தமிழக விவசாயிகளுக்கு இ-அடங்கல்: ஜூலை முதல் அமலுக்கு வருகிறது
- நாட்டிலேயே பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தில் இ-அடங்கல் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இ-அடங்கல் திட்டம் இருந்தாலும் அவற்றை அதிகாரிகள் மட்டுமே செயல்படுத்த முடியும். ஆனால், தமிழகத்தில்தான் விவசாயிகளும் இத் திட்டத்தில் பதிவு செய்து அரசு வழங்கும் சலுகைகளை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
- விவசாயி ஒவ்வொருவருக்கும் தனித்தனியே குடிமக்கள் கணக்கு எண் வழங்கப்படும். அரசின் சேவைகளை இணைய வழியாக பெற்ற ஒவ்வொருவருக்கும் இந்த எண் வழங்கப்பட்டிருக்கும். இந்த எண் இல்லாவிட்டால் புதிதாகப் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
- இந்த எண்ணை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விவசாயியும் எந்தெந்த பருவத்துக்கு, எந்த வகையான பயிரை, எவ்வளவு பரப்பில் பயிரிட்டுள்ளோம் என்பதை நேரடியாக பதிவு செய்யலாம்.
- இதுமட்டுமல்லாது, பயிரைப் பூச்சி தாக்கியோ, வறட்சி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாலோ அவற்றை புகைப்படம் வழியாக இ-அடங்கலில் பதிவு செய்யலாம். புகைப்படம் பதிவு செய்த தேதி, நேரம் உள்ளிட்டவற்றையும் துல்லியமாக அறியலாம்.
- தமிழகத்தில் ரூ.211 கோடியில் 42 துணை மின் நிலையங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காணொலிக் காட்சி மூலமாக புதிய மின் நிலையங்களை அவர் திறந்தார்.
- இதைக் கருத்தில் கொண்டு புதிய, தரம் உயர்த்தப்பட்ட துணை மின்நிலையங்களை தமிழக அரசு அமைத்து வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டம் அத்தாணியில் துணை மின்நிலையத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
- மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டி, திருவள்ளூர் ஏலியம்பேடு துணை மின்நிலையங்கள், ஈரோடு மாவட்டம் கங்காபுரம், கரூர் மாவட்டம் நொய்யல், தஞ்சாவூர் திருப்புறம்பியம், திருநெல்வேலி மாவட்டம் கரிசல்பட்டி, கரூர் மாவட்டம் புலியூர், கடலூர் கீழக்குப்பம், கோ.பூவனூர் ஆகிய ஐந்து இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் 6 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் ரூ.45,000 கோடி நிதி ஒதுக்கீடு
- அதிநவீன நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ், 6 நீர் மூழ்கி கப்பல்களை தயாரிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- ப்ராஜெக்ட் 75-ஐ என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு சுமார் ரூ.45,000 கோடி நிதி ஒதுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. வெளிநாட்டு தொழில்நுட்ப உதவியுடன், நீர்மூழ்கி கப்பல்களை உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி ஜி - 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்
- ஜப்பானில் நடக்கும் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக, இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
- ஜப்பானின் ஒசாக்கா நகரில் வருகிற 28, 29-ந் தேதிகளில் ஜி -20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் ஜி - 20 நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
- சுற்றுச்சூழல் மாற்றங்கள், வேலை வாய்ப்பு, பெண் தொழில் முனைவோர், போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது.
நொய்டாவில் அமைகிறது மிகப்பெரிய சர்வதேச விமான நிலையம்
- உத்திரப்பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் தற்போது 8 ஓடுதளங்களுடன் கட்டப்பட்டு வரும் ஜெவார் விமான நிலையம், டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
- இந்த விமான நிலையம் வரும் 2024ம் ஆண்டு பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்மூலம், உலகின் பெரிய விமான நிலையங்களுள் ஒன்றாக இது திகழும் என்றும் கருதப்படுகிறது. மேலும், அமெரிக்காவின் சிகாகோ நகரிலுள்ள ஓ'ஹரே சர்வதேச விமான நிலையத்துடன் இது ஒப்பிடப்படும்.
ஆளில்லா ஹெலிகாப்டர்: சீனா வெற்றிகர சோதனை
- சீனா உருவாக்கிய ஆளில்லா ஹெலிகாப்டர் வெற்றிகரமாக சோதித்துப் பார்க்கப்பட்டதாக அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
- ஏவி500 எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த ஹெலிகாப்டர், ஹைனன் மாகாணத்தில் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இரவில் இயக்கிப் பார்க்கப்பட்டதாகவும், இதன் மூலம் சீன ராணுவம் இதனை தங்களது படையில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த நாளிதழ் கூறியுள்ளது.
12 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஹாட்ரிக் நாயகன்
- 12 வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த மே 30 ஆம் தேதி துவங்கிய ஜூன் 14 வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 28_வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
- அதில் ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெறும் 4 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றினார் முகமது ஷமி. இந்த தொடரின் முதல் ஹாட்ரிக் நாயகன் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சந்தோஷ்குமார் சாம்பியன்
- தாய்லாந்தில் 'எலைட் உடல் திறன் சாம்பியன்ஷிப்' சர்வதேச போட்டி ஜூன்15, 16 தேதிகளில் நடைப்பெற்றது.
- பல்வேறு நாடுகளில் இருந்து வீரர்கள் பங்கேற்ற இந்தப் போட்டியின் 75கிலோ பாடி பில்டிங் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த சந்தோஷ்குமார் நாராயணன் முதல் இடம் பெற்றார். போட்டி நடைபெற்ற அரங்கில் தேசியக்கொடி, விருதுடன் கம்பீரமாக நிற்கும் சந்தோஷ்குமார்.