Type Here to Get Search Results !

2nd July 2019 AYAKUDI QUESTION PAPER TAMIL PDF

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு காவல்துறை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என படிப்போருக்கு உதவியாக TNPSC SHOUTERS இணையதளத்தில் வினா விடை பகுதிகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள். வாழ்த்துகள்.

TNPSC GENERAL TAMIL 50 IMPORTANT NOTES 02-07-2019
  1. குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு முறை, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் போன்ற கருத்துக்களை வலியுறுத்திச் சிறுகதை, புதினம், கட்டுரை முதலியவற்றை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்.
  2. கனவு எனும் இலக்கிய இதழை நடத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன்.
  3. பின்னல், வேட்டை, தண்ணீர்யுத்தம், புத்துமண், கதை சொல்லும் கலை ஆகிய நூல்களை எழுதியவர் சுப்ரபாரதிமணியன்.
  4. நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் 42 ஓரெழுத்து ஒரு மொழிகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்.
  5. பகுபத உறுப்புக்கள் ஆறு வகைப்படும்.
  6. பகுபதத்தின் முதலில் அமைந்து முதன்மையான பொருளைத் தருவது பகுதி ஆகும். இது கட்டளையாகவே அமையம்.
  7. பகுபதத்தின் இறுதியில் அமைந்து திணை, பால் ஆகியவற்றையோ முற்று, எச்சம் ஆகியவற்றையோ காட்டுவது விகுதி ஆகும்.
  8. பகுபதத்தின் இடையில் அமைந்து காலம் அல்லது எதிர்மறையைக் காட்டுவது இடைநிலை ஆகும்.
  9. பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையே இடம்பெறும் மெய்யெழுத்து சந்தி எனப்படும்.
  10. பெரும்பாலும் இடைநிலைக்கும், பகுதிக்கும் இடையே இடம்பெறும் அசைச்சொல் சாரியை எனப்படும்.
  11. பகுதி, விகுதி சந்தி, இடைநிலை முதலியவற்றில் ஏற்படும் மாற்றம் விகாரம் எனப்படும்.
  12. பெயர்ப் பகாப்பதம் – நிலம், நீர், காற்று, நெருப்பு
  13. வினைப் பகாப்பதம் – நட, வா, படி, வாழி
  14. இடைப் பகாப்பதம் – மன், கொல், தில், போல்
  15. உரிப்பகாப்பதம் – உறு, தவ, நனி, நழி
  16. பகுபதமாக அமையும் பெயர்ச்சொல் பெயர்ப்பகுபதம் ஆகும். இதனை பொருள், இடம், காலம், சினை, பண்பு, தொழில் என ஆறு வகைப்படுத்துவர்.
  17. தேனரசன்
  18. i) வானம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியவர்.
  19. ii)இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்.
  20. iii)மண்வாசல், வெள்ளை ரோஜா, பெய்து பழகிய மேகம் ஆகிய கவிதை நூல்களை எழுதியவர்.
  21. iv) தமிழாசிரியராகப் பணியாற்றியவர்
  22. நெடி – நாற்றம்; மேனி – உடல்; மழலை – குழந்தை
  23. வண்கீரை – வளமான கீரை பரி – குதிரை
  24. முட்டப்போய் – முழுதாகச்சென்று கால் – வாய்க்கால், குதிரையின் கால்
  25. மறித்தல் – தடுத்தல் (மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்தி கட்டுதல்)
  26. “வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாருமே” – கீரைப்பாத்தியும் ஏறிப்பயணம் செய்யும் குதிரையும் ஒன்றாகும் என்றவர். காளமேகப்புலவர்.
  27. தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள ஓவியங்கள் நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக வரையப்பட்டுள்ளது.
  28. ஓவியம் வரையப் பயன்படும் துணியை எழினி, திரைச்சீலை, கிழி, படாம் என அழைப்பர்.
  29. துணி ஓவியங்கள் – கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும் ஆந்திராவிலும் ஓவியர்கள் வரைந்து வருகின்றனர்.
  30. ஓலைச் சுவடிகளிலுள்ள ஓவியங்கள் பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருந்துள்ளது.
  31. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
  32. “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
  33. துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்”
  34. தந்த ஓவியங்கள் அதிகமாக காணப்படும் மாநிலம் கேரளா.
  35. கண்ணாடி ஓவியங்களை உருவாக்கும் ஓவியர்கள் மிகுதியாக உள்ள இடம் தஞ்சாவூர்.
  36. தாள் ஓவியங்கள் கரிக்கோல், நீர் வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றை கொண்டு வரைகின்றனர்.
  37. கருத்துப்பட ஓவியங்களை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் – பாரதியார் (இந்தியா இதழில்)
  38. நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர் கொண்டையராஜு
  39. நாட்காட்டி ஓவியங்களை பசார் பெயிண்டிங் என்றும் அழைப்பர்.
  40. வேறுபெயர்கள்
  41. ஒவியம் – ஓவு, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படாம், வட்டிகைச் செய்தி.
  42. ஓவியம் வரைபவர்- கண்ணுள் வினைஞர், ஓவியப்புலவர், ஓவமாக்கள், கிளவிவல்லோன், சித்திரக்கவிஞர், வித்தகர்
  43. ஓவியக்கூடம் – எழுதொழில் அம்பலம், எழுத்துநிலை மண்டபம், சித்திர அம்பலம், சித்திரக்கூடம், சித்திரமாடம், சித்திர மண்டபம், சித்திரசபை
  44. தமிழ்ப்பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு 1981 – தஞ்சை
  45. உ.வே.சா. நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1942 – சென்னை
  46. கீழ்த்திசை நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1869 – சென்னை
  47. கன்னிமாரா நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1896 – சென்னை
  48. திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்ட ஆண்டு 2000. கன்னியாகுமரி உலகத் தமிழ்ச் சங்கம் திறந்து வைக்கப்பட்ட ஆண்டு 2016 – மதுரை.
  49. உ.வே.சா. நூலகத்தில் 2128 ஓலைச்சுவடிகளும், 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
  50. உலகத் தமிழ் மாநாடு மதுரையில் நடைபெற்ற ஆண்டு 1981.
  51. தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.
  52. தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை போன்றவை – தொழிற்பெயர் விகுதிகள்.
  53. பொருத்துதல்
  54. கற்கும் முறை – பிழையில்லாமல் கற்றல்
  55. உயிர்க்கும் கண்கள் – எண்ணும் எழுத்தும்
  56. விழுச்செல்வம் – கல்வி
  57. எண்ணித் துணிக – செயல்
  58. கரவா கரைந்துண்ணும் – காகம்
  59. 145, மடமகள் – இளமகள்
  60. புகவா – உணவாக
  61. “ஒன்றொரு முன்றிலோ இல்” என்பதன் பொருள் “ஒன்றுமில்லாத வீடு எதுவுமில்லை”.
  62. முன்றில் – வீட்டின் முன் இடம் (திண்ணை )
  63. குழி – நில அளவைப் பெயர்
  64. சாண் நீட்டல் அளவைப்பெயர்
  65. மணி – முற்றிய நெல்
  66. சீலை – புடவை
  67. பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை மலை அருவி என்னும் நூலாக தொகுத்தவர் கி.வா.ஜெகநாதன்.
  68. “வாய்மொழி இலக்கியம்” எனப்படுவது நாட்டுப்புறப்பாடல்.
  69. பாண்டியர்களின் இரண்டாவது தலைநகரம் திருநெல்வேலி.
  70. “திக்கெல்லாம் புகழுனும் திருநெல்வேலி என்று திருஞானசம்பந்தரும்
  71. “தண்பொருளுரைப் புனல் நாடு” என்று சேக்கிழாரும் திருநெல்வேலியின் சிறப்பைப் போற்றியுள்ளனர்.
  72. “பொதியிலாயினும் இமய மாயினும்
  73. பதியெழு அறியாப் பழங்குடி” – என்றவர் இளங்கோவடிகள்
  74. திரிகூடமலை – குற்றாலமலை
  75. முற்காலத்தில் திருநெல்வேலிக்கு வேணுவனம் என்னும் பெயரும் இருந்துள்ளது.
  76. மூங்கில் காடு.
  77. பொருத்துக
  78. நாற்று -நடுதல், பறித்தல்
  79. நீர்-பாய்ச்சுதல்
  80. நெல்-பெறுதல்
  81. போர் – அடித்தல்
  82. களை – பறித்தல்
  83. கதிர் – அறுத்தல்
  84. நெல்லிக்காய் உற்பத்தியில் தமிழகத்தில் நெல்லை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.
  85. காவற்புரை என்றால் சிறைச்சாலை.
  86. இரட்டை நகரங்கள் என அழைக்கப்படும் நகரங்கள் திருநெல்வேலி, பாளையங்கோட்டை.
  87. கொற்கையின் முத்துக்களை
  88. “முத்துப்படு பரப்பிற் கொற்கை முன்றுரை” என்கிறது – நற்றிணை.
  89. கொற்கையில் பெருந்துறை முத்து – அகநானூறு
  90. தண்பொருநை நதி என அழைக்கப்பட்டது தாமிரபரணி ஆறு.
  91. திருநெல்வேலிச் சீமையில் பிறந்த சங்ககாலப் புலவர்கள் மாறோக்கத்து நப்பசலையார், நம்மாழ்வார், பெரியாழ்வார், குமரகுருபரர், திரிகூடராசப்பக் கவிராயர், கவிராசப்பண்டிதர்
  92. தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு எனப்படுவது பாளையங்கோட்டை.
  93. வணிகம் நடைபெறும் பகுதியைப் பேட்டை என வழங்குதல் மரபு.
  94. திருநெல்வேலிச் சீமை என்று குறிப்பிடப்படுவது இன்றைய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி இணைந்த பகுதியாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel