Type Here to Get Search Results !

31st JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • கரூரில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். 
  • இந்த அறிவிப்பின்படி, கரூர் மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்குவதற்கான அரசாணை கடந்த 2015-இல் வெளியிடப்பட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், கரூர் மாவட்டம், சனபிரெட்டி கிராமத்தில் ரூ.269.58 கோடியில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 
  • 23-ஆவது மருத்துவக் கல்லூரி: கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் 150 மருத்துவ இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழுமம் அனுமதி அளித்தது. 
  • இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடந்தது. தமிழகத்தில் இப்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கரூர் அரசு மருத்துவக் கல்லூரியானது 23-ஆவது மருத்துவக் கல்லூரியாகச் செயல்படும்.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கான கட்டணம் ரத்து அரசாணை வெளியிட்ட பள்ளிக்கல்வி துறை
  • அரசு பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்விக்கு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை ரத்து செய்து பள்ளிக்கல்வி துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
  • அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவது நடைமுறையில் உள்ளது. இந்த வகுப்புகளுக்கு இதுவரை கல்விக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கட்டணம் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் சமீபத்தில் சட்டமன்றத்தில் அறிவித்தார்.
  • இந்த பரிந்துரையை ஏற்று 2019-20-ம் கல்வியாண்டில் ஆங்கிலவழி கல்வியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 22,316 மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட கல்விக்கட்டணம் ரூ.67 லட்சத்தை திரும்ப ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் ஒப்புதல் சட்டமாகியது முத்தலாக் மசோதா
  • முத்தலாக் தடை மசோதா இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அம்மசோதா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 
  • மசோதாவை சட்டமாக்க அவர் நேற்றிரவு கையெழுத்திட்டார். இதனையடுத்து அந்த மசோதா சட்டமானது. இதன்தொடர்ச்சியாக மத்திய சட்ட அமைச்சகம் அரசாணை வெளியிட்டது.
  • இதன் விளைவாக முத்தலாக் தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, தடையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர் முத்தலாக் கூறி மனைவியைவிவாகரத்து செய்தால், அவர் மூன்று ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்.



புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்
  • இந்தியாவில் நாள்தோறும் பலர் விபத்துக்களில் உயிரிழக்கின்றனர். இதனால் வாகன சட்டங்களை கடுமையாக்க மத்திய அரசு திட்டமிட்டது. 
  • அதன்படி, புதிய வாகன சட்டத்திருந்த மசோதாவை கொண்டுவந்தது. இந்த மசோதா மக்களவையை தொடர்ந்து, தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதா அனுப்பப்படும். குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்ற பின்னர் அது சட்டமாகும்.
  • மசோதா தாக்கலின் போது பேசிய மத்திய போக்குவரத்து மற்றும் கப்பல்துறை அமைச்சர் நிதிகட்கரி, இந்தியாவில் தற்போது ஆண்டுதோறும் 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அதில் 1.5 லட்சம் பேர் இருப்பதாகவும் தெரிவித்தார். 
  • உலக அளவில் அதிக விபத்துகள் நடைபெறும் நாடுகளில் இந்தியா முதலாவது இடத்தில் உள்ளது எனவும், தற்போது அந்த தவறுகளை சரிசெய்ய நமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறினார்.
  • இந்த சட்டத்தின்படி, வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது அதற்கான தண்டனையாக இனி ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம், 3 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது. வாகன ‌ஓட்டிகள் இழைக்கும் சிறிய தவறுகளுக்கான அ‌பராதம் 100 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 
  • உரிமம்‌ இன்றி ஓட்டுபவர்களுக்கு அபராதம் 500 ரூபாயில் இருந்து 5 ஆயிரம் ரூபாயாக உ‌யர்த்தப்படுகிறது. உரிய தகுதியின்றி வாகனம் ஓட்டினால் விதிக்கப்படும் அபராதம் 500 ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது.
  • வாகனத்தை ஆபத்தான வகையில் ஓட்டினால் தற்போது 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அது 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் தற்போது கட்ட வேண்டியுள்ள நிலையில் அது இனி 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படுகிறது. 
  • சீட் பெ‌ல்ட் அணியாமல் பயணிக்கும் போது அபராதம் 100 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கிறது. 2 சக்கர வாகனங்களில் அதிக சுமை ஏற்றிச் சென்றால் தற்போது 100 ரூபாய் மட்டுமே அபராதமாக உள்ளது. ஆனால் அது 2 ஆயிரம் ரூபாயாக உயர்வதுடன் 3 மாதங்களுக்கு உரிமம் ரத்தும் செ‌ய்யப்படும்.
  • சிறார் வாகனம் ஓட்டும் போது அவ்வாகனத்தின் உரிமையாளர் அல்லது பாதுகாவலருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் என்பதுடன் 3 ஆண்டு சிறை‌வாசமும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இது வாகனத்தை ஓட்டிய சிறுவன் மீது சிறார் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் : மக்களவையில் நிறைவேறிய மசோதா
  • அனைத்து மாநிலங்களுக்கும் இடையே உள்ள நதி நீர் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கும் மசோதா மக்களவையில் நிறைவேறியது.
  • இம்முறை மோடியின் அரசில் ஜலசக்தி என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. இந்த துறை நதி நீர் தொடர்பான அனைத்து விவகாரங்களையும் கவனித்துக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த துறை அமைச்சராக கஜேந்திர சிங் ஷெகாவத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அமைச்சரவை அனைத்து மாநிலங்களுக்கு இடையே உள்ள நதி நீர் பிரச்சினைக்கு ஒரே தீர்ப்பாயம் அமைக்கத் திட்டமிட்டது.
இந்தியாவில் மாணவர்களுக்கான சிறந்த நகரம் பெங்களூரு - உலக அளவில் லண்டன்
  • மாணவர்களுக்கான சிறந்த நகரங்களின் தரவரிசையை 'குளோபல் கன்சல்ன்டன்சி கியூஎஸ் குவாக்குவாரெல்லி சைமண்ட்ஸ்' அமைப்பு வெளியிட்டுள்ளது. 
  • நகரத்தில் உள்ள பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கை மற்றும் செயல்பாடு, வேலைவாய்ப்பு, விரும்பக் கூடியது, மலிவானது மற்றும் தரமான வாழ்க்கை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தேர்வு செய்யப்படுகின்றது.
  • இந்த தரவரிசையின் அடிப்படையில் உலக அளவில் மாணவர்களுக்கான சிறந்த நகரமாக லண்டன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்திய அளவில் பெங்களூர் நகரம் சிறந்ததாக அந்த பட்டியல் தெரிவிக்கின்றது.
முதல் பத்து இடங்கள்:
  1. லண்டன்
  2. டோக்கியோ
  3. மெல்போர்ன்
  4. முனிச்
  5. பெர்லின்
  6. மாண்டிரல்
  7. பாரிஸ்
  8. ஸுரிச்
  9. சிட்னி
  10. சியோல்
  • இந்திய அளவில் பெங்களூர் (81), மும்பை (85), டெல்லி (113), சென்னை (115) ஆகிய இடங்களை பிடித்துள்ளன. ஆசியாவை பொறுத்தவரை டோக்கியோ (2), சியோல் (10), ஹாங்காங் (14), பெயிஜிங் (32), ஷாங்காய் (33) ஆகிய இடங்களை பிடித்துள்ளன.



ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளில் ராம்நாத்கோவிந்த் அரசு முறை பயணம்
  • ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள பெனின், காம்பியா, கினியா ஆகிய நாடுகளில் ராம்நாத்கோவிந்த் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். 
  • இதில் கடந்த 28-ம் தேதி அன்று பெனின் சென்ற அவர், அந்நாட்டு அதிபர் தாலோனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரு நாடுகளுக்கும் இடையே கலாச்சார பரிமாற்றம், ஏற்றுமதியில் ஒத்துழைப்பு, ஆயுள் காப்பீட்டில் முதலீடு செய்வது, இந்திய வெளியுறவுத்துறையினருக்கு விசா விலக்கு அளிப்பது ஆகிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • அங்கு மூன்று நாட்கள் பயணத்தை முடித்த பின்னர் காம்பியா, பஜ்சூல் நகருக்கு வந்த ராம்நாத் கோவிந்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. காம்பியா அதிபர் அடாமா பாரோவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராம்நாத் கோவிந்த், காம்பியாவின் குடிசை தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்காக இந்தியா 5 லட்சம் அமெரிக்க டாலர்களை அளிக்குமென அறிவித்தார்.
  • காம்பியா நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். கல்வி, சுகாதாரம், விவாசாயம் ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. காம்பியா பயணத்தை முடித்துக்கொண்டு குடியரசுத் தலைவர் கினியாவுக்கு செல்கிறார்.
காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம்
  • கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் வி.ஜி.சித்தார்த்தா. இவர் காபி டே உட்பட சில நிறுவனங்களை நடத்தி வந்தார். காபி டே-யின் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன.
  • இந்நிலையில், சித்தார்த்தாவின் திடீர் மரணத்தை அடுத்து காபி டே நிறுவனத்தின் இடைக்கால தலைவராக எஸ்.வி ரங்கநாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ரங்கநாத் தற்போது காபி டே நிறுவனத்தின் நிர்வாகமற்ற தனி இயக்குநராக உள்ளார்.
கனடாவில் பழங்கால கடல் உயிரினத்தின் புதைபடிவங்கள் கண்டுபிடிப்பு
  • கனடாவில் உள்ள கூட்டெனே தேசிய பூங்கா பாறைகளில் இந்த அரிய புதை படிவங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • 'கேம்ப்ரோராஸ்டர் ஃபால்கரஸ்' (Cambroraster Falcatus) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் இன்றைய 'ஆர்த்ரோபாட்' வகை விலங்குகளின் குடும்பத்தை சார்ந்தது. அவை 506 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் 'கேம்ப்ரியன் காலகட்டத்தில்' வாழ்ந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • மேலும் இந்த விலங்குக்கு 'ஸ்டார் வார்ஸ்' விண்கலத்தை போன்ற தலையும், சிறிய அளவிலான உடலும் இருந்திருக்கலாம். மேல்நோக்கி இருக்கும் கண்கள் கொண்ட இந்த உயிரினம் சேற்றில் இருக்கும் புழுக்கள், மீன்களை உண்டு வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



பேட்மிண்டன் உலக பெடரேசன் தரவரிசை : 10-வது இடத்தை பிடித்த ஸ்ரீகாந்த் கிதாம்பி
  • பேட்மிண்டன் உலக பெடரேசன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசையை வெளியிட்டது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த் கிதாம்பி 10-வது இடத்தையும், சமீர் வர்மா 13-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 
  • சாய் பிரணீத் 20-வது இடத்தில் உள்ளார். எச் எஸ் பிரணோய் 31-வது இடத்திலும், பாருபல்லி காஷ்யப் 35-வது இடத்திலும், உள்ளனர்.
பேட்மிண்டன் உலக பெடரேசன் தரவரிசை : 5-வது இடத்தை பிடித்த பிவி சிந்து
  • பேட்மிண்டன் உலக பெடரேசன் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் தரவரிசையை வெளியிட்டது. 
  • இதில் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளான பிவி சிந்து 5-வது இடத்தையும், சான்யா நேவால் 8-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன்: ஒலிம்பிக் பதக்க ஜோடியை வீழ்த்தியது சாத்விக்சாய்ராஜ் அஷ்வினி இணை
  • தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரான்கிரெட்டி / அஷ்வினி பொன்னப்பா இணை தங்களின் முதல் சுற்றில், ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மலேசியாவின் சான் பெங் சூன் / கோ லியு யிங் ஜோடியை வீழ்த்தியது. 
  • சாத்விக்/அஷ்வினி இணை 21-18, 18-21, 21-17 என்ற செட்களில் சான் பெங் சூன்/கோ லியு யிங் ஜோடியை வென்றது. இது இந்த இந்திய ஜோடியின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகும். 
துப்பாக்கி சுடுதல்: எலிசபெத் தங்கம்
  • டில்லியில் நடக்கும் மாஸ்டர்ஸ் துப்பாக்கி சுடுதல், 50 மீ., 'ரைபிள்-3' பிரிவில் கேரள வீராங்கனை எலிசபெத் சுசன் கோஷி தங்கப் பதக்கம் வென்றார்.டில்லியில், 12வது சர்தார் சஜ்ஜன் சிங் சேத்தி நினைவு மாஸ்டர்ஸ் துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. 
  • இதில் பெண்களுக்கான 50 மீ., 'ரைபிள்-3' பிரிவு பைனலில் அசத்திய கேரளாவின் எலிசபெத் சுசன் கோஷி, 460.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். 
  • வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை முறையே மகராஷ்டிராவின் தேஜாஸ்வினி சவாந்த் (455.6 புள்ளி), குஜராத்தின் கே.சி. ஹேமா (444.5 புள்ளி) வென்றனர்.10 மீ., 'ஏர் பிஸ்டல்' கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் 'ஏர் இந்தியா' அணியின் அன்னுராஜ் சிங், தீபக் சர்மா ஜோடி 17-5 என்ற கணக்கில் ஓ.என்.ஜி.சி., அணியின் சுவேதா சிங், அமன்பிரீத் சிங் ஜோடியை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.ஆண்களுக்கான 25 மீ., 'ஸ்டேன்டர்டு பிஸ்டல்' பிரிவு பைனலில் அசத்திய குர்பிரீத் சிங் தங்கம் வென்றார். 
  • இது, இம்முறை இவர் கைப்பற்றிய 2வது தங்கம்.ஏற்கனவே இவர், 'சென்டர் பயஸ் பிஸ்டல்' பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel