Type Here to Get Search Results !

17th & 18th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சூலக்கல் கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம், சாத்தரசன்கோட்டை அருகே உள்ள பாப்பாகுடியில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான யானை சிற்பத்துடன் கூடிய சூலக்கல்லை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
  • மன்னர் ஆட்சி காலத்தில் கோயில்களின் தினசரி வழிபாட்டுக்காக, விளை நிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி, அவற்றை கோயில்களுக்குத் தானமாக வழங்குவது வழக்கம். 
  • அந்த வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலம் தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்கும் நிலம் திருவிடையாட்டம் என்றும், சமண, பெளத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச் சந்தம் என்றும் அழைக்கப்படுகின்றன.
  • அவ்வாறு சிவன் கோயிலுக்குத் தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்பட்டு அவை பாதுகாக்கப்படும். 
  • அதுவே திருமால் கோயில் எனில் சங்கு, சக்கரமும், சமணப் பள்ளி எனில் முக்குடையும், பெளத்தப் பள்ளி எனில் தர்மசக்கரமும் எல்லைக்கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும்.
  • இக்கல்லில் யானைச் சிற்பம் இருப்பதன் மூலம் அத்திகோசத்தார் எனும் யானைப் படை வீரர்கள் வழங்கிய தேவதான நிலத்தில் நட்டுவைக்கப்பட்டதாக இதனைக் கருதலாம்.
கீழடியில் வரிவடிவ எழுத்துக்கள், பானை ஓடுகள்
  • கீழடியில் 5ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. இதுவரை பானை , பானை மூடிகள், உறை கிணறு, செங்கல் கட்டுமானம், உள்ளிட்ட 700 க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 
  • உணவு பாத்திரங்களில் இரண்டு வித அளவு கொண்ட பாத்திரங்கள் கண்டறியப்பட்ட நிலையில் பண்டைய காலத்தில் குடும்பமாக வசித்திருக்க வாய்ப்புண்டு எனவே தான் வெவ்வேறு அளவு கொண்ட உணவு பாத்திரங்கள் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • இதுவரை நடந்த அகழாய்வில் வரி வடிவ எழுத்துக்கள் கொண்ட பானை ஓடுகள்,படகு ஓவியம் வரைந்த பானை ஓடுகள் கிடைத்திருந்தன. தற்போது அகழாய்வில் வில்,அம்பு வரைந்த பானை ஓடு கிடைத்துள்ளது. 
  • இதில் ஓவியம் முழுமையாக உள்ளது. மேலும் தமிழ் வரி வடிவ எழுத்துக்களும், கையடக்கமான பானை, சல்லடை பானை ஓடுகள் உள்ளிட்டவைகளும் கிடைத்துள்ளன.



பூட்டானில் ரூபே கார்டை அறிமுகபடுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி
  • பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று பூட்டான் சென்றார். சிம்தோகா த்சோங்கில் வாங்குவதன் மூலம் ரூபே அட்டையை மோடி அறிமுகப்படுத்தினார். 
இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • இந்தியா - பூடான் இடையே 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. திம்புவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பூடான் பிரதமர் லோதே ஷெரிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது.
  • பிரதமர் மோடி 2வது முறையாகவும், 2வது முறையாக பதவியேற்ற பின் முதல் முறையாகவும் அவர் பூடான் நாட்டிற்கு செல்வது குறிப்பிடத்தக்கது.
  • பூட்டான் மன்னர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் இந்தப் பேச்சுவார்த்தை பலனுள்ளதாக இருக்கும் என்றும் மோடி தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
  • இந்த பேச்சுவார்த்தைக்கு பின், இந்தியா பூடான் இடையே ராணுவ , பாதுகாப்புத்துறை, நீர் மின்னுற்பத்தி, மின்சார கொள்முதல், வர்த்தகம், கலாச்சாரம், பொருளாதாரம் ஆகிய ஆறு துறை ஒப்பந்தங்களும், பூடான் கல்வித்துறை சார்பில், டெல்லி, மும்பை, கான்பூர் ஐ.ஐ.டிக்களுடனும், சில்சார் என்.ஐ.ஐ.டி.யுடனும் நான்கு தனித்தனி ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. 
பூடானில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
  • பூடானில் அமைக்கப்பட்டுள்ள நீர்மின் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடிதிறந்து வைத்தார். இந்தியா - பூடான் இணைந்து அமைத்த 720 மெகாவாட் நீர்மின் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 



ஜடேஜா உள்பட 19 விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜுனா விருது: கேல் ரத்னா விருதுக்கு தீபா மாலிக் தேர்வு
  • விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது.
  • இந்த விருதுக்காக திறமையும், தகுதியும் கொண்டவர்களைத் தேர்வு செய்யும் பணி கடந்த 2 நாள்களாக தில்லியில் நடைபெற்று வந்தது. 12 உறுப்பினர்களைக் கொண்ட தேர்வுக் குழு, விளையாட்டு வீரர்களின் பெயர்களை விருதுக்காக பரிந்துரைத்தது.
  • துரோணாச்சார்யா விருதுக்கான தேர்வு பட்டியலில் தனது பயிற்சியாளர் சோதேலால் யாதவ் பெயரும் இருப்பதால், சர்ச்சையைத் தவிர்ப்பதற்காக தேர்வுக் குழுவிலிருந்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் விலகிக் கொள்வதாக அறிவித்தார்.
  • பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் தீபா மாலிக் ஆவார்.
  • இவர், குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 2012-ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும், 2017-இல் பத்ம ஸ்ரீ விருதும் இவர் பெற்றுள்ளார்.
  • கடந்த ஆண்டு இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் நடைபெற்ற வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டியிலும் ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தார் தீபா மாலிக். கேல் ரத்னா விருது பெறுவோருக்கு பதக்கம், சான்றிதழ், ரூ.7.50 லட்சம் ஆகியவை வழங்கப்படும்.
  • அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீராங்கனை பூணம் யாதவ், தடகளத்தில் சாதனை படைத்த தேஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனஸ், ஸ்வப்னா பர்மன், கால்பந்து வீரர் குர்பிரீத் சிங் சாந்து, ஹாக்கி வீரர் சிங்லென்சனா சிங் கங்குஜம், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை அஞ்சும் முட்கில் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • துரோணாச்சார்யா விருதுக்கு முன்னாள் பாட்மிண்டன் வீரர் விமல் குமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீரின் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜ் உள்ளிட்டோரின் பெயர்களும், தயான் சந்த் விருதுக்கு மனோஜ் குமார் (மல்யுத்தம்), அரூப் பாசக் (டேபிள் டென்னிஸ்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
  • ஓய்வுக்கு பிறகு விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பவர்களுக்கு தயான் சந்த் விருது வழங்கி மத்திய அரசு கௌரவிக்கிறது.
கன்கஷன் பிளேயர் - ஸ்டீவ் ஸ்மித்துக்கு பதில் மார்னஸ் லேபுஸ்சேன்
  • லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாம் டெஸ்ட்டின் நான்காம் நாள் ஆட்டத்தில் ஜோஃப்ரா ஆச்சர் பௌன்ஸராக அள்ளி வீசினார். ஒவ்வொரு பந்தும் மணிக்கு 90 மைல் வேகத்தில் வந்து பறந்தது.
  • 80 ரன்களில் விளையாடிக்கொண்டு இருந்த போது, மீண்டும் ஒரு பௌன்சரை வீசினார் ஆர்ச்சர். அது ஸ்மித்தின் கழுத்துப் 
  • பகுதியை பதம் பார்த்தது. நிலை தடுமாறி கீழே விழுந்தார் ஸ்மித். ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார் ஸ்மித்.
  • காயத்தின் வீரியம் குறையாததால், ஸ்மித் ஐந்தாம் நாள் ஆட்டத்தில் விளையாடவில்லை. இன்று காலை அவருக்கு தலைவலி அதிகமாக கண்காணிப்பில் வைக்கப்பட்டார். 
  • அவருக்குப் பதிலாக கன்கஷன் மாற்றுவீரராக மார்னஸ் லேபுஸ்சேன் ஃபீல்டிங் செய்ய வந்தார். 
  • கடந்த மாதம் ஐசிசி தரப்பில் கன்கஷன் மாற்று வீரர் என்னும் விதி அமலுக்கு வந்தது. இதன்மூலம் ஒரு வீரர் தலைவலி, மயக்கம் போன்ற பிரச்னைகளால் விளையாட முடியாமல் போனால், அவருக்குப் பதிலாக வரும் மாற்று வீரர், பேட்டிங் , பவுலிங் என இரண்டையும் மேற்கொள்ளலாம்.
செக் குடியரசு தடகளம்: தங்கம் வென்றார் ஹீமா தாஸ்
  • இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஹீமா தாஸ் மற்றும் முஹம்மது அனஸ் ஆகிய இருவரும் முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் 300 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளனர்.
  • இதே போன்று ஆண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் ஆன்ஸ் பங்கேற்று பந்தய தூரத்தை 32.42 செகண்ட்களில் கடந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel