Type Here to Get Search Results !

8th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

புற்றுநோயாளிகளுக்கான பிரத்யேக வலி நிவாரண மையம்: மாநிலத்தில் முதன்முறையாக ராயப்பேட்டை மருத்துவமனையில் அமைகிறது
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பிரத்யேக வலி நிவாரண மையம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 படுக்கைகள் கொண்ட இந்த மையமானது அடுத்த வாரம் முதல் செயல்படத் தொடங்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • அரசு மருத்துவமனை ஒன்றில் இத்தகைய சிறப்பு வலி நிவாரண மையம் அமைக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
இந்தியா-மாலத்தீவுகள் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து: பிரதமர் மோடி-அதிபர் சோலி பேச்சுவார்த்தை
  • இந்தியா-மாலத்தீவுகள் இடையே பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட 6 துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையெழுத்தானது.
  • பிரதமராக 2-ஆவது முறையாக பதவியேற்ற நரேந்திர மோடி, முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவுகளுக்கு சென்ற நிலையில், அங்கு இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுக் கூட்டங்களிடையேயான நல்லுறவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் பிரதமர் மோடி மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
  • பின்னர், இந்தியா-மாலி இடையே பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் உள்பட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • நீர் நிலைகள், சுகாதாரம், கடல் மார்க்கமாக பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்பாக 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  • பின்னர், சுங்கத்துறையின் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய மறைமுக வரிகள் வாரியம்-இந்திய சுங்கத் துறை-மாலத்தீவுகள் சுங்கத் துறை இடையேயான ஒத்துழைப்பை ஏற்படுத்த ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • அத்துடன், மாலத்தீவு குடிமைப் பணி அதிகாரிகளுக்கான பயிற்சியளிக்கவும், அவர்களின் திறனை வளர்க்கவும் இந்தியாவின் "நிர்வாகத்துக்கான தேசிய மையம்'-மாலத்தீவுகளின் "நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் துறை', மாலத்தீவுகளின் "குடிமைப் பணிகள் ஆணையம்' ஆகியவை இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • மேலும், பாதுகாப்புத் துறை சாராத கப்பல் போக்குவரத்து தொடர்பான தொழில்நுட்ப தகவல்களை பகிர்ந்துகொள்ள இந்திய கடற்படை-மாலத்தீவுகளின் தேசிய பாதுகாப்புப் படை இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • மாலத்தீவுகள் அதிபர் முகமது சோலிக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட் ஒன்றை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். அப்போது, மாலத்தீவுகளில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை ஊக்கப்படுத்த இந்தியா உதவும் என்று மோடி அப்போது உறுதியளித்தார்.
மாலத் தீவில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது
  • நாட்டின் பிரதமராக பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற பின், தன் முதல் வெளிநாட்டுப் பயணமாக, தெற்காசிய நாடான, மாலத் தீவுகளுக்கு சென்றுள்ளார். இதன் மூலம், அண்டை நாடுகளுடான உறவுக்கு முக்கியத்துவம் என்ற அரசின் கொள்கை, மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • அவருக்கு, அந்த நாட்டின் மிகவும் உயரிய கவுரவ விருது வழங்கப்பட்டது.
  • உயரிய விருதுமாலத் தீவுகள் அரசின் சார்பில், வெளிநாட்டு தலைவர்களுக்கு வழங்கப்படும், 'ரூல் ஆப் நிஷான் இஸ்ஸுதீன்' என்ற, மிகவும் உயரிய கவுரவ விருது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.



இந்தியாவுக்கு ஆளில்லா போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
  • இந்தியாவுக்கு ஆளில்லா போர் விமானங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. 
  • ஆளில்லா போர் விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்வதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமன்றி, ஒருங்கிணைந்த ஏவுகணை தொழில்நுட்பத்தை வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக உள்ளது.
  • இந்த ஒப்பந்தம் முடிவானால், சுமார் 1.73 லட்சம் கோடி மதிப்பில் ஆளில்லா போர் விமானங்கள் இந்தியாவுக்கு விற்பனை செய்யப்படும். 
பூட்டான் மன்னருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
  • அண்டை நாடுகளுடனான உறவுக்கு முக்கியத்துவம் என்ற, மத்திய அரசின் கொள்கையின்படி, தெற்காசிய நாடான, பூட்டானுக்கு, தன் முதல் வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்டார்,வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர்.
திருத்துறைப்பூண்டியில் தேசிய நெல் திருவிழா
  • திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே, ஆதிரங்கம் இயற்கை வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி மையத்தில், 2007ல், தேசிய அளவிலான நெல் திருவிழாவை, மறைந்த, இயற்கை வேளாண் விஞ்ஞானி, நம்மாழ்வார் துவக்கி வைத்தார். அதன் பின், 'நெல்' ஜெயராமன், அவ்விழாவை நடத்தி வந்தார்.
  • கடந்த ஆண்டு, 'நெல்' ஜெயராமன் மரணமடைந்ததை ஒட்டி, நடப்பு ஆண்டிற்கான, தேசிய நெல் திருவிழாவை, 'கிரியேட் - நமது நெல்லை காப்போம்' அமைப்பு நடத்துகிறது.
  • விழாவில், 6,000 விவசாயிகளுக்கு, 174 பாரம்பரிய நெல்ரக விதைகள், 2 கிலோ வீதம் இலவசமாக வழங்கப்பட்டன.நெல் விதைகள் பெற்றுக் கொள்ளும் விவசாயிகள், வரும் ஆண்டு, 4 கிலோ வீதம், திரும்ப கொடுக்க வேண்டும்.இன்றுடன், நெல் திருவிழா நிறைவடைகிறது.



நாகேஷ்-கருணாகரன் நினைவு கால்பந்து மூலக்கொத்தளம் கிளப் சாம்பியன்
  • மாவட்ட அளவில் 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கான நாகேஷ் கருணாகரன் நினைவு கால்பந்து போட்டியில் மூலக்கொத்தளம் கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் நாகேஷ் - கருணாகரன் நினைவு கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற்றது. 
  • மாவட்ட அளவிலான இந்தப் போட்டியில் வியாசர்பாடி, ராயபுரம், யானை கவுனி, எழில் நகர், கேஎம் கார்டன் என 11 கால்பந்து கிளப்களைச் சேர்ந்த 14வயதுக்கு உட்பட்டவர்களுக்கான அணிகள் பங்கேற்றன. 
  • இறுதிப் போட்டியில் மூலக்கொத்தளம் கால்பந்து கிளப் - காத்படா கால்பந்து கிளப் அணிகள் மோதின. அதில் மூலக்கொத்தளம் கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 
கால்பந்து: இந்தியாவுக்கு 3வது இடம்
  • கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி, 3வது இடம் பிடித்தது.தாய்லாந்தில், கிங்ஸ் கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் 3-4வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின. 
  • ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் இந்திய வீரர் அனிருத் தபா முதல் கோலடித்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய தாய்லாந்து வீரர்களால் பதிலடி தர முடியவில்லை.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, மூன்றாவது இடம் பிடித்தது.
46 ஆண்டுக்கு பின் பிரெஞ்சு ஒபன் மகளிர் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடை பெற்று வருகிறது. இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிச் சுற்று நடந்தது. இதில் செக் குடியரசை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை மார்கெடா வான்ரவோவா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஆஸ்லே பார்டி ஆகியோர் மோதினர்.
  • இதன் மூலம் செக் குடியரசு நாட்டின் வீராங்கனை மார்கெடா வான்ரவவோவா ஆஸ்திரேலியா நாட்டின் ஆஸ்லே பார்டி யால் 6-1, 6-3 என்னும் செட் கணக்கில் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆஸ்லே பார்டி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
  • கடந்த 46 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி மீண்டும் இந்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1973 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மார்கிரெட கோர்ட் சாம்பியன் பட்டம் வென்றார். தற்போது ஆஸ்லே பார்டி சாம்பியன் ஆகி உள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel