Thursday, 9 May 2019

8th & 9th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF


இந்திய கால்பந்து பயிற்சியாளராகிறார் இகோர் ஸ்டிமக்
 • குரோஷியாவைச் சேர்ந்த இகோர் ஸ்டிமக்கை இந்திய ஆடவர் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நியமிக்க தொழில்நுட்ப குழுவானது பரிந்துரை செய்துள்ளது.
 • 51 வயதான இகோர் ஸ்டிமக், கடந்த 1998-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பெற்றிருந்தார். 
அகில இந்திய ஸ்னூக்கர் போட்டி சென்னையில் தொடக்கம்
 • அகில இந்திய ஸ்னூக்கர் போட்டி சென்னையில் இன்று முதல் 21-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 128 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். 
 • இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்பவர்களுக்கு ரூ.60 ஆயிரமும், 2-வது இடம் பெறுபவர்களுக்கு ரூ.30 ஆயிரமும் பரிசு தொகை அளிக்கப்படும்.
நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண்ணை 6% குறைக்க மத்திய அரசு முடிவு
 • 2019-20-ஆம் ஆண்டுக்கான மருத்துவ மேல் படிப்புக்கான நீட் தேர்வு தகுதி கட்-ஆப் மதிப்பெண்களை 6 சதவீதம் குறைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, இத்தேர்வில் பொதுப் பிரிவில் தேர்வு எழுதுவோர் குறைந்தபட்சம் 44 சதவீதம், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் தேர்வு எழுதுவோர் குறைந்தபட்சம் 39 சதவீதம், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவில் தேர்வு எழுதுவோர் 34 சதவீதம் மதிப்பெண்கள் எடுப்பது இப்படிப்பில் சேர்க்கை பெறுவதற்கான தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சர்வதேச போதை பொருள் கட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் தேர்வு
 • சர்வதேச போதை பொருள் கட்டுப்பாட்டு வாரியம் என்ற அமைப்பு, ஐ.நா., சபையின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பின், ஐந்து உறுப்பினர்களில் ஒருவராக இந்தியாவை சேர்ந்த, ஜக்ஜித் பவாடியா, (60), பதவி வகித்து வந்தார்.
 • அவரது பதவிக்காலம், சமீபத்தில் முடிவடைந்தது. இந்நிலையில், புதிய உறுப்பினரை தேர்வு செய்வதற்கு நடந்த தேர்தலில், ஜக்ஜித், மீண்டும் வெற்றி பெற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, இவர், இந்த பதவியில் தொடர்வார்.
மிளகாய் ஏற்றுமதி: இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையெழுத்து
 • இந்தியாவில் இருந்து அண்டை நாடான சீனாவுக்கு மிளகாய் ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் இருநாடுகளுக்கிடையே வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. 
 • சீன பொது நிர்வாகத் துறை அமைச்சர் லீ குவோவை, இந்திய வர்த்தகத் துறை செயலர் அனுப் வதவான் வியாழக்கிழமை சந்தித்து பேசினார். 
 • ஜவுளி, தோட்டக்கலை, ரசாயனம், மருந்துப் பொருள்கள் உள்ளிட்ட 380 விதமான பொருள்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு இந்தியா பரிந்துரைத்திருந்தது. 
 • இந்தப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியை சீனா அளித்துவிட்டால், அந்நாட்டுடன் உள்ள வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கலாம் என்று இந்தியா திட்டமிட்டு வருகிறது.
 • இந்தியா-சீனா இடையே கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி வரை ரூ. 3.5லட்சம் கோடி அளவில் மட்டுமே வர்த்தகம் நடைபெற்றுள்ளது. அதுமட்டுமன்றி, வரி சாராத கட்டுப்பாட்டுகள் மூலம் இந்தியப் பொருள்களின் ஏற்றமதியை சீனா குறைத்து வருகிறது.
அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: ஈரான் கெடு: ஐரோப்பிய நாடுகள் நிராகரிப்பு
 • அணுசக்தி ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதியை 60 நாள்களுக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் விதித்த கெடுவை அந்த நாடுகள் நிராகரித்தன.
 • ருமேனியாவின் சீபுயு நகரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
 • வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்டுள்ள அணுசக்தி ஒப்பந்தத்தின் அம்சங்களை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் என்று ஈரானை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான எந்த நடவடிக்கைகளையும் ஈரான் மேற்கொள்ளக் கூடாது.
 • அணு ஆயுதத் தயாரிப்பைத் தவிர்ப்பதற்கான உறுதிப்பாட்டை ஈரான் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். மற்றபடி இந்த விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு ஈரான் விதித்துள்ள 60 நாள் கெடு போன்ற எந்த நிபந்தனைகளையும் நாங்கள் ஏற்கமாட்டோம் என்று அந்த கூட்டறிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆன்லைன் பொய் செய்திகளை குற்றமாக்கும் சட்டம் சிங்கப்பூரில் நிறைவேற்றம்
 • ஆன்லைனில் தவறான செய்திகளைப் பதிவிடுவதை குற்றம் என்று அறிவித்து, அவற்றை நீக்குவதற்கு அல்லது தடைசெய்வதற்கு, அரசுக்கு அதிகாரமளிக்கும் வகையிலான சட்டம், சிங்கப்பூரில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 • ஆன்லைன் செய்தி மோசடிகளை தடுப்பதற்கான இந்த சட்டம், 72-9 ஆகிய வாக்குகள் வித்தியாசத்தில், மே 8ம் தேதி இரவு நிறைவேற்றப்பட்டதாய் கூறப்படுகிறது.
 • இதன்மூலம் சிங்கப்பூருக்கு கேடு விளைவிக்கும் மற்றும் தேர்தலில் தாக்கம் உண்டாக்கும் என நம்பப்படும் செய்திகளை அகற்ற அல்லது தடைசெய்ய, சேவை வழங்குநர்களின் உதவி நாடப்படும்.
 • இந்த சட்டத்தின்படி, சம்பந்தப்பட்ட குற்றமிழைத்தவர்கள், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், பெருந்தொகை அபராதமும் விதிக்கப்படுவார்கள்.
ஈரானின் உலோக ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை
 • 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளில், தங்களிடம் உள்ள மிகுதியான யுரேனியத்தை விற்க வேண்டும் என்பதை நிறுத்தப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி அறிவித்தார்.
 • இதற்கு பதிலடி அளிக்கும் வகையில் அமெரிக்கா ஈரானின் உலோகப் பொருட்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதில் இரும்பு, அலுமினியம் போன்றவை அடங்கும்.
 • பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளும் அணு ஆயுத ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகளை மீற வேண்டாம் என்று எச்சரித்துள்ளன.
மிகவும் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிப்பு
 • எகிப்தில் 4,500 ஆண்டுகள் பழமையான கல்லறை தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோ அருகே உள்ள கீசா பீடபூமியின் தெற்கு பகுதியில் அந்நாட்டு தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
 • மேலும் இந்த பழமையான கல்லறை தோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டிகள், சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்ட ஒரே குடும்பத்தின் சிலைகள் மற்றும் விலங்குகள் உருவம் ஆகியவை கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment