Type Here to Get Search Results !

இந்தியாவின் ஊராட்சி மன்றம் / PANCHAYAT COUNCIL OF INDIA


TAMIL
  • ஊராட்சி மன்றம் (பஞ்சாயத்து ராஜ், Panchayath Raj) தெற்காசிய அரசு அல்லது அரசியல் முறை குறிப்பாக இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் நேபாளம் போன்ற நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகின்றது. 
  • பஞ்சாயத்து என்பதின் பஞ்ச் என்பது ஐந்தையும் யாத் என்பது மன்றம் பேரவை அ கூட்டம் இவைகளைக் குறிக்கும் கிராம வழக்கு சொல்.
  • கிராமங்களில் கிராம வாழ் மக்களிடையே ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சர்ச்சைகள் இவைகளை இவர்களின் குழுக்கள் மூலம் தீர்வு காண்பது வழிவழியாகப் பின்பற்றி வந்த செயலாகும். 
  • ஊராட்சி மன்றங்கள் சாதிய அமைப்புகளால் சில இந்தியப் பகுதிகளில் காப் என்ப்படும் குழுவைக் குறிப்பதல்ல. இது சாதிய அமைப்புகளில் இருந்து வேறுபட்டது.
  • பஞ்சாயத்து ராஜ் என்ற சொல் மகாத்மா காந்தியால் பிரித்தானிய ஆளுகையின் போது அறிமுகப் படுத்தப்பட்டது. அவருடைய கிராமங்களை நேசிக்கும் பார்வையில், கிராம சுவராஜ் கோட்பாட்டின் படி இச்சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. (கிராம சுயாட்சி அ சுய ஆளுமை). தமிழில் இது ஊராட்சி என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.
  • கிராமங்களுக்கு அதிக முக்கயத்துவம் கொடுக்கும் விதமாக இந்திய அரசியலமைப்பில் 73 வது திருத்தமாக 1992 ல் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 
  • இத்திருத்தச்சட்டத்தின் படி கிராம ஊராட்சிகள் அதிக ஆளுமை பெற்றவைகளாகும் வகையில் அதிகார பரவலாக்கம், பொருளாதார வரைவு மற்றும் சமூக நீதி போன்ற கிராம ஊராட்சித் தொடர்பான 29 செயல் திட்டங்களை 11 வது அட்டவணையில் வெளிப்படுத்தியதின் விளைவாக கிராமங்கள் அதிக முக்கியத்துவம் கண்டது.
நிதி
  • ஊராட்சிகள் அதன் நிதி ஆதாரங்களை மூன்று வழிகளில் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளன. -
  • உள் அமைப்புகள் பெற்றுக் கொள்ளும் விதமாக மைய நிதி ஆணையம் பரிந்துரைத்ததின் படி பெற்றுக் கொள்ளலாம்.
  • மைய ஆதரவளிப்போர் குழக்கள் மூலம் நிதி ஆதாரங்கள் அமல்படுத்தப்படுகின்றது.
  • மாநில அரசின் மாநில நிதி ஆணையப் பரிந்துரையின் படி நிதி ஆதாரங்கள் வழங்குகின்றது.
வரலாறு
  • ஊராட்சி மன்றம் ஏப்ரல் 24, 1993 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பின் 1992, 73 வது திருத்தச் சட்டத்தின்படி இந்தியாவில் அமல் படுத்தப்பட்டது. 
  • டிசம்பர் 24, 1996 பயங்குடியினர் வாழும் பகுதிகளான எட்டு மாநிலங்களில் (ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒரிசா மற்றும் இராஜஸ்தான்) விரிவுப் படுத்தப்பட்டது.
பிற இந்திய மொழி பெயர்கள்
  • மத்திய இந்தியாவில் பஞ்சமண்டலிகள்
  • பீகாரில் கிராம ஜன பாதங்கள் 
  • இராஜஸ்தானில் பஞ்ச குலங்கள் என்ற சொல்லால் வழங்கப்படுகின்றது.
ஊராட்சி மன்றத்தின் பணிகள்
  • தெரு விளக்குகள் அமைத்தல்.
  • ஊர்ச் சாலைகள் அமைத்தல்
  • குடிநீர் வழங்குதல்.
  • கழிவுநீர்க் கால்வாய் அமைத்தல்.
  • சிறிய பாலங்கள் கட்டுதல்.
  • வீட்டுமனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குதல்.
  • கிராம நூலகங்களைப் பராமரித்தல்.
  • தொகுப்பு வீடுகள் கட்டுதல்.
  • இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு மைதானங்களை நிறுவுதல், பராமரித்தல் ஆகியன ஆகும்.
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் - 1994
  • தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு மூன்றடுக்குளைக் கொண்டது.
  • கிராம ஊராட்சி
  • ஊராட்சி ஒன்றியம்
  • மாவட்டப் பஞ்சாயத்து
  • கிராம ஊராட்சியில் மக்கள்தொகை 500க்குக் குறையாமல் இருப்பர். ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் 5க்குக் குறையாமலும் 15 க்கு மிகாமலும் உறுப்பினர்கள் இருப்பர். இதன் உறுப்பினர்களை வாக்காளர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பர்.
தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்ட திருத்தம் - 2006
  • 1994, தமிழ்நாடு பஞ்சாயத்துச் சட்டப்படி உள்ளாட்சி அமைப்பில் மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 
  • வீண் செலவுகளையும், கால விரயத்தையும் தவிர்ப்பதற்காக, 2006 தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டத் திருத்தப்படி மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், கிராம ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் போன்ற பதவிகளை வார்டு உறுப்பினர்கள் மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்.
ENGLISH
  • Panchayat Raj is a South Asian system of government or politics particularly practiced in countries such as India, Pakistan and Nepal. Panchayat means five and yad means assembly and meeting.
  • In the villages, problems and disputes arising among the villagers were resolved through their groups. Panchayat councils do not refer to a group called kab in some parts of India by caste organizations. It is different from caste systems.
  • The term Panchayat Raj was introduced by Mahatma Gandhi during the British rule. In view of his love for villages, the term was introduced as per the Grama Swaraj doctrine. (Village Autonomy a self-governance). In Tamil it is rendered by the word Panachti.
  • The 73rd Amendment to the Constitution of India was passed in 1992 to give greater importance to villages.
  • As a result of this amendment, 29 action plans related to village panchayats such as decentralization, economic development and social justice were revealed in the 11th schedule to make village panchayats more autonomous.
Finance
  • Panchayats are provided with three means of obtaining their financial resources. -
  • Internal bodies may receive as prescribed by the Central Finance Commission.
  • Funding is implemented through core sponsoring groups.
  • Funds are provided as per the recommendation of the State Finance Commission of the State Government.
History
  • The Panchayat Council came into force in India on April 24, 1993 by the 73rd Amendment Act of 1992 to the Constitution of India.
  • On December 24, 1996, it was extended to eight states (Andhra Pradesh, Bihar, Gujarat, Himachal Pradesh, Madhya Pradesh, Maharashtra, Orissa and Rajasthan) that are tribal areas.
Other Indian Language Names
  • Panchmandalis in Central India
  • Village Jana Padas in Bihar
  • In Rajasthan it is given by the term pancha kulas.
Functions of Panchayat Council
  • Installation of street lights.
  • Construction of village roads
  • Supply of drinking water.
  • Construction of sewage canal.
  • Construction of small bridges.
  • Grant of permission for housing units.
  • Maintenance of village libraries.
  • Construction of prefabricated houses.
  • Establishment and maintenance of recreational and sports grounds for youth.
Tamil Nadu Panchayat Raj Act - 1994
  • The Panchayat Raj system of Tamil Nadu has three tiers.
  • Village Panchayat
  • Panchayat Union
  • District Panchayat
  • The population of the village panchayat shall not be less than 500. Each village panchayat shall have not less than 5 and not more than 15 members. Its members are directly elected by voters.
Tamil Nadu Panchayat Raj Amendment Act - 2006
  • According to the Tamil Nadu Panchayat Act, 1994, the Municipal Corporation Mayor, Municipal Presidents and Panchayat Presidents are directly elected by the people in the local government system.
  • In order to avoid unnecessary expenses and wastage of time, as per Tamil Nadu Panchayat Raj Act Amendment 2006, the ward members elect the posts of Municipal Corporation Mayor, Municipal President, Village Panchayat Union Presidents through indirect elections.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel