Saturday, 10 August 2019

10th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் சோனியா காந்தி
 • அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆஷாத் இந்த தகவலை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
 • சோனியா காந்தி ஏற்கனவே கடந்த 1998ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் தலைவராக இருந்தவர் என்பதும் ஐந்து ஆண்டுகளுக்கு பின் மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 • மொத்தத்தில் 1998ஆம் ஆண்டில் இருந்து 2019ஆம் ஆண்டு வரை சோனியா, ராகுல் ஆகிய இருவர் மட்டுமே மாறி மாறி காங்கிரஸ் கட்சியின் தலைவராகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
கீழடியில் கோட்டைச்சுவர் கண்டுபிடிப்பு
 • கீழடியில், பழங்கால நீண்ட கோட்டைச்சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடியில், தமிழக தொல்லியல் துறை சார்பில், 47 லட்ச ரூபாய் செலவில், ஐந்தாம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது.
 • வித்தியாசம் போதகுரு என்பவரது நிலத்தில், அகழாய்வு நடந்த போது, சுவர் ஒன்று தென்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில், அந்த சுவர், முருகேசன் என்பவரது நிலம் வழியாக, கிழக்குபகுதி வரை நீண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
 • இந்த சுவரை முழுமையாக கண்டறிய, ஒரு வாரமாக அகழாய்வு நடந்தது. இது நீண்ட கோட்டைச் சுவராக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் கண்டறியப்பட்ட சுவரை விட, இந்த சுவர் வித்தியாசமாக உள்ளது.
 • நவீன கட்டுமானம்படுக்கை வசத்தில், செங்கற்களை ஒரு வரிசையாகவும் உயரவாக்கில், ஒரு வரிசையாகவும் வைத்து, கட்டடம் கட்டியுள்ளனர். மேலும், சுவர் சாயாமல் இருக்க, உயர வரிசை செங்கற்களுக்கு நடுவே, படுக்கை வசத்திலும், செங்கற்கள் வைக்கப்பட்டுள்ளன.
மருத்துவக் உதவிப் பேராசிரியர் வேலை.. வயது வரம்பை 45 ஆக உயர்த்த மத்திய அரசுக்கு உத்தரவு
 • மருத்துவ கல்லூரி ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதி ஒழுங்குமுறை விதிகளில் 2017ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கான வயது வரம்பு 40 வயது என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • மருத்துவ மேற்படிப்பு முடித்த பின் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இந்த வயது உச்ச வரம்பை அமல்படுத்தினால் ஊரக பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
 • இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இந்த திருத்தத்தை கைவிடும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதியுள்ள கடிதத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 • மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை 40 வயதில் இருந்து 45 ஆக உயர்த்த கோரி மத்திய சுகாதார துறைக்கு வரைவு அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை எனவும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 • இந்த வரைவு அறிவிப்பை ஏற்று, வயது வரம்பை 45 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய சுகாதார துறை தரப்பில் கூறப்பட்டதை அடுத்து, மருத்துவ கவுன்சிலின் வரைவு அறிவிப்பாணைக்கு மூன்று வாரங்களில் ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அதை அமல்படுத்த தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக செயல்பட்ட ஆப்கான் வீரர் ஒப்பந்தம் ரத்து
 • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், அதிரடி தொடக்க வீரருமானவர் முகமது ஷாசாத். இங்கிலாந்தில் நடைபெற்ற 2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை பங்கேற்ற இவர், இரண்டு ஆட்டங்களில் விளையாடிய நிலையில், காயம் காரணமாக தொடரில் இருந்து விலக்கப்படுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
 • ஆனால், தான் பூரண உடல் நலத்துடன் இருப்பதாகவும் கிரிக்கெட் வாரியம் தனக்கு எதிராக செயல்படுவதாக ஷாசாத் பகிரங்கமாக குற்றம்சாட்டினார். இது கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 • இந்நிலையில், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகமது ஷாசாத் வெளி நாடுகளில் நடைபெறும் லீக் ஆட்டங்களில் பங்கேற்பதற்கு கிரிக்கெட் வாரியத்தின் அனுமதியை பெறவில்லை. 
 • ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நடத்தை விதிகளை அவர் பலமுறை மீறியுள்ளார். உலகக்கோப்பை தொடரின் போதும் அவர் ஒழுங்கு நடவடிக்கையை மீறி செயல்பட்டார்.
 • இது குறித்த விசாரணையில் பங்கேற்க ஷாசாதுக்கு கடந்த மாதம் 20 மற்றும் 25 தேதிகளில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் அந்த விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆகையால், முகமது ஷாசாதுடன் போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்கிறோம் என தெரிவித்துள்ளது.
திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தம்: தங்கம் வென்றார் பஜ்ரங் புனியா
 • ஜார்ஜியாவில் நடைபெற்று வரும் திப்ளிஸி கிராண்ட்ப்ரீ மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்றார் இந்திய நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா.
 • ஆடவர் 65 கிலோ பிரிவு இறுதிச் சுற்றில் பஜ்ரங் 2-0 என்ற புள்ளிக் கணக்கில் எதிராளியை வீழ்த்தி தங்கம் வென்றார்.a இன்னும் சில தினங்களில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கவுள்ள நிலையில் தங்கம் வென்றுள்ளார் பஜ்ரங்.
மாநில நீச்சல் போட்டி ஜெயவீணா புதிய சாதனை
 • மாநில அளவிலான நீச்சல் போட்டியில், சென்னை வீராங்கனை ஜெயவீணா தேசிய சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.வேளச்சேரி நீச்சல் அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில், ஜெயவீணா 50 மீட்டர் பிரெஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் 33.88 வினாடிகளில் நீந்திச் சென்று, தேசிய அளவிலான சாதனையை நிகழ்த்தினார். 
 • இந்த பிரிவில் 2012ம் ஆண்டு டெல்லி வீராங்கனையான பிரியங்கா பிரியதர்ஷினி, 34.29 வினாடிகளில் 50 மீட்டர் தொலைவை கடந்ததே இதுவரை சாதனையாக இருந்தது.
 • போட்டியின் தனிநபர் பிரிவில் சென்னை வீராங்கனை மீனாட்சி, திருநெல்வேலி வீரர் சேது மாணிக்கவேல் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். அணிகள் பிரிவில் ஆர்கா அணி அதிக புள்ளிகளை சேர்த்து, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment