சிந்து, இந்தோனேஷியாவில் நடைபெற்ற பாட்மிண்டன் தொடரில் வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார். வில் வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, டோக்கியோவில் நடை பெற்ற ஒலிம்பிக் டெஸ்ட் நிகழ் வில் வெள்ளி வென்றார். 
  • மொத்தம் வெல்லப்பட்ட 227 பதக்கங் களில் அதிகபட்சமாக 71 பதக்கங் கள் தடகளத்தில் கிடைக்கப் பெற்றவையாகும். சமாவோ நாட் டில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்குதல் சாம்பியன்ஷிப் பில் மட்டும் இந்தியா 35 பதக் கங்களை அள்ளியிருந்தது. திங் எக்ஸ்பிரஸ் என அழைக்கப்படும் ஹிமா தாஸ் ஓட்டப் பந்தயத்தில் 5 தங்கம் வென்று பிரம்மிக்க வைத்தார்.
  • உலக அரங்கில் துப்பாக்கி சுடுதலில் தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வரும் இந்திய வீரர், வீராங்கனைகள் ஜெர்மனியின் சூயல் நகரில் நடை பெற்ற ஐஎஸ்எஸ்எஃப் ஜூனியர் உலக கோப்பை தொடரில் 10 தங்கம், 9 வெள்ளி, 5 வெண் கலம் என 24 பதக்கங்கள் வென் றனர். அதேவேளையில் குரோ ஷியாவில் நடைபெற்ற பாரா துப்பாக்கி சுடுதலில் 4 தங்கம், 2 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களையும் இந்தியா வென் றிருந்தது.
  • தைபேவில் நடைபெற்ற ஆசிய- ஒசியானியா கேடட் ஜூடோ சாம்பியன்ஷிப்பில் இந்தியா 6 பதக்கங்களை கைப்பற்றியது. குத்துச்சண்டையில் இந்தோனேஷி யாவில் நடைபெற்ற பிரஸிடன்ட் கோப்பையில் (மகளிர் பிரிவு) 9 பதக்கங்களையும், தாய்லாந்து போட்டியில் 8 பதக்கங்களையும், கஜகஸ்தானில் நடைபெற்ற போட்டி யில் 4 பதக்கங்களையும் (ஆடவர் பிரிவு) என ஒட்டுமொத்தமாக 21 பதக்கங்களை இந்தியா வென் றிருந்தது.
  • மல்யுத்தத்தில் 5 தொடர்களில் இந்தியா 50 பதக்கங்களை கொத் தாக அள்ளியது. தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 18 பதக்கங்கள் கிடைத்தது. பெல்லாரசில் நடைபெற்ற போட்டி யில் 2 பதக்கங்களும், துருக்கி யில் நடைபெற்ற போட்டியில் 7 பதக்கங்களும், தைபேவில் நடைபெற்ற ஆசிய கேடட் சாம்பியன்ஷிப்பில் 17 பதக்கங் களும், மாட்ரிட் நகரில் நடைபெற்ற போட்டியில் 6 பதக்கங்களும் இந்தியாவுக்கு கிடைக்க பெற்றிருந் தது.
  • அதேவேளையில் காமன் வெல்த் சாம்பியன்ஷிப்பில் டேபிள் டென்னிஸில் ஒட்டுமொத்தமாக 7 பதக்கங்கங்களையும் இந்தியா கைப்பற்றியது. ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள நிலையில் இந்திய வீரர், வீராங்கனைகள் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளது சிறப்பான விஷயமாக கருதப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel