Type Here to Get Search Results !

11th & 12th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு
  • தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படும் மாநகராட்சி மற்றும் சிறந்த விளங்கும் மூன்று நகராட்சிகள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்வரால் வழங்கப்படும்.
  • விருது பெறும் மாநகராட்சிக்கு ரூ. 25 லட்சம் ரொக்கப் பரிசும், வாழ்த்து மடலும் வழங்கப்படும். விருதுக்கு முதலிடத்தில் தேர்வாகும் நகராட்சிக்கு ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசும், இரண்டாம் இடம் பிடிக்கும் நகராட்சிக்கு ரூ. 10 லட்சமும், மூன்றாவது இடத்துக்கு தேர்வாகும் நகராட்சிக்கு 5 லட்சம் ரொக்கப் பரிசுகளுடன் வாழ்த்து மடலும் வழங்கப்படும்.
  • அந்த வகையில் 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 
  • சிறந்த நகராட்சிக்கான முதல்வர் விருதுக்கு முதலிடத்தை தருமபுரி நகராட்சியும், வேதாரண்யம், அறந்தாங்கி ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.
கவுதமாலா நாட்டிற்கு புதிய அதிபர்
  • மத்திய அமெரிக்க நாடான, கவுதமாலாவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், கன்வர்வேடிவ் கட்சியின் அலிஜான்ட்ரோ ஜியாம்மத்தே, புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • அவரை எதிர்த்து, முன்னாள் அதிபர் அல்வாரோ கோலம்மின் மனைவி, சான்ட்ரா டாரஸ் போட்டியிட்டார். இந்தாண்டு ஜூனில் நடந்த முதல்கட்டத் தேர்தலில், சான்ட்ரா டாரஸ் வென்றிருந்தார். 
  • இந்நிலையில், சமீபத்தில் நடந்த இரண்டாம் கட்டத் தேர்தலில், ஜியாம்மத்தே அமோக வெற்றி பெற்றார்.
பொள்ளாச்சி அருகே பழமையான நடுகல் கண்டெடுப்பு
  • பொள்ளாச்சி அருகே சிஞ்சிவாடி கிராமத்தில் பழமையான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதனை கண்காட்சியில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • தொல்லியல் ஆய்வாளர் நாராணயமூர்த்தி மற்றும் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி வரலாற்று துறை தலைவர் முத்துக்குமார், ஆர்வலர் ஐயப்பன் ஆகியோர் சிஞ்சுவாடியில் ஆய்வு மேற்கொண்டு அந்த நடுகல்லை மீட்டெடுத்தனர்.



இந்தியா-சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது
  • இந்தியா-சீனா இடையே 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
  • தொல்பொருள் ஆய்வு தொடர்பாக இரு நாடுகள் ஒத்துழைப்பு நல்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவத்துறையில் இந்தியா சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து செய்யயப்பட்டுள்ளது. 
உலகின் புதுமையான பொருளாதாரம் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 54ம் இடம்
  • ப்ளூம்பெர்க் நிறுவனத்தின் தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக கண்டுபிடிப்பு அட்டவணைகளை வெளியிட்டு வருகிறது, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் செலவுகள், உற்பத்தி திறன் மற்றும் உயர் தொழில்நுட்ப பொது நிறுவனங்களின் செறிவு உள்ளிட்ட ஏழு அளவீடுகளைப் பயன்படுத்தி 12க்கும் மேற்பட்ட அளவுகோல்களை பகுப்பாய்வு செய்து புதுமையான பொருளாதார நாடுகள் பட்டியலை உருவாக்கி வெளியிடுகிறது,
  • அதனடிப்படையில் இந்த ஆண்டு வெ ளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா மொத்தமுள்ள 60ல் 54ம் இடத்தினை பெற்றிருக்கிறது, இந்தியா, மெக்சிகோ, வியட்நாம் மற்றும் சவுதி அரேபியா. 
  • இந்தப்பட்டியலில் முதலிடத்தில் இந்த வருடம் தென்கொரியா இடம் பெற்றுள்ளது
அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சென்னை லயன்ஸ் சாம்பியன்
  • டெல்லியில் நடைபெற்ற அல்டிமேட் டேபிள் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில், சென்னை லயன்ஸ் - தபாங் டெல்லி டி.டி.சி அணிகள் நேற்று மோதின. மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் சென்னை லயன்ஸ் அணி வீரர், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி புள்ளிகளைக் குவித்தனர்.
  • தபாங் டெல்லி கடும் நெருக்கடி கொடுத்த நிலையில் சென்னை லயன்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. 
ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தங்கம் வென்றார் சவுரவ் வர்மா
  • ஐதராபாத் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் சவுரவ் வர்மா சாம்பியன் பட்டம் வென்றார். 
  • கச்சிபவுலி உள்ளரங்கில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில், சிங்கப்பூரின் லோஹ் கியான் யூவுடன் நேற்று மோதிய சவுரவ் வர்மா 21-13, 14-21, 21-16 என்ற செட் கணக்கில் போராடி வென்று தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். விறுவிறுப்பான இப்போட்டி 52 நிமிடத்துக்கு நீடித்தது. 



