Type Here to Get Search Results !

18th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

புதிய மாநகராட்சி ஆனது ஆவடி
  • சென்னை, கோவை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, சேலம், தஞ்சாவூர், துாத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், வேலுார் என, 12 மாநகராட்சிகள் இருந்தன. 
  • பிப்ரவரி மாதம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்தும் சட்ட மசோதா, சட்டசபையில் தாக்கல் நிறைவேற்றப்பட்டது.
  • இதன் காரணமாக, மாநகராட்சிகள் எண்ணிக்கை, 14 ஆக உயர்ந்தது. தற்போது, 15வது மாநகராட்சியாக, ஆவடி மாநகராட்சி உதயமாகி உள்ளது. ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, நேற்று முன்தினம், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
17வது மக்களவை சபாநாயகராக ராஜஸ்தான் மாநில பாஜக எம்.பி. ஓம் பிர்லா தேர்வு
  • 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று (17ந்தேதி) தொடங்கி உள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாஜக எம்.பி.யான ஓம் பிர்லா தேர்வு செய்யப்படுகிறார்.
  • உச்சநீதிமன்ற, தலைமை நீதிபதிக்கு இணையான அரசியல் சாசன அதிகாரம் கொண்ட மக்களவை சபாநாயகர் பதவிக்கு ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா தொகுதியில் இருந்து பாஜக மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2030-க்குப் பின் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்பனை! நிதி ஆயோக்கின் யோசனை
  • 2030-ம் ஆண்டுக்குப் பிறகு, எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நிதி ஆயோக் கூறியுள்ளது. சமீபத்தில் நடந்த நிதி ஆயோக்கின் கூட்டத்தில் இதற்கான திட்டம் முன்மொழியப்பட்டு, கேபினெட் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2
  • 030-க்குள் டீசல் மற்றும் பெட்ரோல் வாகனங்கள் தயாரிப்பை நிறுத்தவும் சாலை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சகம் முன்வந்துள்ளது. இதற்காக, எலெக்ட்ரிக் தொழில்நுட்பங்கள்கூடிய ஈ-நெடுஞ்சாலைகளை உருவாக்கும் விதமாக, ரோடு மேப் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. 
  • எலெக்ட்ரிக் வாகனங்களை உற்பத்திசெய்வதில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வரும் இந்தச் சூழ்நிலையில், அரசின் இந்த நடவடிக்கை வரவேற்பைப் பெறத் தொடங்கியுள்ளது.
கடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு : நீதிமன்றம் அதிரடி
  • துப்புரவு பணியாளர், தோட்ட பணியாளர், கிராம உதவியாளர், மதிய உணவு ஒருங்கிணைப்பாளர், உதவி சமையற்காரர், அலுவலக உதவியாளர் போன்ற கடை நிலை பணிகளுக்கும் எழுத்து தேர்வு அடிப்படையில் பணியாளர்களை தேர்வு செய்யும் வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக அரசின் தலைமை செயலருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.



மக்களவையில் காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
  • நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
  • இறுதியாக மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார்.
  • கடந்த மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டுநர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி நீக்கம்:மத்திய அரசு முடிவு
  • வாகன ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்குவதற்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்துள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு பெருகும் என சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உலகக்கோப்பையில் உலக சாதனை: 17 சிக்ஸ் அடித்து சாதனை செய்த மோர்கன்
  • ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஒரே இன்னிங்சில் ஒரு பேட்ஸ்மேன் அதிகபட்சமாக 16 சிக்ஸர்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. 
  • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் பேட்ஸ்மேன் மோர்கன் 17 சிக்ஸர்கள் அடித்து புதிய உலக சாதனை செய்துள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel