- 66-ஆவது தேசியத் திரைப்பட விருதுகள் தில்லியில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில், தேசிய அளவில் சிறந்த திரைப்படமாக குஜராத்தி மொழிப் படம் "ஹெல்லாரோ', மாநில மொழிகளில் சிறந்த தமிழ்த் திரைப்படமாக "பாரம்' ஆகியவை தேர்வாகியுள்ளன.
- சிறந்த நடிகருக்கான தேசிய விருது ஆயுஷ்மான் மற்றும் விக்கி ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்துள்ளது.
- முதல் முறையாக அறிவிக்கப்பட்டுள்ள படப்பிடிப்புக்கு உகந்த மாநில விருது, உத்தரகண்ட் மாநிலத்துக்கு கிடைத்துள்ளது. சிறந்த திரைப்படமாக அபிஷேக் ஷா இயக்கிய "ஹெல்லாரோ' எனும் குஜராத்தி படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படம் சிறப்பு நடுவர் விருதையும் வென்றுள்ளது.
- சிறந்த திரைப்படம் "ஹெல்லாரோ' (குஜராத்தி)
- சிறந்த குழந்தைகள் திரைப்படம் "சர்க்காரி ஹிரிதய பிரதாமிகா ஷாலே காஸர்கோடு' ( கன்னடம்)
- சிறந்த நடிகர்கள் ஆயுஷ்மான் குரானா
- (அந்ததாதூன்- ஹிந்தி), விக்கி கெளசல் ("உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்'-ஹிந்தி)
- சிறந்த நடிகை கீர்த்தி சுரேஷ் (மகாநடி - தெலுங்கு)
- சிறந்த துணை நடிகர் ஸ்வானந்த் கிர்கிரே (சும்பக்- மராத்தி)
- சிறந்த துணை நடிகை சுரேகா சிக்ரி (பதாயி ஹோ- ஹிந்தி)
- சிறந்த பாடகர் அரிஜித் சிங் (பத்மாவத் -ஹிந்தி)
- சிறந்த பாடகி பிந்து மாலினி, (நாத்திசராமி- கன்னடம்)
- சிறந்த ஒளிப்பதிவு எம்.ஜெ. ராதாகிருஷ்ணன் (ஒலு- மலையாளம்)
- சிறந்த திரைக்கதை ராஹுல் ரவீந்திரன் (சி அர்ஜுன் லா சோ - தெலுங்கு)
- சிறந்த படத் தொகுப்பு எடிட்டர் நாகேந்திர கே. உஜ்ஜனி (நாத்திசராமி- கன்னடம்)
- சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் அவே (தெலுங்கு), கேஜிஎப் (கன்னடம்)
- சிறந்த பாடலாசிரியர் மஞ்சுநாதா (நாத்திசராமி- கன்னடம்)
- சிறந்த தமிழ்ப் படம் பாரம்
- சிறந்த கன்னட திரைப்படம் நாத்திசராமி
- சிறந்த தெலுங்கு திரைப்படம் மகாநடி
- சிறந்த மலையாள திரைப்படம் சூடானி ஃப்ரம் நைஜீரியா
- சிறந்த ஹிந்தி திரைப்படம் அந்தாதூன்
- சிறந்த இசை இயக்கம் (பாடல்) பத்மாவத் (ஹிந்தி)
தேசிய திரைப்பட விருதுகள் 2019 / NATIONAL FILM FARE AWARD 2019
August 10, 2019
0
Tags