தாய்லாந்து பெண்கள் உலக சாதனை
  • பெண்களுக்கான சர்வதேச 'டுவென்டி-20' போட்டி வரலாற்றில் தாய்லாந்து அணி தொடர்ச்சியாக 17 வெற்றிகளை குவித்து புதிய உலக சாதனை படைத்தது.
  • இதற்கு முன், ஆஸ்திரேலிய அணி (மார்ச் 2014- ஆக. 2015) தொடர்ந்து 16 வெற்றி பெற்றது சாதனையாக இருந்தது. இப்பட்டியலில் மூன்றாவது இடத்தை இங்கிலாந்து, ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் (தலா 14) பகிர்ந்து கொண்டுள்ளன. நியூசிலாந்து பெண்கள் அணி (12) 5வது இடத்தில் உள்ளது.
ஆசிய வாலிபால்: இந்தியாவுக்கு வெள்ளி
  • மியான்மரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவும்-சீன தைபே அணிகளும் மோதின. இதில் 3-1 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை பெற்றது சீன தைபே.
  • 21-25, 20-25, 25-19, 23-25 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியா போராடி தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றது.
  • முதலிரண்டு இடங்களைப் பெற்ற சீனதைபே, இந்திய அணிகள் 23 வயதுக்குட்பட்டோர் எப்ஐவிபி உலக சாம்பியன் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
உலக டென்னிஸ் வீராங்கனைகள் பட்டியல் - ஜப்பான் பெண் முதலிடம்
  • உலக அளவில் சிறப்பாக விளையாடும் டென்னிஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. 
  • இந்த ஆண்டிற்கான சிறந்த வீராங்கனைகள் பட்டியலில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6,417 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். 
  • இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டி 6,256 புள்ளிகள் பெற்று உள்ளார். சென்ற வருட தரவரிசையில் ஆஷ்லிதான் முதலிடத்தில் இருந்தார். ஒரே வருடத்தில் அவரது சாதனையை முறியடித்துள்ளார் நவோமி.



உலக மோட்டார் சைக்கிள் பந்தயம்: ஐஸ்வர்யா பிஸ்ஸா 2-ஆம் இடம்
  • உலக மோட்டார் சைக்கிள் பந்தயம் (எப்ஐஎம்) மகளிர் பிரிவில் முதன்முறையாக 2-ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் ஐஸ்வர்யா பிஸ்ஸா.
  • ஹங்கேரியின் வார்பலோடா நகரில் ஞாயிற்றுக்கிழமை எப்ஐஎம் ஜூனியர் மகளிர் உலக சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பெங்களூரைச் சேர்ந்த 23 வயது ஐஸ்வர்யா இரண்டாவது இடத்தைப் பெற்றார். 
  • துபை சுற்றில் முதலிடம், போர்ச்சுகலில் 3-ஆவது இடம், ஸ்பெயினில் 5-ஆவது இடம், ஹங்கேரியில் 4-ஆவது இடம் என மொத்தம் 65 புள்ளிகளுடன் இரண்டாம் இடம் பெற்றார். 
  • சிலியின் தாமஸ் டி கவர்டோ 60 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றார். சாதனை படைத்த ஐஸ்வர்யா புதன்கிழமை பெங்களூரு திரும்புகிறார்.
உலக சீனியர் பாட்மிண்டன் போட்டி: அஜித்-விஜய் இணை சாம்பியன்
  • பிடபிள்யுஎப் யோனக்ஸ் உலக சீனியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜித் ஹரிதாஸ்-விஜய் லான்ஸி இணை சாம்பியம் பட்டம் வென்றனர்.
  • போலந்தின் கட்டோவைஸ் நகரில் நடைபெற்ற இப்போட்டியில் 40 வயது இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய இணையான அஜித்-விஜய் 19-21, 21-17, 21-19 என்ற கேம் கணக்கில் டென்மார்க்கின் எஸ்பென் கேம்ப்கார்ட்-மார்டன் ராஸ்மேன் இணையை போராடி வென்று தங்கப்பதக்கம் வென்றனர்.
ரோஜர்ஸ் கோப்பை நடால், ஆன்ட்ரிஸ்கு சாம்பியன்
  • கனடாவில் நடைபெற்ற ரோஜர்ஸ் கோப்பை ஏடிபி மற்றும் டபிள்யுடிஏ டென்னிஸ் போட்டியில் ரபேல் நடால், பியான்கா ஆன்ட்ரிஸ்கு ஆகியோர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
  • மாண்ட்ரியலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் உலகின் 2-ஆம் நிலை வீரர் ஸ்பெயினின் நடால் 6-3, 6-0 என்ற நேர் செட்களில் ரஷிய வீரர் டேனில் மெத்வதேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இது அவர் வெல்லும் 35-ஆவது மாஸ்டர்ஸ் பட்டமாகும்.
  • டொரோண்டோவில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கனடாவின் 19 வயது இளம் வீராங்கனை பியான்கா ஆன்ட்ரிஸ்கு 3-1 என்ற புள்ளிக் கணக்கில் செரீனா வில்லியம்ஸனை விட முன்னிலையில் இருந்தார்.ஆனால் 4 கேம்களுக்கு பின் உடல்நிலை பாதிப்பால் ஆட முடியாமல் செரீனா விலகிக் கொண்டார்.
  • இதையடுத்து 50 ஆண்டுகளில் சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் கனடிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் ஆன்ட்ரிஸ்கு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel