Wednesday, 24 July 2019

23rd JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

திண்டுக்கல் அருகே 10ம் நுாற்றாண்டு வட்டெழுத்து செக்கு உரல் கண்டுபிடிப்பு
 • தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி வரலாற்றுத்துறை மூலம் திண்டுக்கல் அருகே நரசிங்கபுரத்தில் கி.பி.,10 ம் நுாற்றாண்டை சேர்ந்த வட்டெழுத்துக்கள் உள்ள செக்கு உரல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 • பண்டை காலத்தில் மக்களின் வாழ்க்கையும், வாழ்விடமும் மலையும் மலை சார்ந்த இடமாக இருந்துள்ளது.இப்பகுதியில் வட்டெழுத்துக்கள், பானை ஓடுகள், நடுகற்கள் போன்ற தொன்மையான வரலாற்று தடயங்கள் கிடைத்து வருகின்றன. 
 • இங்கு கிடைத்த செக்கு உரல் மூன்று அடி ஆழத்தில் பாறையில் வெட்டப்பட்டுள்ளது. அந்த உரலில் 'ஸ்ரீ முது நீர் முரி மீ மங்கரை யுகந்து தட்டான் ஆசிரியம் பாறைய் இதனய் காப்பவன் செல்லக்கலிங்கரையன் மகன் யிட்ட செக்கு' என குறிக்கப்பட்டுள்ளது.
 • முது நீர் முரி மீ மாங்கரை என்பது இந்த இடத்தை குறிக்கும் சொல்லாகும். தட்டான் என்ற வார்த்தை பொற்கொல்லரை குறிக்கும். ஆசிரியம் என்பது அடைக்கலம் கொடுக்கும் இடம் என்ற பொருளை தரும்.
 • ஒரு பொற்கொல்லர் வேறு ஒரு இடத்திலிருந்து ஏதோ ஒரு காரணத்திற்காக இங்குவந்து மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பிற்காக செல்லக்கலிங்கரை என்பவரின் மகனை நியமித்துள்ளார். இவர் மக்களின் பயன்பாட்டிற்காக செக் உரல் வெட்டி தந்துள்ளார் என இந்த சான்று கூறுகிறது.
உள்ளூர் மக்களுக்கான பணி ஒதுக்கீட்டை முதன்முதலில் சட்டமாக்கிய ஆந்திரா
 • தொழிற்சாலைகள்/நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கான ஆந்திரப் பிரதேச வேலை வாய்ப்பு சட்டம் 2019, அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
 • இதன்படி, அம்மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், கூட்டு ஒத்துழைப்பு நிறுவனங்கள், அரசு - தனியார் கூட்டுழைப்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் ஆகியவற்றில் 75% உள்ளூர் மக்களை கட்டாயம் பணியமர்த்த வேண்டும்.
 • தனியார் நிறுவனங்களில், உள்ளூர் மக்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் கட்டாய இடஒதுக்கீட்டை வழங்கியாக வேண்டுமென்ற கோரிக்கை கர்நாடகா, மராட்டியம், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்தாலும், ஆந்திராவில் அது முதன்முதலாக சட்டமாகியுள்ளது.
குமாரசாமி ராஜிநாமா: கர்நாடக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசு தோல்வி
 • கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மாநில அரசு தோல்வியடைந்ததையடுத்து, முதல்வர் குமாரசாமி தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
 • நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு மாநில ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்த அவர் தனது பதவி விலகல் கடிதத்தை ஆளுநரிடம் சமர்பித்தார்.
 • குமாரசாமியின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்ட மாநில ஆளுநர் வஜூபாய் வாலா, மாற்று ஏற்பாடுகள் செய்து முடிக்கும்வரை தொடர்ந்து பதவியில் நீடிக்குமாறு முதல்வர் குமாரசாமியை கேட்டுக்கொண்டார்.
 • செவ்வாய்கிழமை இரவு 7 மணிக்கு மாநில சட்டப்பேரவையில் நடந்த வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 பேர் வாக்களித்தனர். அதேவேளையில் அரசுக்கு எதிராக 105 பேர் வாக்களித்தனர்.
மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல்
 • மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோட்டர் வாகன சட்டத்திருத்த மசோதாவுக்கு குரல் வாக்கு மூலம் மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. பூச்சிக்கொல்லிகளை தெளிக்க 'அக்ரிஹாப்டர்': சென்னை ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு
 • சென்னை ஐஐடியைச் சேர்ந்த 3 மாணவர்கள் விவசாயிகளுக்கு உதவும் விதமாக ஒரு ஸ்மார்ட் அக்ரிஹாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளனர். ட்ரோன் வடிவமைப்பில் உருவாகியுள்ள இந்த அக்ரிஹாப்டர், விவசாய நிலங்களுக்கு பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை பிரதானமாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. 
 • மேலும் இதில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மூலம் பயிர்களின் ஆரோக்கியத்தை துல்லியமாக படமெடுத்து தெரிந்துகொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
 • புதுவை சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பேரவைத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து குறளை வாசித்து பேரவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார். 
 • தொடர்ந்து புதுவையின் நீர்வளம் பாதுகாப்பு தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டு விவாதம் நடைபெற்றது. 
 • இந்நிலையில் சட்டப்பேரவை இன்று கூடியதும் புதுச்சேரி ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை அம்மாநில முதுல்வர் நாராயணசாமி கொண்டு வந்தார். இதையடுத்து அந்த தீர்மானம் அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு
 • ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிலிருந்து விலக, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், பிரிட்டன் முடிவு செய்தது. அதற்கு பிரெக்சிட் என்னும் மசோதா தாக்கல் செய்து, பார்லிமென்டில் ஒப்புதலை பெற வேண்டும். 
 • ஏற்கனவே ஒருமுறை, பிரெக்சிட் மசோதா, ஓட்டெடுப்பில் தோல்வியை தழுவியது.இரண்டாவது முறையும், இந்த மசோதாவிற்கு பார்லியின் ஒப்புதலை பெற முடியாமல் போனதால், பதவியை ராஜினாமா செய்யப் போவதாக, பிரிட்டன் பிரதமர், தெரசா மே அறிவித்தார். இதன்படி, தன் பிரதமர் பதவியை, கடந்த மாதம் (ஜூன்) அவர் ராஜினாமா செய்தார். 
 • புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அவர் தற்காலிக பிரதமராக பதவியில் தொடர்வார் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், பிரிட்டனின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
 • புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான, எம்.பி.,க்கள் ஓட்டெடுப்பு, நடந்தது. இதில் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாக, 92,153 ஓட்டுகளும், ஜெர்மி ஹன்ட்டிற்கு ஆதரவாக 46,656 ஓட்டுகளும் கிடைத்தன.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment